Thursday, 15 March 2018

குடமிளகாய் சட்னி

குடமிளகாய் சட்னி



தேவையானவை:

குடமிளகாய் பெரியது – ஒன்று,
சின்ன வெங்காயம் – 100 கிராம்,
பச்சை மிளகாய் – 5(அல்லது தேவைக்கேற்ப), தக்காளி சிறியது – ஒன்று அல்லது இரண்டு,
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்,
புளி – சிறிய நெல்லிக்காய் அளவு,
கடுகு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை, உளுத்தம்பருப்பு – தாளிக்க தேவையான அளவு, நல்லெண்ணெய் – ஒரு சிறிய குழிக்கரண்டி, உப்பு – தேவையான அளவு.
செய்முறை: குடமிளகாயை சதுரமாக வெட்டிக் கொள்ளவும். சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளியை பொடியாக நறுக்கவும். புளியை கெட்டியாக கரைத்துக் கொள்ளவும். அடுப்பில் அடி கனமான கடாயை வைத்து நல்லெண்ªணய் ஊற்றி, காய்ந்ததும், கடுகு சேர்த்து, வெடித்ததும் உளுத்தம்பருப்பு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை போட்டு, அதன்பின் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு அதில் குடமிளகாய், நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். சிறிது நேரம் வதக்கிய பின் தக்காளி சேர்த்து, மஞ்சள்தூள், உப்பு போட்டு வதக்கி, பின்னர் புளிக் கரைசலை சேர்த்து… எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்கு வதக்கி இறக்கவும்.
இந்த சட்டினியை உப்புமா, பொங்கல், தயிர் சாதம், வெறும் சாதத்துடன் சேர்த்துசாப்பிடலாம்.
குடமிளகாயில் என்னென்ன சத்துக்கள் இருக்கிறது என்பதனைப் பார்ப்போம்..
தக்காளி, குடைமிளகாய், எலுமிச்சை ஆகியவற்றில் வைட்டமின் 'சி' (C) சத்து அதிகமுள்ளது. இவற்றை சமைக்கும்போது தண்ணீர் அதிகம் சேர்க்கக்கூடாது. அதிகச்சூட்டில் சமைக்கக் கூடாது.
உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் குடமிளகாயை உணவில் சேர்த்து வர நல்ல பலனளிக்கும். குடமிளகாயில் கொழுப்புச் சத்து, கொலஸ்ட்ரால்,சோடியம் ஆகியன குறைவாகவே இருப்பதால் உடல் எடையைக் குறைக்க உதவும்.
குடமிளகாயில் உள்ள விட்டமின் ஏ,சி,ஈ,பி6 போன்ற சத்துக்கள் ஆரோக்கியமான தேகத்தைக் கொடுக்கும்.
கண்பார்வையைச் சிறப்பாக்கவும், இளமையிலேயே கண் தொடர்பான பிரச்சினைகளை அண்டவிடாமலும் குடமிளகாய் காக்கிறது என்பதைச் சமீபத்திய மருத்துவ ஆராய்ச்சி தெரிவிக்கிறது.
குடமிளகாயைச் சமைக்கும் முன் நன்கு அலம்ப வேண்டும்.
குடமிளகாயைத் துச்சமாக எண்ணாமல் அதன் பலன்களைக் கருத்தில் கொண்டு பயன்படுத்துவது ஆரோக்கியமான வாழ்விற்கு நல்லது

No comments:

Post a Comment