Saturday, 31 March 2018

குழந்தைகள் பராமரிப்பு






தகுந்த காலங்களில், தடுப்பூசி போடாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு ஆளாகின்றனர். அதனால், பெற்றோர், குழந்தைக்கான தடுப்பூசிகளிலும் அக்கறை செலுத்த வேண்டும். வெயில் காலங்களில், ஈரத்தன்மையுள்ள பொருட்களில், கிருமிகள் மிக வேகமாக வளரும் என்பதால், பழம், காய்கறி நறுக்கிய கத்திகள், சமைக்கும் பாத்திரங்களை, ஒவ்வொரு முறையும் சுத்தம் செய்து பயன்படுத்த வேண்டும். 
வெயில் தாக்கம் அதிகமாக இருக்கும் நேரங்களில், குழந்தைகளை வெளியில் விளையாடுவதை தடுத்து, கேரம், செஸ், போன்ற விளையாட்டுக்களை, வீட்டில் அமர்ந்து விளையாடச் சொல்லலாம். வேர்க்குருவை தவிர்க்க, ஒரு நாளில் இருமுறை குளிப்பதும், விளையாடியபின், கை கால்களை நன்கு சோப்பு போட்டு கழுவுவதும், உடல் தூய்மையை அதிகரித்து, நோய் தாக்கத்தை குறைக்கிறது.
வெளியில் செல்லும்போதோ அல்லது விளையாடும்போதோ, தலையில் தொப்பியும், குழந்தைகளின் கண்களைப் பாதுகாக்க, கண் கண்ணாடி (வெப்பத் தடுப்பு) அணியச் செய்வதும் அவசியம். வெயில் காலங்களில், குறிப்பாக, ஆண் குழந்தைகளுக்கு சிறுநீர் கடுப்பு நோய் ஏற்பட வாய்ப்புண்டு. காரணம், விளையாடும் குஷியில், சிறுநீர் கழிக்கக் கூட மறந்து விடுவர். அதனால், அவர்களை இந்த விஷயத்திலும் கண்காணிக்க வேண்டியது பெற்றோரின் கடமை.
உணவுகளை குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்து, பின், அதை எடுத்து பயன்படுத்தும் பழக்கம் உள்ளவர்களாக இருந்தால், அந்த உணவு வகைகளை நன்றாக சூடாக்கி பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கும், வயிற்றுக்கும் நல்லது. இதனால், வயிற்றுப்போக்கு பிரச்னைகளை தடுக்கலாம். அதுவும், வெயில் காலத்தில் வயிற்றுப் போக்கு பிரச்னைகள் வந்துவிட்டால், குழந்தைகளின் உடம்பில், நீர்ச்சத்து குறைந்து, விரைவில் சோர்ந்து விடுவர்.
வெளியில் செல்லும் போது, வணிக நோக்கத்தை மையமாகக் கொண்ட சுகாதாரமற்ற முறையில் இருக்கும் சில கடைகளை தவிர்த்து, எலுமிச்சை ஜூசை வீட்டிலேயே தயாரித்து எடுத்துச் செல்வது நல்லது. தண்ணீரை, மாற்றி மாற்றி குடிப்பதால் ஏற்படும் தொண்டை சம்பந்தப்பட்ட நோய்களை தவிர்க்கலாம்.
வெயில் காலத்தில், குழந்தைகள் அணியும் ஆடைக்கும் முக்கியத்துவம் தந்து, அரிப்பு ஏற்படுத்தாத, வியர்வையை உறிஞ்சக்கூடிய பருத்தி ஆடைகளை அணிவிக்கலாம். சாதாரண பவுடர்களுக்கு பதில், வேர்க்குருவைத் தடுக்கும் பவுடர்களை குழந்தைகளுக்குப் பயன்படுத்துவது நல்லது

Thursday, 29 March 2018

மாம்பழத்தின் மருத்துவ குணங்கள்


மாம்பழத்தின் மருத்துவ குணங்கள்




மாம்பழத்தின் மருத்துவ குணங்கள்
மாம்பழம் என்றாலே நாவில் நீர் ஊறாதவர்கள் யாராவது உண்டா? முக்கனியில் முதன்மையான மாம்பழத்தின் மருத்துவ குணங்களை பற்றி பார்க்கலாம்.

மாம்பழம் என்றாலே நாவில் நீர் ஊறாதவர்கள் யாராவது உண்டா? முக்கனியில் முதன்மையானதும் தேன் சுவை ஊட்டுவதும் மாங்கனியே.

இந்தியாவில் ஆந்திரா, தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் மாம்பழம் அதிகம் விளைகிறது.

சுமார் 1,000 மாம்பழ ரகங்கள் உள்ளன. அல்போன்சா, ருமானியா, மல்கோவா, செந்தூரம், லங்கடா, தசேரி போன்ற ரகங்கள் அதிகம் விளைகின்றன.

*🔻மாம்பழத்தின் மருத்துவ குணங்கள் விவரம் வருமாறு

* மாம்பழம் புற்றுநோய், குடல் இறக்கம், இருதய நோய், மூலம் போன்ற நோய்களுக்கு சிறந்த மருந்து.

* மாம்பழம் சாப்பிட்டால் மலச்சிக்கல் நீங்கும், நல்ல தூக்கம் வரும்.

* நரம்பு தளர்ச்சியை போக்கும்.

* மாம்பழச்சாறு பித்தம், மயக்கம், தலைவலியை தீர்க்கும்.

* மாம்பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நினைவாற்றல் பெருகும்.

* ரத்தஓட்டம் சீராகும், கர்ப்ப கோளாறுகளை நிவர்த்தி செய்யும்.

* தோல் அரிப்பு மற்றும் தோல் நோய்களை தீர்க்கும்.

பெண்களுக்கு ஏற்படும் அவஸ்தைகள்


பெண்களுக்கு ஏற்படும் அவஸ்தைகள்


மாதந்தோறும் மாதவிலக்கு தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு பெண்களுக்கு மன, உடல் அவஸ்தைகள் ஏற்படும். அதனை 'பி.எம்.எஸ்' (ப்ரீ மென்ஸ்ட்டுரல் சிண்ட்ரோம்) என்பார்கள். உடல் வீக்கம், மார்புகள் கனமாகி வலித்தல், தூக்கமின்மை, கோபம், எரிச்சல் போன்றவை பி.எம்.எஸ். அறிகுறிகளாகும்.

இந்த 'பி.எம்.எஸ்.' பிரச்சினைகள் பற்றி தொடர்ந்து ஆய்வுகள் செய்து வந்த மருத்துவ விஞ்ஞானிகள், அதில் அதிகபட்ச பாதிப்பு ஏற்படுவதற்கு 'பி.எம்.டி.டி' (ப்ரீ மென்ஸ்ட்டுரல் டிஸ்மோர்பிக் டிசார்டர்) என்று பெயரிட்டிருக்கிறார்கள். இது கொஞ்சம் ஆபத்தும் கலந்தது. இந்த பாதிப்பு ஏற்படும் பெண்கள், வெளிநாடுகளில் கணவரை அடித்து உதைத்து விடுகிறார்கள். இங்குள்ள பெண்கள் கணவரோடு அதிகபட்ச வாக்குவாதத்தில் ஈடுபடுவது, குழந்தைகளுக்கு சூடு போடுவது, பக்கத்து வீட்டினரோடு சண்டை போடுவது போன்றவைகளில் ஈடுபடலாம்.

இதன் தொடர்ச்சியான பாதிப்புகள் சமூகத்திலும் எதிரொலிக்கும். இதில் அதிகபட்ச கொடூரம் என்னவென்றால், இந்த பி.எம்.டி.டி. பாதிப்பின் காலகட்டத்தில் தான் பெண்கள் தற்கொலை போன்ற முடிவுகளை எடுக்கிறார்கள், வன்முறை செயல்களிலும் ஈடுபடுகிறார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இயல்பாகவே மாத விலக்குக்கு ஒரு சில நாட்களுக்கு முன்பு பெண்களுக்கு பல்வேறு அவஸ்தைகள் ஏற்படுவதுண்டு. கூடுதலாக மனஅழுத்தம், கூச்சல் போட்டு கத்தும் மனநிலை, அடுத்து என்ன செய்வது என்ற எண்ணமே இல்லாமல் இருப்பது, பொது நிகழ்ச்சிகளில் பங்கு பெறத் தயங்கி வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடத்தல், அதிகமான சோர்வு போன்றவைகளும் இருந்தால் அவை பி.எம்.டி.டி. பாதிப்பிற்கு கொண்டு சென்று விடுகிறது. அப்போது கணவரோடு தாம்பத்ய வாழ்க்கையில் ஆர்வமின்மையும், எரிச்சலும் ஏற்படலாம்.

வேலை பார்க்கும் இடங்களில் கவனமின்மை வெளிப்படையாகத் தெரியும். குழந்தைகளிடம் அலட்சியம் தோன்றும். மாணவிகளாக இருந்தால் படிப்பில் பின்தங்குவார்கள். தனிமையை நாடுதல், தற்கொலையைப் பற்றி சிந்தித்தல் போன்றவை ஏற்படலாம். மாதவிலக்கு காலத்தில் இதுபோன்ற அறிகுறிகள் தோன்றினால் உடனடியாக டாக்டரை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது. இந்த அறிகுறிகள் மாதவிலக்கு முடிந்த 14-ம் நாளில் தொடங்கி, அடுத்த மாதவிலக்குக்கு ஐந்து நாட்களுக்கு முன்பு மிகவும் அதிகரித்து, மாதவிலக்கு முடிந்த பிறகு ஐந்து நாட்கள் வரை நீடிக்கும்.

கோபம் தொடர்ந்து நீடித்தல்.
வேலையிலும், மற்றவர்களோடு பழகுவதிலும் கவனம் செலுத்தாமல் இருப்பது.
சின்னச் சின்ன விஷயங்களையும் பெரிய அளவில் விவாதங்களாக்கி விடுதல்.
காரணமில்லாமல் அழுதல்.
தன்னால் எதுவுமே முடியாது என்று தன்னம்பிக்கை குறைதல்.
மற்றவர்களை தன்பக்கம் ஈர்க்கத் தெரியாமல் தடுமாறுதல்.
கடுமையான சோர்வு.
உறக்கம் இல்லாமல் போதல் அல்லது மிகவும் அதிகரித்தல்.
பசியில்லாமல் போதல் அல்லது மிகவும் அதிகரித்தல்.
இதர அறிகுறிகள்
சிலருக்கு மாதவிலக்கு முடிந்த பிறகும் இந்த அறிகுறிகள் தொடரும். அப்படி தொடர்ந்தால் அவர்களுக்கு ஏற்கனவே மனஅழுத்த நோய் இருக்கும் என்றும் புரிந்து கொள்ளலாம்.

பெண்களில் 30 சதவீதம் பேருக்கு பி.எம்.எஸ். பிரச்சினை இருந்தால் அவர்களில் 4 சதவீதம் பேருக்கு அதன் தாக்கம் அதிகரித்து பி.எம்.டி.டி.யாக மாறும். ஒரு பெண் அளவிற்கு அதிகமாக கோபம் கொண்டால் அதற்கு அவளது உடல் ரீதியான சில மாற்றங்களும் காரணமாக இருக்கும். அவளது உடலில் ஏற்படும் ஹார்மோன் வித்தியாசங்களால் உடலில் இருக்கும் 'சிரோட்டோத்தின்' அளவு குறையும். இந்த குறைபாட்டிற்கு கோபத்தை தூண்டிக்கொண்டே இருக்கும் ஆற்றல் உண்டு.

கட்டுப்படுத்தும் சிகிச்சைகள்
ஏரோபிக் உடற்பயிற்சிகள், யோகா, தியானம் போன்றவை ஓரளவு பலன் தரும். பெரும்பாலானவர்களுக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படும். பி.எம்.டி.டி. பாதிப்புகள் உருவாக ஹார்மோன் சமச்சீரற்றதன்மை தான் காரணம் என்பதால், அந்த ஹார்மோனை மையப்படுத்தியே சிகிச்சைகளும் கொடுக்கப்படுகின்றன. சிலருக்கு, மாதவிலக்கு தொடங்கிய 14 நாளில் இருந்து மாதவிலக்கு முடிந்த ஒன்றிரண்டு நாட்கள் வரை மருந்து சாப்பிட வேண்டியதிருக்கும். சிலருக்கு எல்லா நாட்களும் மருந்து சாப்பிட வேண்டிய நிலை ஏற்படலாம்.

பெண்கள் தங்களுக்கு பி.எம்.டி.டி. பாதிப்பு தான் ஏற்பட்டிருக்கிறது என்பதை கண்டறிந்து விட்டால் இதற்கான சிகிச்சைகள் எளிது. அதுபோல் ஆண்களும், சமூகமும் பெண்களுக்கு இப்படி ஒரு பாதிப்பு இருக்கிறது என்பதை உணர்ந்து, அதற்கு தக்கபடி பெண்களிடம் நடந்து கொள்ள வேண்டும்.

தாய்ப்பால் அதிகம் சுரக்க


தாய்ப்பால் அதிகம் சுரக்க 




1. வெந்தயம்
வெந்தயம் பெண்களுக்கு உற்ற தோழி என்று கூறினால் மிகையாகாது. வெந்தயம் பெண்களின் மாதவிடாய் பிரச்சனை முதல் பால் சுரப்பு பிரச்சனை என அனைத்திற்கும் உதவியாக உள்ளது.
வெந்தயத்தை பாலில் போட்டு நன்றாக காய்ச்சி சிறிது சர்க்கரை கலந்து பாயாசம் போல செய்து குடித்து வந்தால் தாய்ப்பால் அதிகரிக்கும். மேலும், சாதம் வடித்த கஞ்சியில் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சிக் கொடுக்க தாய்ப்பால் சுரக்கும்.


2. பேரிச்சம் பழம் பேரிச்சையில் அதிகளவு இரும்புச் சத்து உள்ளது. 100 கிராம் பே‌ரிச்சையில் 0.90 மில்லிகிராம் இரும்பு‌ச் ச‌த்து உள்ளது. இது இரத்தம் அதிகரிக்க உதவியாக உள்ளது. மேலும் இதில் வைட்டமின் ஏ, ஆன்டி ஆக்ஸிடென்ட், பொட்டாசியம் போன்றவை உள்ளன.
பேரிச்சம்பழத்தை குழந்தை பிறப்பதற்கு முன்னும், பிறந்த பின்னும் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் பெருகும். குழந்தையும் நன்கு வளரும். குழந்தைப் பிறப்பதற்கு முன்பும் பின்பும் பேரிச்சம் பழம் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்.


3. வெற்றிலை
வெற்றிலையின் பயன்கள் பற்றி நமக்கு அதிகமாக தெரியாது. இந்த வெற்றியிலையில் அதிக மருத்துவ குணங்கள் உள்ளன. இந்த வெற்றிலைகளை நெருப்பில் காட்டி மார்பகங்களில் வைத்துக் கட்ட தாய்ப்பால் சுரக்கும்


4. பாகற்காய்
கொடி வகையைச் சேர்ந்த பாகற்காய், கொம்பு பாகற்காய், மிதி பாகற்காய் என இரண்டு வகைப்படும். இதன் சுவை என்னவோ கசப்பாக இருந்தாலும், எண்ணற்ற மருத்துவ குணங்கள், இந்த காயில் அடங்கியுள்ளது. பாகற்காயின் இலையை அரைத்து மார்பகங்களில் பற்றுப் போட்டு வந்தால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும்.
மேலும் பாகற்காயை உணவில் சேர்த்தால், இது பல நோய்களை போக்கும் தன்மை கொண்டது. குடற்புழுக்களை போக்க பாகற்காயை உண்ணலாம். இது சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு மிகவும் சிறந்தது.


5. ஆலம் விழுது :
ஆலம் விழுதும், ஆலம் விதையும் சமன் அளவு பாலில் காய்ச்சி உண்டால், தாய்பாலில்லாத பெண்களுக்கு தாய்ப்பால் அதிகம் உற்பத்தியாகும்.


6. அருகம்புல் சாறு
அருகம்புல் சாறுடன் தேனை கலந்து பருகி வந்தால் தாய்ப்பால் அதிகரிக்கும். இது இரத்த சோகையை நீங்கி, இரத்தத்தை அதிகரிக்கும். கர்ப்பப்பை கோளாறுகளை நீக்க இது உதவுகிறது. வயிற்றுப் புண்களை நீக்கவும் இது உதவியாக இருக்கும்.


7. நட்ஸ்!
பாலூட்டும் பெண்கள் பாதாம் சாப்பிடுவது மிகச்சிறந்தது. பாதாம், வால்நட்ஸ், வேர்க்கடலை ஆகியவை பாலூட்டும் பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. இது அதிக அளவு ஊட்டச்சத்துகளையும், புரோட்டின் மற்றும் கால்சியத்தையும் தருகிறது.


8. நிலப்பூசணி
தாய்ப்பாலை அதிகரிக்க, நிலப்பூசணிச் சாறுடன் மல்லி, வெந்தயம், சீரகம் நாட்டுச்சர்க்கரை போன்றவற்றை கலந்து சாப்பிட வேண்டும்.


9. பூண்டு
பூண்டை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வதால் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கலாம். அதிகம் பூண்டு சேர்த்து தயாரிக்கப்பட்ட சூப் மிதமான சூட்டுடன் அருந்தி வந்தால் பால் சுரப்பு நன்றாக இருக்கும்.


10. கேழ்வரகு
கேழ்வரகை முளைக்கட்டி இடித்து கஞ்சியாகச் குடிக்க வேண்டும். இதில் முளைகட்டிய வெந்தயப் பொடியை சேர்த்து குடித்தால் பால் சுரப்பு அதிகரிக்கும்.


11. பால்
பால் அதிகளவு சத்துக்களை கொண்டுள்ளது. பிரசவித்த பெண்கள் தினமும் 5 அல்லது 6 கப் பால் குடித்தால் குழந்தைகளுக்கு அதிக அளவு தாய்ப்பால் கிடைக்கும்.


12. பால் சுறா
அசைவ உணவு சாப்பிடுபவராக இருந்தால், நீங்கள் கடலில் கிடைக்கும் பால்சுறா மீனுடன் பூண்டு சேர்த்து புட்டு போல் உண்டால் பால் சுரப்பு அதிகமாகும்.


13. முருங்கை கீரை
முருங்கை கீரையில் அதிகளவு இரும்புச்சத்து உள்ளது. முருங்கை கீரையை அடிக்கடி உணவுடன் சேர்த்து கொண்டால் தாய்ப்பால் அதிகரிக்கும்.


14. காட்டாமணக்கு இலை
காட்டாமணக்கு இலையை வதக்கி மார்பில் வைத்துக் கட்டிகொண்டால் தாய்பால் அதிகம் சுரக்கும். இந்த இலை கிராமப் பகுதிகளில் அதிகளவில் கிடைக்கும்.


15. கோவை இலை
கோவை இலையை வெள்ளைப் பூண்டுடன் நெய்யில் வதக்கி தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் பெருகும். கோவை இலையும் கிராமப் புறங்களில் அதிகளவில் கிடைக்கும். இந்த கொடியானது முற்களின் மீது கூட படர்ந்து காணப்படும்.


16. பாசிப்பருப்பு
முருங்கை கீரையை லேசாக தண்ணீர் விட்டு வேகவைத்து அதை தாளித்து சாப்பிட்டால் தாய்பால் அதிகரிக்கும். முருங்கை இலையும் பாசிபருப்பும் சேர்த்து சாப்பிட்டால் தாய் பால் அதிகம் சுரக்கும்.

fresh garlic isolated on white

17. பூண்டு பால்
தினந்தோறும் இரவில் பாலில் பூண்டு போட்டு காய்ச்சிக் குடி‌த்தால் தாய்ப்பால் பெருகுவதுடன் வயிற்று உப்புசம், பொருமல் எதுவும் வராது. கர்ப்பப்பையில் சேர்ந்துள்ள அழுக்கை அகற்றும் தன்மை பூண்டிற்கு உண்டு.

18. பப்பாளி
பப்பாளி பழங்காலமாக பால் சுரப்பிற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. பப்பாளியை ஜூஸ் ஆகவோ அல்லது அப்படியேவோ சாப்பிடுவதன் மூலமாக பால் சுரப்பு அதிகரிக்கும்.


19. ஒட்ஸ்
நீங்கள் ஓட்ஸ் கஞ்சியை விரும்பி குடிப்பவராக இருந்தால், தாய்ப்பாலை அதிகரிக்க ஓட்ஸ் சாப்பிடலாம். ஓட்ஸ் கொழுப்பு குறைவான ஒன்று. இது தாய்ப்பாலை அதிகரிப்பதற்காக மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.


20. கீரைகள்
உங்களது உணவில் கீரைகளுக்கு முக்கிய இடம் இருக்க வேண்டியது அவசியம். கீரைகள் தாய்ப்பாலை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனவே கீரைகளை மறக்காமல் உங்களது உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.


21. கேரட்
கேரட்டில் அதிகளவு சத்துக்கள் உள்ளன. கேரட்டை நீங்கள் பச்சையாகவோ அல்லது வேக வைத்தோ, சூப் செய்தோ சாப்பிடுவதால் தாய்ப்பால் அதிகரிக்கும்.


22. முருங்கை
முருங்கை கீரையை போலவே முருங்கை காய்க்கும் தாய்ப்பாலை அதிகரிக்கும் தன்மை உள்ளது. இது நோய் எதிர்ப்பு தன்மையை அதிகரிக்க உதவுகிறது. மேலும் நரம்பு மண்டலத்தை காக்கவும் இது உதவியாக உள்ளது.


23. தண்ணீர் மற்றும் ஜூஸ்
தண்ணீர் மற்றும் ஜூஸ் வகைகள் உங்களது உடலில் உள்ள ஈரப்பதத்தை அதிகரிக்கும். உடலுக்கு தேவையான அளவு நீரின் அளவை அதிகரிக்கிறது. இதன் மூலம் இரத்தம் ஓட்டம் சீராகிறது. இது பால் சுரப்பிற்கு உதவியாக இருக்கிறது.


24. பிரவுன் ரைஸ் பிரவுன் ரைஸ்
தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க உதவுகிறது. இது தாய்ப்பால் சுரப்பிற்கான ஹார்மோனை தூண்டி விட்டு தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க செய்கிறது. பிரவுன் ரைஸை நீங்கள் சமைத்து, இதனுடன் சத்தான காய்கறிகள் சேர்த்து சாப்பிடலாம்.


25. முட்டை
முட்டையில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள், விட்டமின் ஏ, விட்டமின் பி2, பி12, ஒமேகா-3, கால்சியம், பாஸ்பரஸ், மினரல்கள் ஆகியவை உள்ளன. இது குழந்தைக்கு தேவையான அளவு புரதச்சத்தை கொடுக்கிறது. முட்டை தாய்ப்பாலின் அளவை மட்டும் அதிகரிக்காமல் தரத்தையும் அதிகரிக்கிறது. நீங்கள் முட்டை சாப்பிடுவதால் உங்களது குழந்தைக்கு அலர்ஜி அதாவது வாந்தி, தடிப்புகள், அசௌகரியம், சுவசப் பிரச்சனை, வாந்தி போன்றவை இருந்தால், நீங்கள் முட்டை சாப்பிடுவதை தவிர்த்து விடவும்.

Tuesday, 27 March 2018

உடல் எடையை அதிகரிக்கும் உலர்திராட்சை


உடல் எடையை அதிகரிக்கும் உலர்திராட்சை



திராட்சையில் 16 சதவிகிதத்துக்கும் குறைவான ஈரப்பதம் உள்ளதையே உலர் திராட்சை என்கிறார்கள். மிகவும் பழைய உலர் திராட்சையை வாங்குவதைவிட நடுத்தரமானதை தேர்ந்தெடுத்து வாங்குவது சிறந்தது.
உலர் திராட்சையில் அதிக அளவு ஆற்றல், ஊட்டச்சத்துக்கள், தாது உப்புக்கள் உள்ளன.மேலும், இதில் பல ஆன்டிஆக்சிடன்ட் மற்றும் நார்ச்சத்து உள்ளதால் மலச்சிக்கல், ரத்தசோகை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கும் தீர்வளிக்கிறது.
சத்துக்கள் - பலன்கள்: இதில் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளது. இது நீரில் கரையாத சுருங்கிய நிலையில் உள்ள நார்ச்சத்து, வயிற்றுக்குள் சென்றதும் நீரை உறிஞ்சிவிடும். இதனால் சிறுகுடலில் தங்கிய உணவுப் பொருட்களை இயற்கையான முறையில் வெளியேற்ற உதவும். நார்ச்சத்தானது வயிற்றில் உள்ள நீர்ச்சத்தை உறிஞ்சுவதால் வயிற்றுப்போக்கு பிரச்னைக்கு இயற்கையான முறையில் தீர்வு அளிக்கிறது.
இதில் அதிகப்படியான ஊட்டச்சத்துக்கள், ஆற்றல் உள்ளதால், உடல் எடை அதிகரிக்க நினைப்பவர்கள் இதை எடுத்துக்கொள்ளலாம். விளையாட்டு வீரர்கள், கட்டுக்கோப்பான உடல் அமைப்பைப் பெற விரும்புகிறவர்களுக்கு இது ஏற்ற உணவுப் பொருள். சிறிது கூட கொலஸ்ட்ரால் இல்லாமல் இது உடனடியாக ஆற்றலை தருவதால், உடல் எடையை அதிகரிக்கச் செய்கிறது.
உலர் திராட்சையானது உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், தாது உப்புக்கள், புரதம் போன்றவற்றைக் கிரகிக்க உதவுகிறது. இதனால் உடலின் ஒட்டு மொத்த ஆற்றல் அதிகரிப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியும் தூண்டப்படுகிறது. இதில் உள்ள பாலிபீனாலிக் ஆன்டிஆக்சிடன்ட் புற்றுநோய் செல்களை எதிர்க்கிறது.
உயர் ரத்த அழுத்தத்தைக் குறைத்து இதயத்தைப் பாதுகாக்கும் தன்மை உலர் திராட்சைக்கு உண்டு. இதில், அதிக அளவில் பொட்டாசியம் தாது உப்பு இருப்பதால், ரத்த குழாய்களில் அழுத்தத்தைக் குறைத்து ஆரோக்கியத்தை அளிக்கிறது.
உலர் திராட்சையில் வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் மற்றும் இரும்பு, தாமிரச் சத்து நிறைவாக உள்ளது. இது ரத்த செல்கள் உற்பத்திக்கு பெரிதும் உதவியாக இருப்பதால், ரத்தசோகைக்கான வாய்ப்பு குறைகிறது.
தேவை: திராட்சையை உலரவைக்க ,அதுவும் பொன் நிறமாக உள்ள திராட்சை வகைகளை உலரவைக்கும்போது சல்ஃபர் டைஆக்சைட் போன்ற சில ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகிறது. இதனால் ஆஸ்துமா, அலர்ஜி போன்ற பிரச்னைகள் வருவதற்கு வாய்ப்புள்ளது. எனவே, இயற்கை முறையில் உலரவைக்கப்பட்ட திராட்சையை வாங்கிப்பயன்படுத்துவது நல்லது. தினமும் 5 - 6 திராட்சை எடுத்துக்கொள்ளலாம்.

Monday, 26 March 2018

உதட்டின் நிறத்தை வைத்தே உடலின் ஆரோக்கியத்தை அறியலாம்

உதட்டின் நிறத்தை வைத்தே உடலின் ஆரோக்கியத்தை அறியலாம்




ஒருவருடைய உதட்டின் நிறத்தை வைத்தே அவர்களின் ஆரோக்கியத்தின் அளவை கண்டுபிடிக்க முடியும்.
** சிவப்பு நிற உதடு
உதடு பிரகாசமாக நல்ல சிவப்பு சிறத்தில் இருந்தால், அதற்கு அவர்களின் உடலில் அதிகப்படியான உஷ்ணம், கல்லீரம் மற்றும் மண்ணீரல் பிரச்சனை இருப்பதாக அர்த்தமாகும். இந்த பிரச்சனையை போக்க இவர்கள் செவ்வந்தி பூ கலந்த தேனீர், கசப்பான முலாம் பழம் போன்றவற்றை உணவாகச் சாப்பிடுவது நல்லது
** சாம்பல் நிற உதடு
ஒருவருடைய உதடு மங்கலான இளம் சிவப்பு, வெள்ளை, சாம்பல் போன்ற நிறத்தில் இருந்தால், அதற்கு அதிக குளிர்ச்சி, ரத்த சோகை குறைவு போன்ற பிரச்சனைகள் உள்ளது என்று அர்த்தமாகும்.
தீர்வு
இந்த பிரச்சனையை போக்க இவர்கள் நல்ல சூடான உணவை சாப்பிட வேண்டும். மேலும் விட்டமின் C மற்றும் இரும்பு சத்து கொண்ட பேரிச்சம்பழம், சிவப்பு இறைச்சிகள் போன்ற உணவுகளை அதிகமாக சாப்பிட வேண்டும்.
** கருப்பு நிற உதடு
ஒருவருடைய உதடு கருப்பாக இருந்தால், அதற்கு அவர்கள் உடலின் செரிமான அமைப்பில் பிரச்சனை இருப்பதாக அர்த்தமாகும்.
தீர்வு
இந்த பிரச்சனையை போக்க இவர்கள் சூடான தண்ணீரை அடிக்கடி குடிப்பதுடன், நார்ச்சத்து மிக்க உணவுகள் மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை அடிக்கடி எடுத்துக் கொள்ள வேண்டும்.
** ஊதா நிற உதடு
ஒருவருடைய உதடு நல்ல சிவப்பாகவும் அல்லது ஊதா நிறத்தில் கோட்டுடன் இருந்தால். அதற்கு அவர்களின் உடல் சம நிலையில் இல்லை என்று அர்த்தமாகும்.
தீர்வு
இந்தப் பிரச்சனையை போக்க இவர்கள் பதப்படுத்திய உணவுகளை தவிர்த்து, உருளைகிழங்கு, கேரட், மீன்கள் போன்ற உணவுகளை அதிகமாக சாப்பிட வேண்டும்

பற்களைப் பாதுகாக்க சில வழிமுறைகள்



பற்களைப் பாதுகாக்க சில வழிமுறைகள்

பல்போனால் சொல் போய்விடும் என்பார்கள், அதாவது திருத்தமாகப் பேச முடியாது. மேலும்
முழுமையான ருசியையும் உணர முடியாது. கடினமான பொருட்களையும் சாப்பிட முடியாது, முக அழகும் குறைந்துவிடும்.
ஆகவே பற்களை பாதுகாப்பது மிகமிக அவசியம்.

ஆலம் வேலும்பல்லுக்கு உறுதி என்றார்கள்.....

ஆலம் விழுது, வேப்பங்குச்சி,கருவேலமரக்குச்சி ஆகியவற்றை உபபோகித்து பல் விளக்கினால் பல்
பிரச்சினை ஏற்படாது. இவற்றிற்கு முதலிடம் கொடுக்க வேண்டும். முடியாவிட்டடால்
கருவேலம் பட்டை, வேப்பம்பட்டை பொடியை உபயோகிக்கலாம். இவையும் கிடைக்காவிட்டால்,
கடைகளில் விற்கப்படும் மூலிகைப் பொடிகளை உபயோகிக்கலாம். தவிர்க்க முடியாத பட்சத்தில்
பற்பசைகளை உபயோகிக்கலாம்.
காலையில் பல்விளக்கிய பின் 5-10
மில்லி நல்லெண்ணெயை வாயில்
விட்டு சில நிமிடங்கள் வரை கொப்பளித்து, எண்ணெய் நீர்த்தபின் துப்பிவிட வேண்டும்.
இரவு படுக்க செல்லும் முன்பும் பல்லை விளக்கிவிட்டு, வெந்நீரில் சிறிதளவு உப்பு கலந்து சிலநிமிடங்கள் கொப்பளித்த பின் துப்ப வேண்டும்.
தினசரி காலை உணவிற்கு முன்பு சில தேங்காய்
சில்களை நன்கு மென்று தின்றபின் ஓரிரு பேரிச்சம் பழங்கள் சாப்பிடலாம். இதனால் பற்கள் உறுதியாகவும், வயிற்றில் உள்ள புண்னை ஆறுவதற்கும் இது நல்ல மருந்தாக பயன் படுகிறது.

Thursday, 22 March 2018

மூக்குத்தி அனிதல்


மூக்குத்தி




மூக்குத்தி அணிதல் என்பது காலம் காலமாக நடைமுறையில் இருக்கும் ஒரு பழக்கம், பருவப் பெண்களே மூக்குத்தி அணிவர்.

மண்டை ஓட்டுப் பகுதியில் காணப்படும் சில வாயுக்களை அகற்றுவதற்கு தான் மூக்கில் துளை இடும் பழக்கம் உருவானது.

இதனால் பெண்களுக்கு மூக்கு தொடர்பான பிரச்சனைகள் நிவர்த்தியாகும்.

வலது புறமாக சுவாசம் செல்லும் போது தான் உடலுக்கும் மனதுக்கும் பலன் கிடைக்கும். முறையான சுவாச பரிமாற்றத்துக்கு உதவுகிறது மூக்குத்தி.

நமது மூளையின் அடிபகுதியில் நரம்பு மண்டலங்களை கட்டுப்படுத்தக்கூடிய சில பகுதிகள் உணர்ச்சிகளை செயல்படுத்தும்.

இந்த பகுதியின் செயல்பாட்டை பெண்களுக்கு அதிகப்படுத்த மூக்குத்தி அவசியப்படுகிறது.

பெண்களின் இடதுபுற மூக்கில் குத்தக்கூடிய மூக்குத்தி, வலது புற மூளையையும் வலது புற மூக்கில் குத்தும் மூக்குத்தி இடதுபுற மூளையையும் இயக்க கூடியதாக உள்ளது.

ஒற்றைத்தலைவலி, நரம்பு நோய்கள், உளச்சோர்வு ஏற்படாமல் மூக்குத்தி தடுக்கிறது.

Monday, 19 March 2018

கணவன் மனைவி இல்லறம்


இல்லறம் 



தகராறு இல்லாத குடும்பம் இல்லை..
வீட்டுக்கு வீடு வாசப் படி..
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கவலை..
யானைக்கு தன் உடம்பைத் தூக்க முடியவில்லையே என்ற கவலை இருந்தால் அணிலுக்கு தன் உடம்பு இவ்வளவு சிறிதாக இருக்கிறதே என்ற கவலை..

ஏழைக்கு தொப்பையை நிறைப்பது கவலை என்றால்
பணக்காரருக்கு தொப்பையைக் குறைப்பது கவலை..

காதலித்து கல்யாணம் செய்தவரும் கட்டிலைப் பிரித்து போட்டதுண்டு
பெற்றோர் நிச்சயித்த திருமணத்திலும் பேரன்பு பெருக்கெடுப்பது உண்டு.

அன்பிருந்தும் பணமிருந்தும் சந்ததி இல்லாத குடும்பங்களும் உண்டு
சந்ததி இருக்கும் குடும்பங்கள் சாப்பாட்டுக்கே கஷ்டபடுவதுண்டு.

அமெரிக்காவில் பகல் என்றால் இந்தியாவில் இருட்டு
பிரச்சனை இல்லாத வாழ்க்கை எவருக்குமே இல்லை
ஆக அடுத்தவர் நன்றாக வாழ்வது போலவும் நாம் மட்டும் தான் கஷ்டப் படுவது போலவும் பிரமை வேண்டாம்.

கணவர் வீட்டுக்கு வரும் போதே பிர்ச்சனையோடு வரக் கூடாது மனைவியும் அவரை கேள்விக் குறிகளோடே வர வேற்க கூடாது..

கணவர் எதையும் அடித்து சொல்லக் கூடாது..
மனைவி எதையும் இடித்து பேசக் கூடாது..

"நீங்க வாங்கின காய்கறி மகா மட்டம் "என்று மனைவி சொன்னால். "எந்த நாய் சொன்னது?" என்று கணவன் பதில் சொன்னால் தான் பிரச்சனை. தன் தவறை ஒத்துக் கொண்டு. "சரி இனி பார்த்து வாங்குகிறேன்" என்று சொல்லி விட்டால் முடிந்தது.

"நீ செய்த சாப்பாடு சகிக்கலை" என்று கணவன் சொன்னால்..
"எனக்கு தெரிந்த லட்சணம் இவ்ளோ தான். நீங்க உங்க அம்மா வீட்டுக்கு போய் சாப்பிடுங்க" என்று மனைவி பதில் சொன்னால் தான் பூகம்பம் ஆரம்பம். "இன்னிக்கு உடம்பு முடில. நாளைக்கு நன்றாக சமைக்கிறேன்" என்று சொன்னால் அன்பு வெள்ளம் தான்.

மனைவி புது புடவை உடுத்தினால் "இந்த புடவை நன்றாக இருக்கு.. அழகா இருக்கே" என்று சொல்லணும்
கணவன் வெளியிலிருந்து வரும் போது "ஏன் இப்படி வியர்த்திருக்கிறது..எளச்சுபோய்ட்டீங்களே" என்று அக்கறையோடு மனைவியும் விசாரிக்க வேண்டும்..

மனைவியைக் கணவன் "அம்மா" என்று அழைக்கணும்
கணவனை மனைவி "அப்பா" என்று அழைக்கணும்

தன் தாயை மனைவி நன்றாக நடத்தினால் கணவனுக்கு நிம்மதி
தன் தாய் வீட்டை கணவன் பெருமையாககு கூறினால் மனைவிக்கு நிம்மதி.

Bed Room இல் Board Room இல் பேசுவது போல் பேசக் கூடாது.
பகலில் நடக்கும் எந்த வாக்குவாதமும் அன்று இரவிற்குள் சரி செய்யப் பட்டு விட வேண்டும்..

முக்கியமாக கணவனும் மனைவியும் சிந்திக்க வேண்டிய விஷயம். வார்த்தைகளில் ஜாக்கிரதை.

எள்ளைக் கொட்டினால் பொறுக்கி விடலாம்
சொல்லைக் கொட்டி விட்டால் பொறுக்க முடியாது.

முள்ளால குத்தின காயம் ஆறிடும்..
சொல்லால குத்தினா ஆறவே ஆறாது..

ஒருவரையொருவர் அனுசரித்து போனால் உலகையே தனக்குள் அடக்கி கொள்ள முடியும்.

இரண்டு கைத் தட்டினால் தான் ஓசை என்பார்கள்..
ஒருவர் கோபம் கொள்ளும் போது இன்னொருவர் விட்டு கொடுக்க வேண்டும்..

"பெண்டாட்டி தானே சொல்லி விட்டு போகிறாள்" என்றும் "கணவன் தானே பேசட்டும்" என்றும் விட்டுக் கொடுத்து விட்டால் உள்ளம் துடிக்காது. உடல் வலிக்காது. ஊர் சிரிக்காது..

முடி வளர்ச்சியைத் தூண்டும் இயற்கை முறையில் செய்யப்படும் வைத்திய குறிப்புகள்

முடி வளர்ச்சியைத் தூண்டும் இயற்கை முறையில் செய்யப்படும் வைத்திய குறிப்புகள்



இன்றைய காலத்தில் தலைமுடி கொட்டுவது என்பது பெரும் பிரச்சனையாக உள்ளது. குறிப்பாக ஆண்கள், பெண்கள் என அனைவரும் தலைமுடி உதிர்வால் கஷ்டப்படுகின்றனர். இதற்காக எவ்வளவோ முயற்சிகளையும் மேற்கொண்டும் எந்த பலனும் 

கிடைக்கவில்லை என்று புலம்புவர்கள்தான் அதிகம்.

ஆனால் இங்கு கொடுக்கப்பட்டுள்ள முறையை ஆண்கள், பெண்கள் என இருபாலரும் பின்பற்றி வந்தால், நிச்சயம் தலைமுடி
கொட்டும் பிரச்சனையில் இருந்து விடுபடுவதோடு, தலைமுடியும் நன்கு வளரும். முக்கியமாக இந்த வழிமுறையின் மூலம்
வழுக்கை விழுந்த இடத்திலும் முடி வளர்ச்சியடைவதை காணலாம்.

தேவையான பொருட்கள்:

தேங்காய் எண்ணெய்
விளக்கெண்ணெய்
வைட்டமின் ஈ கேப்ஸ்யூல்
கற்றாழை

செய்முறை:

முதலில் கற்றாழை இலையை எடுத்துக் கொண்டு, அதனை முனைகளில் உள்ள கூர்மையான பகுதியை நீக்கிவிட்டு, இரண்டாக பிளந்து கொள்ள வேண்டும். பின் கத்தியால் ஜெல் போன்ற பகுதியில் கீறி விட்டு, ஸ்கால்ப்பில் படும்படி நன்கு தேய்த்து, சிறிது
நேரம் ஊற வைக்க வேண்டும்.

பின்பு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெய், 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் எடுத்துக் கொள்ளவும். அத்துடன் 1 வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் மாத்திரையை ஊசியால் துளையிட்டு, அதனுள் உள்ள எண்ணெயை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

இந்த எண்ணெயை நேரடியாக சூடேற்றக்கூடாது. மாறாக ஒரு அகன்ற பாத்திரத்தில் சுடுநீரை ஊற்றி, அதனுள் அந்த எண்ணெய்
கலவையுள்ள பௌலை சிறிது நேரம் வைக்க வேண்டும். அடுத்து அந்த எண்ணெயை ஸ்காலப்பில் படும்படி தடவி 10 நிமிடம்
நன்கு மசாஜ் செய்ய வேண்டும். பின் இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் தலைமுடியை அலச வேண்டும்.
குறிப்பு:
இந்த செயல்முறையை வாரத்திற்கு 3 அல்லது 4 முறை செய்து வந்தால், தலைமுடியில் வளர்ச்சி ஏற்பட்டிருப்பதை
காணலாம்

Saturday, 17 March 2018

கேரட்

கேரட்


ஆண்கள் அவ்வப்போது இரத்தத்தைத் சுத்தப்படுத்த
வேண்டியது அவசியம். 
அதற்கு வாரத்திற்கு 2 முறை கேரட்டை ஜூஸ் போட்டு குடிக்கலாம். இல்லாவிட்டால், 
தினமும் ஒரு கேரட் சாப்பிட்டு வரலாம்.
விந்தணுக்களை
அதிகரிக்கும் ஆண்கள்
கேரட் சாப்பிட்டால்,
அவர்களது
விந்தணுவின் அளவு அதிகரிப்பதோடு,
அதன் தரமும் அதிகரிக்கும்.
எனவே குழந்தைப்
பெற்றுக் கொள்ள நினைப்போர் தினமும் கேரட்டை தவறாமல் சேர்த்து வருவது நல்லது.
செரிமானம் கேரட்
செரிமானத்திற்கும் உதவும்.
ஆகவே செரிமான பிரச்சனையால் அவஸ்தைப்பட்டால்,
ஒரு நாளைக்கு இரண்டு கேரட்டை சாப்பிட்டு வந்தால்,
விரைவில் செரிமான பிரச்சனை நீங்கும்.
வயிற்று கோளாறு
கேரட்டை ஆண்களும் சரி,
பெண்களும் சரி தினமும் சாப்பிட்டு வந்தால்,
வயிற்றில் ஏற்படும் பிரச்சனைகள் குணமாகும்.
அதிலும் வாயுத் தொல்லை இருக்கும் போது,
கேரட் சாப்பிட நீங்கும்.
கொலஸ்ட்ரால் ஆண்கள்
எப்போதுமே தங்களது உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள வேண்டும்.
அதற்கு தினமும் இரவில் உணவு
உண்ட பின்னர் ஒரு டம்ளர் கேரட் ஜூஸ் குடித்து வர,
உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவானது கட்டுப்பாட்டுன் இருக்கும்.
ஆரோக்கியமான கண்கள்
கேரட் சாப்பிட்டால்,
கண்களில் ஏற்படும் பிரச்சனைகளைப் போக்கலாம் என்பது அனைவருக்கும் தெரிந்தது தான்.
இதயத்தை ஆரோக்கியமாக வைக்கும் கேரட் சாப்பிட்டால்,
கொலஸ்ட்ராலின் அளவானது குறைந்து,
இதயத்திற்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாக்கும்.
பல் பராமரிப்பு கேரட்டை சாப்பிட்டு வந்தால்,
பற்களில் ஏற்படும் அனைத்து
பிரச்சனைகளையும் தடுக்கலாம். அதிலும் குறிப்பாக ஈறுகளில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் வாய் துர்நாற்றத்தில் இருந்து விடுபடலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
வலியுடைய மூட்டு வீக்கம் ஆண்களும் சரி,
பெண்களும் சரி, இருவரும் சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் வலியுடைய மூட்டு வீக்கம்.
இத்தகைய மூட்டு வீக்கத்தில் இருந்து விலகி இருக்க வேண்டுமானால்,
தினமும் கேரட்டை தவறால் சாப்பிட்டு வர வேண்டும்.
இதானல் அதில் உள்ள வைட்டமின் சி,
எலும்புகளை வலுவாக்கும்.
புற்றுநோயை தடுக்கும் கேரட்டில் உள்ள நன்மைகளில் சிறப்பான ஒன்று தான் புற்றுநோயை தடுக்கும் என்பது. ஆகவே தினமும் கேரட் சாப்பிட்டு புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து விலகியிருங்கள்.
நோய்எதிர்ப்பு சக்தியை வலுவாக்கும்
நோய்எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்தால் தான் எளிதில் நோய்களானது தொற்றிக் கொள்ளும்.
ஆகவே எப்போதும் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால், கேரட்டை சாப்பிடுங்கள்.
இது நோய்எதிர்ப்பு சக்தியை வலுவானதாக மாற்றும்.
நீரிழிவு நீரிழிவு
இருக்கும் போது கேரட்டை
பச்சையாக சாப்பிட்டு வந்தால்,
இன்சுலினை சீராக வைத்துக் கொள்ள உதவும்.
மலச்சிக்கல்
குடலியக்கம் சீராக செயல்பட்டு,
மலச்சிக்கல் ஏற்படாமல்
இருக்க வேண்டுமானால்,
தினமும் ஒரு கேரட் சாப்பிட்டு வாருங்கள்.
இரத்த அழுத்தம் கேரட்டில்
பொட்டாசியம் அதிகம் இருப்பதால்,
இது இரத்த அழுத்தத்தினை
கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவும்..

ஏலக்காய்

ஏலக்காய்



1.ஏலக்காய் கார்ப்புச் சுவையும் வெப்பத் தன்மையும் கொண்டது. சிறுநீரைப் பெருக்கும். தாகம், வியர்வையுடன் கூடிய தலைவலி, வறட்சி, கபம் முதலியவற்றைக் கட்டுப் படுத்தும்.

2.மணம், சுவை கூட்டும் தன்மை ஏலத்திற்கு மிகுதியாக உண்டு. கேக்குகள், மிட்டாய்கள், இனிப்புகள் ஆகியவற்றிலும், உணவு சமைப்பதிலும் ஏலக்காய் பெருமளவு சேர்க்கின்றது.

3.ஏலக்காய் விந்துவைப் பெருக்கும்; காமத்தைத் தூண்டும். வயிற்று உப்புசத்தை நீக்கி செரிமானத்தை எளிதாக்குகின்றது.

4.மலமிளக்கும் மருந்துகளுடன் ஏலக்காய் சேர்க்கப்படுகின்றது. ஆண்மை விருத்தி லேகியங்களிலும் சேர்க்கப்படுகின்றது.

5.ஏலக்காய் விதையின் எண்ணெய் பல மருந்துப் பொருட்களிலும் சேர்க்கப்படுகின்றது.

6.ஏலக்காய் மலைப் பகுதிகளில் இயற்கையாக விளைகின்றது. ஏலம், ஆஞ்சி, துடி, சிற்றேலம் ஆகிய மாற்றுப் பெயர்களும் இதற்கு
உண்டு.

7.ஏலக்காய், ஓமம், சீரகம் ஆகியவற்றை சம அளவில் எடுத்துக் கொண்டு இள வறுப்பாக வறுத்து, பொடி செய்து கொண்டு, அதில் ஒரு தேக்கரண்டி அளவு உட்கொள்ள செரியாமை தீரும்.

8.ஏலக்காய், சீரகம், சுக்கு, கிராம்பு சம அளவாகப் பொடித்து, 2 கிராம் தேனில் தினமும் 3 வேளைகள் சாப்பிட்டு வர வயிற்று வலி குணமாகும்.

9.கர்ப்ப காலத்தில் ஏற்படும் அஜீரணம், குமட்டல், வாந்தி தீர ஏலக்காயின் மேல் தோலை உரித்து, உள்ளிருக்கும் ஏலரிசியை நன்கு காய வைத்து, தூள் செய்து கொள்ள வேண்டும்.
2 கிராம் அளவு தூளை தேவையான அளவு எலுமிச்சம் பழச் சாற்றில் குழைத்து ஒவ்வொரு வேளை உணவிற்குப் பின்னரும், தொடர்ந்து சாப்பிட்டு வரவேண்டும்.

பருக்களை உடனடியாக போக்க உதவும் சில வழிகள்


பருக்களை உடனடியாக போக்க உதவும் சில வழிகள்




முகத்தில் சீழ் நிறைந்த பருக்கள் வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் சருமத்தில் அதிகளவு எண்ணெய் சுரப்பு, அதிகமான மேக்கப், தூசிகள் மற்றும் அழுக்குகளால் சருமத் துளைகள் அடைப்பது, மரபணு காரணங்கள், சருமத்தில் இறந்த செல்களின் தேக்கம் அதிகரித்தல், ஹார்மோன் மாற்றங்கள், அதிகமாக 

வெயிலில் சுற்றுவது போன்றவை குறிப்பிடத்தக்கவை.
ரோஸ் வாட்டர் சந்தனப் பவுடரை ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின் கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கி, பருக்களும் மறைந்துவிடும்.
தினமும் சீழ் நிறைந்த பருக்களின் மீது சிறிது தேனைத் தடவி மசாஜ் செய்து, 1 மணிநேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால்
சருமத்துளைகளில் உள்ள அடைப்புக்கள் நீங்கி, சருமத்துளைகள் சுத்தமாகும்.

கற்றாழை ஜெல்லை தினமும் இரவில் படுக்கும் முன் முகத்தில் தடவி மசாஜ் செய்து, மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இப்படி ஒரு மாதம் தொடர்ந்து பின்பற்றினால், முகம் பருக்களின்றி பிரகாசமாக இருப்பதைக் காணலாம்.

விளக்கெண்ணெயை சிறிது வெதுவெதுப்பாக சூடேற்றி, முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். ஒருவேளை
விளக்கெண்ணெய் சற்று அடர்த்தியாக இருப்பது போல் இருந்தால், ஆலிவ் ஆயிலுடன் சேர்த்து கலந்து பயன்படுத்துங்கள்.
உருளைக்கிழங்கை வட்ட துண்டுகளாக்கி, ஃப்ரிட்ஜில் சிறிது நேரம் வைத்து, பின் அதை எடுத்து முகத்தை மசாஜ் செய்து, சிறிது நேரம் கழித்துக் கழுவ
வேண்டும். இல்லாவிட்டால், உருளைக்கிழங்கு சாற்றினை முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின் கழுவ வேண்டும். இப்படி செய்வதன் மூலமும் பருக்கள் நீங்கி,
முகம் அழகாக இருக்கும்.

வெந்தயக் கீரையை சிறிது எடுத்து அரைத்து, அத்துடன் தயிரை சிறிது சேர்த்து கலந்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

மொட்டை போடுவதன் நோக்கம்



மொட்டை போடுவதன் காரணம்


*உலகில் எங்கிருந்தாலும் ஹிந்துக்களிடையே தலைமுடியை முழுக்க மழிக்கும் பழக்கம் காணப்படுகிறது. இதனை மொட்டை போடுதல் (மொட்டையடித்தல்) என்பார்கள்.*

*இந்த பழக்கத்தை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி, 1 வயது முதல் 100 வயது வரையில் மொட்டையடித்துக் கொள்வதை காணமுடியும்.*

*பெரும்பாலும் மொட்டை போடுதல் என்பது கோவில்களுக்கு வேண்டுதல் வைத்து நிறைவேற்றப்படுகிறது.*

*குழந்தைகளுக்கு முடி எடுப்பதென்றால் ஒற்றைப்படை ஆண்டுகளில் (அதாவது ஒரு வயது , மூன்று வயது , ஐந்து வயது) எடுக்க வேண்டும். இரட்டைபடை ஆண்டுகளில் முடி எடுப்பதால் குழந்தைக்கு தொடர்ந்து உடல்நலக்குறை ஏற்படும் என்பார்கள்.*

*ஆனால் பெரியவர்களுக்கு அப்படியில்லை, எப்போது வேண்டுமானாலும் முடி எடுத்துக்கொள்வார்கள். அது தவறாகும்.*

*ஒரு முறை மொட்டையடித்துக் கொண்டால், அடுத்து முடி இறக்க மூன்று மாதங்களாக வேண்டும். மூன்று மாதமாகாமல், மீண்டும் முடி எடுக்கக்கூடாது.*

*இதனை ஹிந்துக்களிலேயே கிண்டலடிப்பவர்கள் உண்டு- 'உயிர் கொடுத்த சாமிக்கு மயிர் கொடுக்கிறாயா?' என்றும் ,*

*'ஏன் முடிய கொடுக்கிற விரலக் கொடுக்கறேன்னு வேண்டிக்கலாமே!' என்றும் கேலி பேசுவார்கள்.*

*முடின்னா வளர்ந்துடும்ன்னு வேண்டிகிட்டாயா?' என்று கிண்டலடிப்பார்கள்.*

*யார் என்ன சொன்னாலும் இன்றும் மொட்டை போட்டுக் கொள்பவர்களின் எண்ணிக்கை பல மடங்கு பெருகியே இருக்கிறது, இன்னும் பெருகும்.*

*மத பேதமின்றி, எல்லோருடைய கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாகியிருக்கும்.*

*இந்த மொட்டை போடும் அல்லது போட்டுக் கொள்ளும் பழக்கம் எப்போது யாரால் துவங்கப்பட்டது, என்பதனை பார்ப்போம்.*

*மகாபாரதப் போரின் உச்சகட்ட போரின் முடிவு நாளான 18ம் நாள் இரவில், வரும் விதியின் கோரத்தை அறியாத பாண்டவர்கள் ஐவரின் குழந்தைகளும் உறக்கத்தில் ஆழ்ந்திருந்த வேளையில், அவர்களின் உறக்கத்தை மீளா உறக்கமாக மாற்ற எண்ணி, அறையின் உள்ளே புகுந்த குரு துரோணாச்சாரியாரின் மகனான அஸ்வத்தாமன், உறக்கத்திலிருந்த குழந்தைகளை பாண்டவர்கள் என்று எண்ணி வெட்டி சாய்த்தான் .*

*அலறக்கூட நேரமின்றி மடிந்தன அந்த குழந்தைகள். விடிந்ததும் அங்கு வந்த பாண்டவர்கள், நடந்த கொடுமையை எண்ணி மனம் கலங்கினார்கள். இந்த மாபாதக செயலை செய்தவனை சிரம் கொய்வேன், என்று சபதமிட்டான் அர்ஜுனன். அன்று மாலைக்குள் யாரென்று கண்டறியப்பட்டு, விலங்கிட்டு கொண்டு வந்து பாண்டவர்கள் முன் நிறுத்தப்பட்டான் அஸ்வத்தாமன்.*

*குருவின் மகனை கொல்லுதல் பாபம் என திரௌபதியும் , அண்ணன்களும் கூற, 'என் சபதம் முடிக்காமல் விடமாட்டேன்' என கர்ஜித்தான் அர்ஜுனன்.*

*அப்போது ஸ்ரீ கிருஷ்ணர் ஒரு உபாயம் சொல்கின்றார். 'அர்ஜுனா , உன் கோபமும் செயலும் நியாயமானதே! ஆனாலும் தர்மத்தின் பாதையில் செல்லும் நீ புரிந்து கொள், அவனை சிரம் கொய்யாதே, பதிலாக சிகையை மழித்துவிடு, அது அவன் மரணித்ததற்கு ஒப்பாகும்' என்றார்.*

*அதற்காக, அஸ்வத்தாமனின் முடி மழிக்கப்பட்டு துரத்தப்பட்டான். ஆக, சிகையை (முடியை) இழப்பது என்பது மரணத்திற்கு சமமானதாகும்.*

*ஹிந்துக்களின் ஒவ்வொரு அசைவிற்கும் காரணம் உண்டு ,*

*நாகரீகம் என்று எண்ணிக்கொண்டு, வெகு தூரம் வெளியே வந்து விட்ட மக்களாகிய நமக்கு, இது கிண்டலாகவும் கேலியாகவும் தெரிவது இயற்கை தானே.*

*ஒருவரின் ஜாதகத்தில் உயிருக்கு ஆபத்து இருந்தால், மரண திசையாக இருக்குமானாலும் அவர்கள் ஏதேனும் ஒரு கோவிலுக்கு சென்று முடி எடுத்துக் கொள்வார்களேயானால், அந்த உயிராபத்திலிருந்து நீங்கிப் பிழைப்பது சர்வ நிச்சயமாகும்.*

*ஹிந்து மதத்தின் ஒவ்வொரு சொல், செயல் அனைத்திற்கும் உள் அர்த்தம் உண்டு.* *எல்லாவற்றையும் அறிந்து செயலாற்றுவதற்கு நமக்கு வயது போதாது. ஆகவே, சொல்வதை அப்படியே கேட்டு அதன் வழி செல்வதுதான் சாலச் சிறந்தது.*
*வேண்டுமானால், விஷயமறிந்தவர்களிடம் விபரம் கேட்டுத் தெளியலாம்.*

*ஒன்று மட்டும் நிச்சயம்! ஹிந்துக்களின் எந்த சொல்லும் செயலும் சத்யமற்றதோ, அதர்மமானதோ, இறைவனுக்கு எதிரானதோ இல்லை.*

*யாரோ ஒருவர் ஏதோ தவறிழைத்தார் என்றால் ஹிந்துக்களோ, மதமோ, காரணமில்லை என்பதை உணருங்கள்.*
*தனிமனிதனின் தவறுக்காக, ஒரு மதத்தையே இழிவாக்குவது,*
*இழிவாகப்பேசுவது என்பது எந்த மதமானாலும் தவறே!*

Friday, 16 March 2018

தாய்ப்பால்


தாய்ப்பால்



பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது மட்டுமின்றி, பிரசவத்திற்கு பின் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் போதும் உணவு கட்டுப்பாட்டில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

* தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் காபி குடித்தால், அதில் உள்ள காப்ஃபைன் தாய்ப்பால் சுரப்பில் இடையூறை ஏற்படுத்தும். மேலும் அந்த காப்ஃபைன் தாய்ப்பாலில் கலந்து குழந்தையின் உடலுக்கும் சென்று, அதனால் அவர்களின் உடலினுள் ஒருவித எரிச்சலை ஏற்படுத்தி, குழந்தையின் தூக்கத்திற்கு இடையூறை ஏற்படுத்தும். எனவே இதனை தவிர்க்க வேண்டியது அவசியம்.

* தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் எந்த ஒரு மாத்திரையை எடுத்தாலும், அது தாய்ப்பாலின் வழியே குழந்தைக்கும் செல்லும். சில நேரங்களில் உங்கள் குழந்தையின் பால் பற்களில் கருப்பு நிற கறை இருப்பது போன்று தெரியும். அப்படி தெரிந்தால், அதற்குஅந்த மாத்திரை தான் காரணம். அதுமட்டுமின்றி, தாய் எடுத்த மாத்திரையின் பக்க விளைவு குழந்தைக்கும் ஏற்படும். எனவே தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் கண்ட மாத்திரைகள் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.

* பூண்டு அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகளை தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் சாப்பிட, குழந்தைக்கு அது பிடிக்காமல் போகலாம். அப்படி உங்கள் குழந்தைக்கு பூண்டு பிடிக்கவில்லையெனில், தாய்ப்பால் குடிப்பதைத் தவிர்க்கும். எனவே நீங்கள் பூண்டை உணவில் அதிகம் சேர்த்து, உங்கள் குழந்தை தாய்ப்பால் குடிக்க மறுத்தால், அவர்களுக்கு பூண்டு பிடிக்கவில்லை என்பதை உணர்ந்து, நீங்கள் பூண்டு சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள்.

* தாய்ப்பால் கொடுக்கும் போதும், மீன் அதிகம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டியது அவசியம்.

* காரமான உணவுகளை தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் உட்கொண்டால், அது தாய்ப்பாலின் வழியே குழந்தையின் உடலினுள் சென்று, அவர்களின் செரிமான மண்டலத்தில் இடையூறை ஏற்படுத்தி, வயிற்று எரிச்சல், வயிற்று உப்புசம் மற்றும் சில நேரங்களில் வாந்தியை கூட ஏற்படுத்தும். எனவே மிகவும் காரமாக இருக்கும் உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

* வாய்வுத் தொல்லையை ஏற்படுத்தும் காய்கறிகள் மற்றும் பழங்கள் உடலில் வாயுவை உற்பத்தி செய்யும் உணவுகளை தாய்மார்கள் உட்கொண்டால், அது குழந்தைகளையும் பாதிக்கும். பெரும்பாலான குழந்தைகளுக்கு வாயு உற்பத்தி செய்யும் உணவுகள் அலர்ஜியை ஏற்படுத்தும். எனவே வாயுவை அதிகம் உற்பத்தி செய்யும் உணவுகளான பீன்ஸ், ப்ராக்கோலி, முட்டைக்கோஸ் மற்றும் இதுப்போன்ற வாயு உற்பத்தியை அதிகரிக்கும் காய்கறிகள் மற்றும் பழங்களை தவிர்க்க வேண்டும்.

* பால் மற்றும் பால் பொருட்களால் புரோட்டீன் அதிகம் உள்ளது. நிறைய குழந்தைகளால் மாட்டுப் பாலின் புரோட்டீனை செரிக்க முடியாது. தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் சீஸ், தயிர் மற்றும் இதர பால் பொருட்கள் உட்கொண்டால், குழந்தைகளுக்கு வயிற்று உப்புசம், வாய்வு தொல்லை மற்றும் அடிவயிற்று வலி போன்றவை ஏற்படக்கூடும். எனவே குழந்தையின் நலனுக்காக இவற்றையும் தவிர்க்க வேண்டியது அவசியம்.

Thursday, 15 March 2018

முருங்கை கீரை சூப்

முருங்கை கீரை சூப்



தினமும் ஏதாவது ஒரு கீரையை உணவில் சேர்த்து கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. இன்று முருங்கை கீரையில் சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

ஆரோக்கியம் தரும் முருங்கை கீரை சூப்

#தேவையான பொருட்கள் :
ஆய்ந்த முருங்கைக் கீரை – ஒரு கப்,
வெங்காயம் – 1,
தக்காளி – ஒன்று,
பூண்டு – 5 பல்,
இஞ்சி – சிறிதளவு,
மிளகுசீரகத்தூள் – ஒரு டீஸ்பூன்,
நெய் – ஒரு டீஸ்பூன்,
சோள மாவு – ஒரு டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.

#செய்முறை :
கீரையை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
இஞ்சியை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.
(அறுசுவை சமையல் - சைவம்)
பூண்டை தட்டிக்கொள்ளவும்.
சோள மாவுடன் தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.

வாணலியில் நெய் விட்டு தட்டிய பூண்டு, இஞ்சித் துருவல் சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதனுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
(அறுசுவை சமையல் - சைவம்)
அடுத்து அதில் கீரை சேர்த்து சுருள வதக்கவும்.

பிறகு உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
(அறுசுவை சமையல் - சைவம்)
கீரை வெந்ததும் அதில் கரைத்து வைத்துள்ள
சோள மாவு கரைசல் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்.

கடைசியாக மேலே மிளகு சீரகத்தூள் தூவி சூடாக பருகவும்.

மூளையைத் தூங்க விடாதீர்கள்


மூளையைத் தூங்க விடாதீர்கள்




பொதுவாக நினைவாற்றல் என்பது அனைவருக்கும் மாபெரும் தேவை....

நினைவாற்றல் சுமாராக இருப்பவர்கள் கூட நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள மூன்று முக்கியமான வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். 

1. கவனமான பார்வை

2. ஆர்வம், அக்கறை

3. புதிதாகச் சிந்தித்தல்

இந்த மூன்றிற்குமே சிறப்பான பயிற்சி தேவை.

அந்தப் பயிற்சிக்காக எந்தப் பயிற்சிக் கூடத்திற்கும் செல்ல வேண்டியதில்லை. நமக்கு நாமே பயிற்சி அளித்துக் கொள்ளலாம்.

அதற்கான சில பயிற்சி முறைகளைப் பார்ப்போம். முதலாவதாக ஒரு பயிற்சி.

ஒன்றிலிருந்து நூறு வரை எண்ணுங்கள். பிறகு 2,4,6 என்று இரண்டு இரண்டாக எண்ணுங்கள். பிறகு 100 லிருந்து தலைகீழாக, 100, 98 96, என்று இரண்டு இரண்டாகக் குறைத்து எண்ணுங்கள். பிறகு நான்கு நான்காகக் குறையுங்கள். இப்படியே 5,6,7 வரை தாவித் தாவி குறைத்து எண்ணுங்கள். இப்படி ஏழு ஏழாக குறைத்து எண்ணக் கற்றுக் கொண்டீர்கள் என்றால், உங்களுடைய நினைவுத் திறன் நல்ல அளவில் வளர்ந்திருக்கிறது என்று அர்த்தம்.

இப்போது ஓர் ஆங்கிலப் பத்தரிகையை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு பத்தியில் எஸ். எழுத்தையெல்லாம் எண்ணிக் குறித்துக் கொள்ளுங்கள். அடுத்து இரண்டு மூன்று பத்திகளில் உள்ள ஏ எழுத்தையெல்லாம் எண்ணிக் குறித்துக் கொள்ளுங்கள்.

இப்போது மீண்டும் ஒரு முறை திருப்பிப் பார்த்தீர்கள் என்றால், எத்தனை எஸ் அல்லது ஏவை எண்ணாமல் விட்டிருப்பீர்கள் என்று தெரியவரும். அதை வைத்து உங்கள் நினைவுத் திறனின் அளவை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

புதிய சிந்தனை மூலமும் நினைவுத் திறனை வெகுவாக வளர்த்துக் கொள்ளலாம். தொலைக்காட்சியில் வரும் விளம்பரங்களைப் பாருங்கள். அந்த விளம்பரம் பற்றி கொஞ்சம் ஆராய்ச்சி பண்ணுங்கள்.

வேறு எந்த மாதிரி இந்த விளம்பரம் இருந்திருந்தால், இதைவிட நன்றாக இருந்திருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள். சிந்திக்க சிந்திக்க மூளையின் சிந்திக்கும் ஆற்றல் வளர்வதோடு நினைவாற்றலும் பெருகும். முயன்று பாருங்கள்.

இதே போன்று இன்னொரு பயிற்சி....

உங்கள் நெற்றியை கற்பனையாக நீங்களே 6 அறைகளாகப் பிரித்துக் கொள்ளுங்கள். ஒரு அறையை இழுங்கள். அதில் மறுநாள் 9 மணி புரோகிராம் என்று எழுதிப் போடுங்கள். (உதாரணமாக 9 மணிக்க ராம்கோபாலை சந்திக்க வேண்டும் என்று கற்பனையாக எழுதிப் போடுங்கள்). பிறகு அந்த அறையை இழுத்து மூடுங்கள்.

இதே போன்று இரண்டாவது அறையைத் திறந்து இன்னொரு புரோகிராம் எழுதிப் போடுங்கள். அதே போன்று அடுத்தடுத்த நான்கு அறைகளும், இப்படிச் செய்து விட்டால் இரவு படுக்கையில் படுத்ததும் உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும்.

இந்த 6 புரோகிராம்களும் அடுத்தடுத்து உங்களை அறியாமலே உங்கள் மனதில் தோன்றும். இன்னும் இதே போன்று நீங்கள் கூட புதிய புதிய முறைகளைக் கையாண்டு உங்கள் நினைவாற்றலை வளர்த்துக் கொள்ளலாம்.

புத்தகங்களைப் படிப்பது, காலையில் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்திருந்து அன்றைய நிகழ்ச்சிகளைத் திட்டமிடுவது, அபிப்யாசங்கள் செய்வது இதனாலெல்லாம் கூட உங்கள் சிந்திக்கும் திறனையும், நினைவுத்திறனையும் வளர்த்துக் கொண்டே போகலாம்.

உடலின் ஒவ்வொரு உறுப்பும் ஓர் இயந்திரம். அதிலும் இதயமும், மூளையும், ஓய்வில்லாத இயந்திரங்கள். இதயம் ஓய்வு எடுத்துக் கொண்டால் வாழ்க்கை நின்று விடும்.

மூளைக்கு ஓய்வு கொடுத்தால் அது துருப்பிடித்துப் போய் ஒன்றுக்கும் பயனற்று வாழ்க்கை முன்னேற்றம் நின்று போய்விடும். ஆகையால் எந்த நேரமும் மூளைக்கு ஏதேனும் வேலை கொடுத்துக்கொண்டே இருங்கள்.

நினைவாற்றலை மேம்படுத்துங்கள். நினைத்ததைச் சாதியுங்கள்.

செவ்வாழை

செவ்வாழை



குழந்தை இல்லாத தம்பதிகள், தினசரி ஆளுக்கு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு அரைஸ்பூன் தேன் அருந்த வேண்டும்.

தொடர்ந்து 40 நாட்களுக்கு சாப்பிட்டு வர நிச்சயமாக கருத்தரிக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.ஷ🌴🌷

எளிமையுடன் எண்ணற்ற சத்துக்களும் கொண்டது வாழைப்பழம்.
வாழைப்பழத்தில் பல வகை உண்டு. சிலவற்றில் உயிர்ச்சத்தும், சிலவற்றில் சுண்ணாம்புச்சத்தும், இரும்புச் சத்தும் காணப்படுகின்றன.
பலரும் அரிய அளவிலேயே உட்கொள்ளும் செவ்வாழைப்பழம் பல மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது.

செவ்வாழையின் தாயகம் அமெரிக்க நாடுகளான கோஸ்டரீகா, மற்றும் கியூபா எனக் கூறப்படுகிறது.
இதில் உள்ள பீட்டா கரோட்டீன் கண்நோய்களை குணமாக்கும். செவ்வாழையில் உயர்தர பொட்டாசியம், உள்ளது.

இது சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது.
இதில் வைட்டமின் ‘சி’ அதிகம் உள்ளது.
செவ்வாழையில் ஆண்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது.

இதில் 50 சதவிகிதம் நார்ச்சத்து காணப்படுகிறது.
கண்பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும்.
கண்பார்வை குறைய ஆரம்பித்த உடன் தினசரி செவ்வாழை பழத்தை சாப்பிட பார்வை தெளிவடையும்.

மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் இரவு ஆகாரத்திற்குப் பின்னர் தொடர்ந்து 40 நாட்கள் செவ்வாழை சாப்பிட்டு வர மாலைக்கண்நோய் குணமாகும்
பல்வலி, பல்லசைவு, போன்ற பலவகையான பல்வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும்.

பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூட கெட்டிப்படும்.

குடமிளகாய் சட்னி

குடமிளகாய் சட்னி



தேவையானவை:

குடமிளகாய் பெரியது – ஒன்று,
சின்ன வெங்காயம் – 100 கிராம்,
பச்சை மிளகாய் – 5(அல்லது தேவைக்கேற்ப), தக்காளி சிறியது – ஒன்று அல்லது இரண்டு,
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்,
புளி – சிறிய நெல்லிக்காய் அளவு,
கடுகு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை, உளுத்தம்பருப்பு – தாளிக்க தேவையான அளவு, நல்லெண்ணெய் – ஒரு சிறிய குழிக்கரண்டி, உப்பு – தேவையான அளவு.
செய்முறை: குடமிளகாயை சதுரமாக வெட்டிக் கொள்ளவும். சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளியை பொடியாக நறுக்கவும். புளியை கெட்டியாக கரைத்துக் கொள்ளவும். அடுப்பில் அடி கனமான கடாயை வைத்து நல்லெண்ªணய் ஊற்றி, காய்ந்ததும், கடுகு சேர்த்து, வெடித்ததும் உளுத்தம்பருப்பு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை போட்டு, அதன்பின் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு அதில் குடமிளகாய், நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். சிறிது நேரம் வதக்கிய பின் தக்காளி சேர்த்து, மஞ்சள்தூள், உப்பு போட்டு வதக்கி, பின்னர் புளிக் கரைசலை சேர்த்து… எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்கு வதக்கி இறக்கவும்.
இந்த சட்டினியை உப்புமா, பொங்கல், தயிர் சாதம், வெறும் சாதத்துடன் சேர்த்துசாப்பிடலாம்.
குடமிளகாயில் என்னென்ன சத்துக்கள் இருக்கிறது என்பதனைப் பார்ப்போம்..
தக்காளி, குடைமிளகாய், எலுமிச்சை ஆகியவற்றில் வைட்டமின் 'சி' (C) சத்து அதிகமுள்ளது. இவற்றை சமைக்கும்போது தண்ணீர் அதிகம் சேர்க்கக்கூடாது. அதிகச்சூட்டில் சமைக்கக் கூடாது.
உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் குடமிளகாயை உணவில் சேர்த்து வர நல்ல பலனளிக்கும். குடமிளகாயில் கொழுப்புச் சத்து, கொலஸ்ட்ரால்,சோடியம் ஆகியன குறைவாகவே இருப்பதால் உடல் எடையைக் குறைக்க உதவும்.
குடமிளகாயில் உள்ள விட்டமின் ஏ,சி,ஈ,பி6 போன்ற சத்துக்கள் ஆரோக்கியமான தேகத்தைக் கொடுக்கும்.
கண்பார்வையைச் சிறப்பாக்கவும், இளமையிலேயே கண் தொடர்பான பிரச்சினைகளை அண்டவிடாமலும் குடமிளகாய் காக்கிறது என்பதைச் சமீபத்திய மருத்துவ ஆராய்ச்சி தெரிவிக்கிறது.
குடமிளகாயைச் சமைக்கும் முன் நன்கு அலம்ப வேண்டும்.
குடமிளகாயைத் துச்சமாக எண்ணாமல் அதன் பலன்களைக் கருத்தில் கொண்டு பயன்படுத்துவது ஆரோக்கியமான வாழ்விற்கு நல்லது

பழங்களின் மருத்துவ குணங்கள்


பழங்களின் மருத்துவ குணங்கள்:-


மாம்பழம்

மாம்பழத்தில் வைட்டமின் …ஏ உயிர்சத்து நிறைந்துள்ளது. இதனை உட்கொள்வதால் நமது ரத்தம் அதிகரிக்கப்பட்டு உடலுக்கு நல்ல பலம் கிடைப்பதாக உள்ளது. உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அளிக்கிறது.

கொய்யா பழம்

சி உயிர் சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது. வளரும் சிறுவர்களுக்கு வைட்டமின் …சி† உயிர்சத்து எலும்புகளுக்கு பலத்தையும், உறுதியையும் அளிக்கின்றது. மலச்சிக்கல் இருப்பவர்கள் கொய்யாப் பழத்தினை தொடர்ந்து சாப்பிட்டு பயன் பெறலாம். சொறி, சிரங்கு, ரத்த சோகை இருப்பவர்கள் கொய்யாப்பழம் சாப்பிட்டு இவற்றை குணப்படுத்தி கொள்ளலாம். விஷ கிருமிகளை கொல்லும் சக்தி கொய்யாப் பழத்திற்கு இருப்பதால் வியாதியை உண்டு பண்ணும் விஷக் கிருமிகள் ரத்தத்தில் கலந்தால் அதை உடனேயே கொன்று விடும்.

பப்பாளி

வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம் இது. இதிலும் வைட்ட மின் …ஏ† உயிர் சத்து நிறைய இருக்கிறது. பல் சம்மந்தமான குறை பாட்டிற்கும், சிறு நீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும் பப்பாளி சாப்பிட்டால் போதும். மேலும்- நரம்புகள் பலப் படவும், ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடுங்கள்.
மாதவிடாய் சரியான அளவில் இன்றி கஷ்டப்பட்டு கொண்டி ருக்கும் பெண்மணிகள் தினமும் பப்பாளிப்பழம் உண்டு வந்தால் மாதவிடாய் குறைபாடு சீராகும். அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நேரிடாது. எந்த வகையான தொற்று நோய் பரவினாலும், அது இவர்களை தாக்காது. பப்பாளி பழத்தில் இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் ஒரு வகை சத்து இருப்பதால் பப்பாளி பழத்தை சாப்பிடுபவர்களின் ரத்தத்தில் நோய் கிருமிகள் தங்கி நோயை உண்டு பண்ண வாய்ப்பில்லை.

அன்னாசி

அன்னாசி பழத்தில் வைட்டமின் …பி உயிர்சத்து அதிக அளவில் உள்ளது. அது உடலில் ரத்தத்தை விருத்தி செய்வதாகவும், உடலுக்கு பலத்தை தருவதாகவும் இருப்பதோடு பல வியாதிகளை குணப்படுத்தும் அரிய மருந்தாகவும் இருக்கிறது. தேகத்தில் போதுமான ரத்தமில்லாமல் இருப்பவர்களுக்கு அன்னாசிப்பழம் ஒரு சிறந்த டானிக். நன்றாக பழுத்த அன்னாசி பழத்தை சிறு சிறு துண்டுகளாக செய்து வெய்யிலில் தூசிப்படாமல் உலர்த்தி வற்றல்களாக செய்து வைத்து கொண்டு தினமும் படுக்க செல்வதற்கு அரைமணி நேரத்திற்கு முன்னதாக ஒரு டம்ளர் பாலில் ஓர் ஐந்து அன்னாசி வற்றல்களை ஊற வைத்து, பின் படுக்கச் செல்லும் போது ஊறிய வற்றல்களை 40 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும். இதனால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் நீங்கும். அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை நோய் குணமாகும்.

விளாம்பழம்

விளாம்பழம் பல வியாதிகளை குணப்படுத்தும் சிறந்த பழமாகும். இதில் இரும்பு சத்தும், சுண்ணாம் புச்சத்தும், வைட்டமின் …ஏ சத்தும் உள்ளது. இப்பழத்துடன் வெல்லம் சேர்த்து பிசைந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் குணமாகும். பித்தத்தால் தலை வலி, கண்பார்வை மங்கல், காலையில் மஞ்சளாக வாந்தி எடுத்தல், சதா வாயில் கசப்பு, பித்த கிறுகிறுப்பு, கை கால்களில் அதிக வேர்வை, பித்தம் காரணமாக இளநரை, நாவில் ருசி உணர்வு அற்றநிலை இவைகளை விளாம் பழம் குணப் படுத்தும். விளாம்பழத்திற்கு ரத்தத்தில் கலக்கும் நோய் அணுக்களை சாகடிக்கும் திறன் உண்டு. எனவே எந்த நோயும் தாக்காமல் பாதுகாக் கும். அஜீரண குறைபாட்டை போக்கி பசியை உண்டுபண்ணும் ஆற்றலும் விளாம்பழத்திற்கு உண்டு. முதியவர்களின் பல் உறுதி இழப்பிற்கு விளாம்பழம் நல்ல மருந்து.

மாதுளம் பழம்

மாதுளம் பழத்திற்கு மலத்தை இளக்கும் சக்தி உணடு. மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலிலிருந்து குணம் பெறலாம். வறட்டு இருமல் உள்ளவர்கள் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும். பித்த சம்மந்த மான அனைத்து உடல்நல குறை பாட்டிற்கும் மாதுளம் பழத்தை சாப்பிட்டு வரலாம். மாதுளம் பழத்தின் தோலை அம்மியில் மை போல் வைத்து அரைத்து அதில் எலுமிச்சம்பழம் அளவு எடுத்து அரை ஆழாக்கு எருமை தயிரில் கலந்து மூன்று நாள் காலையில் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பிற மருந்துகள் கொடுத்தும் குணமாகாத சீதபேதி உடன் நிற்கும்.

வாழைப்பழம்

மலச்சிக்கல் இருப்பவர்கள், மூலநோய் குறைபாடு இருப்பவர்கள் தினமும் வாழைப்பழம் ஒன்றை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல், மூல நோய் குறைபாட்டிலிருந்து விடுபடலாம். மேலும் தினமும் இரவு உணவிற்கு பின் ஒரு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் நல்ல ஜீரண சக்தி உண்டாகும். எந்த வயதினராக இருந்தாலும், கண்பார்வை குறைய ஆரம்பித்தவுடன் அவர்களுக்கு தினசரி உணவில் செவ்வாழைப்பழம் வேளைக்கு ஒன்று வீதம் 21 நாட்களுக்கு கொடுத்து வந்தால் கண் பார்வை கொஞ்சம் கொஞ்சமாக தெளிவடைய ஆரம்பிக்கும். திருமணமாகி பல ஆண்டுகளாகியும் கர்ப்பமே தரிக்கவில்லை என்று மனம் வருந்தி கொண்டிருக்கும் தம்பதியர்கள் செவ்வாழை பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உயிர் சக்தி அணுக்கள் போதுமான அளவில் பெருகி கருத்தரிக்க வாய்ப்பாகும். ரஸ்தாளி வாழைப்பழத்தினை தண்ணீர் விட்டு கரைத்து மூன்று வேளை கொடுத்தால் வயிற்றுப்போக்கு நின்று விடும். இதுபோன்றே பலாப்பழமும் மருத்துவ பயன் மிக்கதாகவே இருக்கின்றது. இதில் வைட்ட மின் …ஏ† உயிர்சத்து அதிகம் இருப்பதால் இதை சாப்பிட்டால் உடல் வளர்ச்சி சீரடையும். வைட்டமின் …ஏ† உயிர் சத்திற்கு தொற்று கிருமிகளை அழிக்கும் சக்தி இருப்பதால் உடலில் தொற்று நோய் தொற்றாது.

ஆரஞ்சுப்பழம்

ஆரஞ்சில் வைட்டமின் …ஏ அதிகமாகவும், வைட்டமின் …சி-யும், …பி-யும், பி-2ம் உள்ளன. மேலும் இதில் சுண்ணாம்புச்சத்தும் மிகுந்து காணப்படுகிறது. பல நாட்களாக வியாதியால் பாதித்து தேறியவர்களுக்கு இதுவொரு சிறந்த இயற்கை டானிக் ஆகும். இரவில் தூக்கமில்லாமல் கஷ்டப்படுபவர்கள் படுக்க போவதற்கு முன்பாக அரை டம்ளர் ஆரஞ்சு பழச்சாறுடன் சிறிது சுத்தமான தேனை சேர்த்து சாப்பிட இரவில் நன்றாக தூக்கம் வரும். பல் சதை வீக்கம், சொத்தை விழுந்து வலி ஏற்படுதல், பல் வலி, பல்-ஈறுகளில் ரத்தக் கசிதல் இருப்பவர்கள் ஒரு வாரம் அரை டம்ளர் ஆரஞ்சு பழச்சாறை கொப்பளித்து விழுங்க உடன் நிவாரணம் பெறலாம்.

திராட்சைப் பழம்

எல்லா வகையான திராட்சையிலும் பொதுவாக வைட்டமின் …ஏ உயிர்சத்து அதிக அளவில் காணப்படும். பொதுவாக சரியாக பசி எடுக்காமல் வயிறு மந்த நிலையில் காணப்படுபவர்கள் கருப்பு திராட்சை எனப்படும் பன்னீர் திராட்சையில் அரைடம்ளர் சாறு எடுத்து அதனுடன் சர்க்கரை சிறிது சேர்த்து அருந்தி வந்தால் மந்த நிலை நீங்கி நன்றாக பசி எடுக்கும்.
பெண்களுக்கு ஏற்படும் சூதக கோளாறுகளுக்கு திராட்சை சாறு ஒரு சிறந்த வரப்பிரசாதமாகும். மாத விலக்கு தள்ளிப்போதல், குறைவாக வும், அதிகமாகயும் போதல் போன்ற குறைபாடுகளுக்கு கருப்பு திராட்சை சாறு அரை டம்ளரில் சிறிது சர்க்கரை சேர்த்து தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் முறையான கால இடைவெளியில் மாதவிலக்கு வெளியாகும். திராட்சை சாற்றினை தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும்.
வயிற்றில் இரைப்பை, குடல்களில் புண் ஏற்பட்டிருந்தால், வாயிலும் புண் ஏற்படும். வாயில் உள்ள புண்ணை ஆற்ற வேண்டுமானால் முதலில் வயிற்றில் உள்ள புண்ணை ஆற்ற வேண்டும். இருமல் நின்று விடும். அல்லது எலுமிச்சை சாறுடன் சிறிய இஞ்சி துண்டை நறுக்கிப் போட்டு கொதிக்க வைத்து இறுத்து ஆற வைத்து இதேபோல் தொடர்ந்து காலை மாலையாக மூன்று தினங்கள் கொடுத்து வந்தாலும் இருமல் நின்று விடும். தலைவலி இருப்பவர்கள் சூடான கப் காபியில் அரை எலுமிச்சை பழத்தினை பிழிந்து 3 நாட்கள் குடித்து வந்தால் பிறகு தலைவலியே வராது. தேள் கொட்டிய இடத்தில் எலுமிச்சை பழத்தினை இரண்டாக பிளந்து ஒரு பாதியை கொட்டிய இடத்தில் நன்றாக தேய்க்க வேண்டும். இவ்வாறு இரண்டு துண்டுகளையும் தேய்த்துவிட்டால் சிறிது நேரத்திற்கெல்லாம் விஷம் இறங்கி வலி நின்றுவிடும். எலுமிச்சம் பழத்தினை அடிக்கடி உபயோகித்து வருபவர்களுக்கு உஷ்ண அதிகரிப்பால் உண்டாகும் வயிற்று வலி, பித்தத்தால் ஜீரண உறுப்புகளில் ஏற்படும் குறைபாடுகள், உஷ்ணத்தால் ஏற்படும் சிறுநீர் தொந்தரவுகள், மலசிக்கல், உஷ்ண இருமல் ஆகிய தொந்தரவு கள் வராது.

பேரீச்சம்பழம்

தினமும் இரவில் படுக்க செல்லும் முன்னர் ஒரு டம்ளர் காய்ச்சிய பசும் பாலையும், இரண்டு பேரீட்ச்சம் பழத்தினையும் உண்டு வந்தால் உடல் நல்ல பலம்பெறும். புதிய ரத்தமும் உண்டாகும். தோல் பகுதிகள் மிருதுவாகவும், வழுவழுப்பாகவும் இருக்கும். கண் சம்மந்தமான கோளாறுகளும், நரம்பு சம்மந்தமான கோளாறுகளும் நீங்கும். தொற்று நோய் கிருமிகள் நம்மை அணுகாது. பல் சம்மந்தமான வியாதிகளும் குணமடைந்து, பல் கெட்டிப்படும்.

எலுமிச்சம்பழம்

அளவிற்கு மீறி பேதியானால் ஒரு எலுமிச்சை பழச்சாற்றை அரை டம்ளர் நீரில் கலந்து கொடுத்தால் உடனடியாக பேதி நின்றுவிடும். கடுமையான வேலை பளுவினால் ஏற்படும் களைப்பை போக்க எலுமிச்சை பழத்தினை கடித்து சாற்றை உறிஞ்சி குடித்தால் உடனே களைப்பை போக்கும்

நெஞ்சினில் கபம் கட்டி இருமலால் கஷ்டப்படுகிறவர்கள் ஒரு எலுமிச்சை பழச்சாறுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து காலை, மாலையாக தொடர்ந்து 3 நாட்கள் சாப்பிட்டு வந்தால் கபம் வெளியாகி உடல் நன்கு தேறும்.

பழங்களைப் போலவே காய்கறி களும் மனிதர்களுக்கு உடல்நலக் கோளாறுகளை தனிக்கும் வகையில்தான் உள்ளது. நோய்களை முழுது மாக குணப்படுத்து கிறதோ இல்லையோ ஆனால் நோய்வரா மல் தடுக்கும் ஆற்றல் காய், கனிகளுக்கு உண்டு என்பதை மறுக்கமுடியாது. நமது முன்னோர்களும், சித்தர்களும் காய் கனிகளையே பல நாட்கள் உண்டு நீண்ட ஆயுளுடன், திடகாத்திர ஆரோக்கியத்துடன் வாழ்ந்திருந்ததை நமது வரலாறு கூறும். காய்கறிகள் ஒவ்வொன்றிற்குமே ஒவ்வொரு வகையான மருத்துவ குணம் உண்டு. உடனே நீங்கள் இந்த நோய்க்கு இந்த காயை சாப்பிட்டால் இந்தக் குறிப்பிட்ட நோய் குணமாகிவிடுமா என்று கேள்வி கேட்கக் கூடாது.

பொதுவாக காய்கறிகளில் நார்சத்து நிரம்பியிருப்பதினால் வயிற்றுக்கு கேடு செய்யாமல், நம் உடம்பை ஆரோக்கிய முடன் வைத்திருக்க உதவுகிறது. நீரழிவு நோயாளிகளும், ரத்த அழுத்த நோயாளிகளும் காய் கறிகளை நிறைய உண்பது அவசியம் என்று கூறப்படுகிறது. இதற்கு காரணம் உண்டு. காய் கறிகளில் இருக்கும் பைபர் எனப்படும் நார்சத்து வயிற்றில் நீண்ட நேரம் தங்கி நல்ல ஜீரண சக்தியை கொடுத்து உணவில் இருந்து சத்துக்களை பிரித்து ரத்தத்தில் சேர்ப்பதற்கு உதவி செய்கிறது. இந்த நார்சத்தற்ற உணவுகளை சக்கையாக நாம் உண்ணும் போதுதான் மலச்சிக்கல் மற்றும் குடல் தொல்லைகள் போன்றவற்றிற்கு ஆளாக நேரிடுகிறது. எனவே காய்கறிகள் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லது.

நெல்லிக் கனி

நெல்லிக் கனி


தினம் ஒரு நெல்லிக் கனி சாப்பிட்டால் போதும், ஆப்பிளுக்கு நிகரான சத்துக்களைக்கொண்டது. நெல்லிக்காய்; ஒரு நெல்லிக்காய் மூன்று ஆப்பிள்களுக்குச் சமம்.
நெல்லிக்காயில் கால்சியம், வைட்டமின் சி, புரதம் போன்ற சத்துக்கள் அதிகமாக இருக்கின்றன. சித்தா, ஆயுர்வேதம் போன்ற இயற்கை மருத்துவங்களில் நெல்லிக்காயைத் தவறாமல் பயன்படுத்துகிறார்கள். 

வயிறு சம்பந்தப்பட்ட நோய்களைக் கட்டுப்படுத்தும் ‘திரிபலா’ சூரணத் தயாரிப்பில் நெல்லிக்காய்க்கு முக்கியப் பங்கு உண்டு. உடலுக்கும் கண்களுக்கும் குளிர்ச்சியைத் தரும் குணமுடையது என்பதால் ஜலதோஷத்தை உண்டாக்கிவிடும் என்று சிலர் தவறாக நினைக்கிறார்கள். உண்மையில் ஜலதோஷம் வராமல் நெல்லிக்காய் தடுக்கும்.

நெல்லிக்காய் வைரஸ் மூலம் பரவும் நோய்களையும் கட்டுப்படுத்தும். திராட்சை, ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களில் வைட்டமின் சி இருக்கிறது. ஆனால், வேறு எந்தப் பழங்களிலும் இல்லாத அளவுக்கு நெல்லிக்காயில் வைட்டமின் சி மிக அதிகம்.

ஒரு சின்ன நெல்லிக்காயில் 600 மில்லி கிராம் வைட்டமின் சி இருக்கிறது. பச்சைக் காயாகச் சாப்பிடும்போதுதான் நெல்லிக்காயின் சத்துகள் முழுமையாகக் கிடைக்கிறது. ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று நெல்லிக்காயாவது சாப்பிடலாம்.

நெல்லிக்காயில் கால்சியம் சத்து நிறைய இருப்பதால், எலும்புகள் உறுதியாகும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவைக்கும். ரத்த சோகைக்கும் நெல்லிக்காய் நல்ல மருந்து. நெல்லிக்காய் தலைமுடியைக் கருமையாக செழிப்பாக வளரவைக்கும் என்பதால்தான் கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் எண்ணெய் வகைகளிலும் தலைச் சாயத் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது.

தினமும் ஒரு நெல்லிக்காய் உண்டுவந்தால், சர்க்கரைக் குறைபாட்டைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடலாம். அதிக உடல் பருமனால் கஷ்டப்படுகிறவர்கள் காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய்ச் சாறுடன் இஞ்சிச் சாறு அருந்திவந்தால் தேவையற்ற எடை குறைந்து சிக்கென்ற தோற்றத்தைப் பெறலாம்.