பயிர்களிலும் மற்ற உயிரினங்களிலும் மரபணு மாற்றங்களைச் செய்வது பொதுமக்களின் உடல்நலத்தையும் சுற்றுச்சூழலையும் ஆபத்திற்குள்ளாக்கும் வாய்ப்பு இருக்கிறது,
ஆனால் அதற்கும் மேலாக, ஒழுக்கம் மற்றும் நெறிமுறை சார்ந்த விஷயங்களை கேள்விக்கிடமாக்குகிறது என சிலர் கருதுகின்றனர்.
“கிரகத்தையே மாற்றிவிட, உயிரின் இயற்கையையே மாற்றிவிட இந்த மரபணு தொழில்நுட்பம் மனிதனுக்கு ஒரு வாய்ப்பை அளிக்கிறது.”
“எப்போது நீங்கள் உயிரியலிலுள்ள எல்லைகளையெல்லாம் தாண்டுகிறீர்களோ, அப்போது எல்லா உயிரினத்தையும், எப்படி வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளக்கூடிய வெறும் தகவல்களடங்கிய மரபணுக்களாகவே பார்ப்பீர்கள்.
அவ்வாறு இருந்தால் இயற்கையுடன் நமக்கிருக்கும் தொடர்பை மட்டுமல்ல ஆனால் அதை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதைப் பற்றிய நம்முடைய கருத்தையும் மாற்றிவிடும்.
“உயிரை மதிக்கிறோமா அல்லது வெறும் இயந்திரத்தைப் போல் உபயோகிக்கிறோமா? வருங்கால சந்ததிக்கான நம்முடைய கடமை என்ன? நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த உலகத்திலுள்ள மற்ற உயிரினங்களிடம் நமக்கிருக்கும் பொறுப்பை நாம் எவ்வாறு கருதுகிறோம்?”
கொஞ்சம்கூட சம்பந்தமே இல்லாத உயிரினங்களிடையே இவ்வாறு மரபணுக்களை மாற்றுவது “கடவுளுக்கு சொந்தமான, கடவுளுக்கு மட்டுமே சொந்தமான அதிகாரத்தில் நாம் தலையிடுவதாகும்”
கடவுள்தான் “ஜீவஊற்று” என பைபிள் மாணாக்கர்கள் உறுதியாக நம்புகின்றனர்.(சங்கீதம் 36:9) இருப்பினும், நம் கிரகத்தில் வாழ்ந்துவந்துள்ள கோடிக்கணக்கானோருக்கு அதிக உதவிகளை செய்துள்ள முறையான, மிருகங்களிலும் செடிகளிலும் தெரிந்தெடுத்து சேர்த்து இனப்பெருக்கம் செய்யும் முறையை கடவுள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
இந்த நவீன உயிரியல் தொழில்நுட்பம் மனிதர்களையும் சுற்றுச்சூழலையும் பாதிக்குமா என்பதை காலமே பதில் சொல்லும்.
ஆனால் அவ்வாறு உண்மையிலேயே இந்த உயிரியல் தொழில்நுட்பம் “கடவுளுக்கு சொந்தமான அதிகாரத்தை” அபகரிக்க முயற்சித்தால், அப்போது மனிதர்கள்மீது கடவுளுக்கிருக்கும் அன்பு மற்றும் அக்கறையின் காரணமாக இப்படிப்பட்ட முன்னேற்றங்களை தலைகீழாகக்கூட அவரால் மாற்றக்கூடும்.
*ஆபத்தாகும் சாத்தியங்கள்*
உயிரியத் தொழில்நுட்பம், கொஞ்ச காலத்திலேயே மின்னல் வேகத்தில் முன்னேறியிருக்கிறது. அதனால் சட்டத்தாலோ, கட்டுப்படுத்தும் நிறுவனங்களாலோ இதற்கு ஈடுகொடுக்க முடியவில்லை.
அதுமட்டுமல்ல இப்படிப்பட்ட தொழில்நுட்பத்தால் என்ன பின்விளைவுகள் வரும் என்பதை ஆராய்ச்சியாளர்களால் முன்கூட்டியே அறிந்து, அவற்றை தடுக்கவும் முடியவில்லை.
விவசாயிகளின் பொருளாதார நலிவு, சுற்றுச்சூழல் நாசம், மனிதர்களின் உடல்நலக் கேடு போன்ற எதிர்பாராத பின்விளைவுகளை இது ஏற்படுத்தலாம் என்பதே அநேகரின் ஒருமித்த கருத்து.
மரபணு விதை உணவில் எந்த ஆபத்துமில்லை என நிரூபிப்பதற்கு எந்த ஒரு பெரிய அளவிலான, நீண்ட காலத்திற்குரிய ஆராய்ச்சியும் இல்லை என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.
அவ்வாறு ஆபத்துகளை ஏற்படுத்த சாத்தியங்கள் இருக்கும் சில குறிப்புகளை கவனியுங்கள்:
● அலர்ஜி. உதாரணமாக, ஏதாவது அலர்ஜிக்கு வழிநடத்தும் புரதத்தை உண்டாக்கும் ஒருவகை ஜீன், தானியத்தில் மாற்றப்பட்டிருப்பதாக வைத்துக்கொள்ளுங்கள். ஒருசில உணவுவகை ஒத்துக்கொள்ளாததால் அலர்ஜியில் அவதிப்படும் ஒருவர் அதை சாப்பிட்டால் அவருடைய உயிருக்கே அது ஆபத்தை விளைவிக்கலாம். அவ்வாறு மாற்றீடு செய்யப்பட்ட உணவுவகையில் அலர்ஜி ஏற்படுத்தும் புரதம் ஏதும் இருந்தால், உணவு கட்டுப்பாட்டு நிறுவனங்களுக்கு அதை அறிவிக்க வேண்டும் என்பது என்னவோ உண்மைதான், ஆனால் சில மறைமுகமான அலர்ஜென்கள் சோதனைகளை எல்லாம் ஏமாற்றிவிட்டு உணவில் கலந்துவிடலாம் என்று சில ஆராய்ச்சியாளர்கள் பயப்படுகின்றனர்.
● நச்சுத்தன்மை அதிகரிப்பு.இயற்கையாகவே சில செடிகளிலிருக்கும் நச்சுத்தன்மையை இந்த மரபணு மாற்றம் ஏதிர்பாராதவிதமாக அதிகரிக்கச் செய்துவிடலாம் என சில வல்லுநர்கள் நம்புகின்றனர். ஒரு ஜீன் செடிக்குள் செலுத்தப்பட்ட பிறகு, அது நல்ல விளைவுகளை ஏற்படுத்துவதோடுகூட, இயற்கையான நச்சை அதிகரிக்கவும் செய்யக்கூடும்.
●நோய் எதிர்ப்பு சக்திக்கு எதிர்ப்பு.தாவரங்களில் மரபணு மாற்றத்தின் ஒரு பாகமாக, தாங்கள் விரும்பிய ஜீன் வெற்றிகரமாக சென்று செயல்படுகிறதா என உறுதிப்படுத்திக்கொள்வதற்காக மார்க்கர் ஜீன் என அழைக்கப்படுவதை விஞ்ஞானிகள் பயன்படுத்துகின்றனர். இந்த மார்க்கர் ஜீன்களுள் பெரும்பாலானவை நுண்ணுயிர்க் கொல்லிகளை எதிர்க்கும் சக்தியை அளிப்பதால், நுண்ணுயிர் கொல்லியை எதிர்க்கும் திறன் என்ற நாளுக்குநாள் அதிகரித்துவரும் பிரச்சினைக்கு இதுவும் ஒரு முக்கியமான காரணமாக ஆகிவிடும் என சிலர் பயப்படுகின்றனர். இருப்பினும், இப்படிப்பட்ட மார்க்கர் ஜீன்கள் உயிரியலில் பயன்படுத்துவதற்கு முன்பே சேதமடைந்தவை, அதனால் இதில் ஆபத்து அதிகம் இல்லை என மற்ற சில விஞ்ஞானிகள் வாதிடுகின்றனர்.
●“சூப்பர் களைகளின்” அதிகரிப்பு.இருப்பதிலேயே அதிக பயத்திற்குரிய விஷயம் என்னவெனில், இவை மாற்றீடு செய்யப்பட்ட பிறகு, விதைகள் மற்றும் மகரந்தத்தின் மூலமாக ஜீன்கள் வெளியேறுகின்றன. இவை தன் இனத்தைச் சேர்ந்த மற்ற களைகளை சென்றடைகின்றன. இதனால் அவை “சூப்பர் களைகள்” உண்டாக்குகின்றன. இவை, களைக்கொல்லிகளை எதிர்க்கக்கூடும்.
● மற்ற உயிரினங்களுக்கு ஆபத்து. மரபணு மாற்று விதையில் முறையில் வளர்க்கப்பட்ட தானியங்களின் மகரந்தம் படிந்திருந்த இலைகளை சாப்பிட்ட மோனார்க் வண்ணத்துப்பூச்சியின் கம்பளிப் புழுக்கள், வியாதிப்பட்டு இறந்துவிட்டன என கோர்னெல் பல்கலைக்கழகத்திலிருந்து ஆராய்ச்சியாளர்கள் மே 1999-ம் தேதி அறிக்கை செய்தனர். இந்த ஆராய்ச்சியின் உண்மைகளை நம்பாத அநேகர் இருக்கின்றனர். ஆனால் இதுவரை சோதனை செய்யப்படாத மற்ற உயிரின வகைகளை இது பாதிக்கலாம் என்று சிலர் கருதுகின்றனர்.
● பாதுகாப்பான பூச்சிக்கொல்லிகளுக்கு முடிவு. அதிக வெற்றிகளைக் கண்டுள்ள மரபணு தாவரங்களில், பூச்சிகளை துரத்துவதற்கான ஒருவித புரத நச்சுடைய ஜீனைக்கொண்ட தாவரங்களும் சில இருக்கின்றன. எப்படியிருந்தாலும், தீங்கான பூச்சிகளை இப்படிப்பட்ட ஜீன்கள் தயாரிக்கும் நச்சுக்கு முன்பாக கொண்டுவருவதால் அந்த பூச்சிகள் உறுதித்தன்மையை வளர்த்துக்கொள்ள உதவி செய்து, பூச்சிக்கொல்லியை உபயோகமற்றதாக ஆக்கிவிடும் என உயிரியல் நிபுணர்கள் எச்சரித்திருக்கின்றனர்.
சிந்திப்போம்...
நம் வாழ்க்கை ஒரு வரம் அதை நாம் வீணாக்க கூடாது
உண்ணும் உணவில் முற்றிலும் இயற்கை முறை இல்லை என்றாலும் உங்களால் முடிந்த அளவு இயற்கை உணவை உண்ண முயற்சி எடுங்கள்..
உண்ணும் உணவில் முற்றிலும் இயற்கை முறை இல்லை என்றாலும் உங்களால் முடிந்த அளவு இயற்கை உணவை உண்ண முயற்சி எடுங்கள்..
இதற்க்கு தீர்வு நீங்களாக இயற்கை வீட்டுத்தோட்டம் மாடித்தோட்டம் அமைத்து இயற்கை
காய் கீரைகளை பயிர் செய்து உண்ணுவது தான்.
காய் கீரைகளை பயிர் செய்து உண்ணுவது தான்.
தோட்டத்தில் நமது பராம்பரிய விதைகளை மட்டும் பயிர் செய்வும்.
இயற்கை தோட்டம் பற்றிய ஆலோசனை க்கும்...
பாரம்பரிய நாட்டு விதைகள் வேண்டுமென்றால் தொடர்பு கொள்ளவும்.
உங்கள் இல்லங்களில் நடைபெறும் சுபகாரியங்களுக்கு நமது பாரம்பரிய விதையை பரிசாக கொடுங்கள் நிறைய மக்களுக்கு சென்றடைய வசதியாக இருக்கும்.
நன்றி
ஏஞ்சல் இயற்கை மாடித்தோட்டம்
கோயமுத்தூர்
9578419307
(வாட்ஸ்ஆப்)
கோயமுத்தூர்
9578419307
(வாட்ஸ்ஆப்)

No comments:
Post a Comment