Wednesday, 18 April 2018

உடற்பயிற்சி செய்யாதவர் எனில் இன்றிலிருந்தே உடற்பயிற்சியை ஆரம்பியுங்கள்




40வயதில் பெண்களின் உடல், 20 வயதில் இருப்பது போல் இருக்காது, வயதாக ஆக பெண்களின் உடல் பல மாறுபாடுகளை எதிர்கொள்கிறது. இதையெல்லாம் தவிர்க்கவேண்டும் என்றால் சில உடற்பயிற்சிகளை பெண்கள் தொடர்ந்து மேற்கொள்வது கட்டாயம். தசைகளை வலுமைப்படுத்த, எலும்பு அடர்த்தியை காப்பாற்ற, சீக்கிர‌ம் வயதான தோற்றம் ஏற்படுவதை தடுக்க, உடல் அமைப்பை அழகாக்க என எல்லாவற்றிற்கும் உடற்பயிற்சி அவசியம். 40 வயது பெண்களால் 20 வயது பெண்களைப் போல் கடின மான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள முடியாது. நீங்கள் ரொம்ப வலுவானவராக மூட்டுவலி பிரச்னை அற்றவராக இருப்பின் சிறு வயது பெண்கள் மேற்கொள்ளும் பயிற்சிகளை மேற்கொள்ளலாம். மற்ற பெண்கள் செய்ய வேண்டிய 5 அடிப்படை பயிற்சிகள்.

ஸ்குவாட்
நின்றபடி கைகளை முன்னால் சாதாரணமாக நீட்டியபடியோ அல்லது கோர்த்தோ தங்கள் வசதிக்கேற்றபடி வைத்துக்கொள்ள வேண்டும். கைகளை நீட்டியபடியே மெல்ல மெல்ல முட்டியை மடக்கி அமர வேண்டும். பின்பகுதியை மெல்ல பின்னால் கொண்டு செல்ல வேண்டும். உடலின் எடையை கால்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும். உங்கள் பின்புறம் தரைக்கு இணையாக இருக்க வேண்டும். மார்பகங்கள் தூக்கியபடி இருக்க வேண்டும். உங்கள் முட்டியின் நீளம் கால் கட்டை விரல் நீளத்தைத் தாண்டக்கூடாது. படத்தில் உள்ளது போல் அமர வேண்டும். இப்படி 15 முறை செய்ய வேண்டும். இது ஒரு செட். இப்படி மூன்று செட்கள் வரை செய்யலாம். கட்டாயம் 2 செட்களாவது செய்ய வேண்டும்.

ப்ளாங்க்
தரையில் புஷ் அப் பொஷிசனில் படுக்க வேண்டும். கைமுட்டிகளை 90 டிகிரிக்கு மடக்கி உடலின் எடையை தாங்க வேண்டும். உங்கள் தலை தரையைப் பார்த்தபடி இருக்கவேண்டும். தலையைத் தவிர்த்து உங்கள் உடல் பகுதி ஒரே நேர் அமைப்பில் இருக்க வேண்டும். வளையக் கூடாது. மெதுவாக மூச்சை உள்ளிழுத்து மெதுவாக வெளியேற்ற வேண்டும். உங்களால் முடிந்த வரை அதே பொஷிசனில் நீடிக்கலாம். குறைந்தபட்சம் ஒரு நிமிடம் வரை இருக்க வேண்டும்.

லெக் ரைஸ்
நேராக படுக்கவும். உங்கள் கைகளை இருபுறமும் சாதாரணமாக வைத்துக்கொள்ளவும். ஒரு காலை சிறிதளவு மடக்கியோ, நீட்டியோ வைத்திருக்க வேண்டும். மற்றொரு காலை 90 டிகிரி அளவில் உங்கள் உடல் ‘L’ வடிவத்தில் வரும் வரை காலை தூக்க வேண்டும். மறுபடி அதனை 30டிகிரிக்குக் கொண்டு வர வேண்டும். இப்படி 15 முறை செய்ய வேண்டும். இது ஒரு செட். இப்படி இரண்டு செட்கள் வரை செய்யலாம். அடுத்து இன்னொரு காலை தூக்கி இப்படி செய்ய வேண்டும்.

லஞ்செஸ்
நின்று கொண்டு கைகளை தொங்கபோட வேண்டும். தோள்களை பின்புறமாக கொண்டு செல்ல வேண்டும். மெல்ல வலது காலை 90 டிகிரி அளவில் மடக்கி உட்கார வேண்டும். இடது காலை மடக்க வேண்டும். ஆனால் தரையில் படக்கூடாது. அப்படியே மெல்ல எழுந்திருக்க வேண்டும். இப்படியாக மொத்தம் 20 முறைகள் செய்ய வேண்டும். இது ஒரு செட். இப்படி இரண்டு செட்கள் வரை செய்யலாம். மறுபடி இடது காலில் இதனை செய்ய வேண்டும்.

பர்பீஸ்
நேராக நின்று கொள்ள வேண்டும். ஸ்குவாட் பொஷிசனில் உட்கார வேண்டும். (உங்கள் பாதங்களுக்கு முன் உங்கள் கைகளை தரையில் வைக்க வேண்டும்) பின்னர் ப்ளாங்க் பொஷிசனுக்கு (தரையில் புஷ் அப் பொஷிசனில் படுக்க வேண்டும். கைமுட்டிகளை 90 டிகிரிக்கு மடக்கி உடலின் எடையை தாங்க வேண்டும். உங்கள் தலை தரையைப் பார்த்தபடி இருக்கவேண்டும்.) உடம்பை கொண்டு செல்ல வேண்டும்.

மறுபடி ஸ்குவாட் பொஷிசனுக்கு வந்து மறுபடி நிற்கும் நிலைக்கு வரவேண்டும். இப்படியாக மொத்தம் 15 முறைகள் செய்ய வேண்டும். இது ஒரு செட். இப்படி மூன்று செட்கள் வரை செய்யலாம். கட்டாயம் 2 செட்களாவது செய்ய வேண்டும். தொடர்ச்சியாக இந்தப் பயிற்சிகளை செய்து வருவது 40 வயதைத் தாண்டிய பெண்களுக்கு ஆஸ்டியோபோரோஸிஸ் மற்றும் எலும்புகள் உடைதல் போன்ற பிரச்னைகளிலிருந்து காப்பாற்றும். வயதாக ஆக குறையும் வளர்சிதை மாற்றம் (மெட்டபாலிஸம்) பூஸ்ட் அப் ஆகும். உங்கள் உடல் வலுவாக இருக்கும் போது தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

உடற்பயிற்சியின் போது மூளைக்கு ரத்த ஓட்டம் அதிகரிப்பதால் புத்திக்கூர்மை அதிகரிக்கும். வயதாக ஆக தூக்கக் குறைபாடு ஏற்படும். முறையான உடற்பயிற்சி நல்ல தூக்கத்திற்கு வழிவகுக்கும். வயதாவதை தடுக்க முடியாது. ஆனால் முறையான உடற்பயிற்சிகளின் மூலம் விரைவிலே உடல் வலுவிழப்பதை தடுக்க முடியும். எனவே நாற்பது வயதை தாண்டிய பெண்களே நீங்கள் இதுவரை உடற்பயிற்சி செய்யாதவர் எனில் இன்றிலிருந்தே உடற்பயிற்சியை ஆரம்பியுங்கள்.

Sunday, 15 April 2018

பெண்கள் குங்குமம் இடுவதால் மகாலட்சுமியின் நீங்காத அருளைப் பெறுகிறார்கள்



குங்குமம், லட்சுமி கடாட்சம் மிக்கது. பெண்கள் குங்குமம் இடுவதால் மகாலட்சுமியின் நீங்காதஅருளைப் பெறுகிறார்கள். குங்குமத்தை மோதிர விரலால் தான் இடவேண்டும். சிவப்பு நிற குங்குமமே புனிதமானது. 

1. சுமங்கலிப்பெண்களின் தலை வகிட்டின் நுனியை சீமந்த பிரதேசம் என்பார்கள். அம்பிகையின் வகிட்டில் உள்ள குங்குமம் பக்தர்களுக்கு சேமத்தைக் கொடுக்கும்.

2. சுமங்கலிப் பெண்களின் சீமந்த பிரதேசம் ஸ்ரீமகாலட்சுமியின் இருப்பிடம், சுமங்கலிகளின் சக்தி குங்குமத்தில் உள்ளது.

3. வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுப்பது, தருபவர் பெறுபவர் இருவருக்கும் மாங்கல்யத்தின் பலத்தைப் பெருக்கும்.

4. குங்குமம் ஆரோக்கியமான நினைவுகளை தோற்றுவிக்கும். குங்குமம் அணிந்த எவரையும் வசியம் செய்வது கடினம்.

5. பெண்கள் குங்குமத்தை, தான் இட்டுக் கொண்ட பின்பு தான் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.

6. அரக்கு நிற குங்குமம் சிவசக்தியை ஒரு சேரக் குறிப்பதாகும். திருமணப்புடவை அரக்கு நிறத்தில் இருப்பது நல்லது.

7. தெய்வீகத்தன்மை, சுபதன்மை, மருத்துவத்தன்மை உள்ள குங்குமம் அணிவதால் முகம், உடல் மற்றும் மனம் ஆகியவைகளுக்கு அதிக நன்மைகள் உண்டாகும்.

8. திருமணமான பெண்கள் நெற்றி நடுவிலும், வகிட்டின் தொடக்கத்திலும் குங்குமம் அணிவது சிறப்பு.

9. ஆண்கள் இருபுருவங்களையும் இணைத்தாற் போல் குங்குமம் அணிவது தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.

10. கட்டைவிரலால் குங்குமம் இட்டுக் கொள்வது மிகுந்த துணிவைக் கொடுக்கும்.

11.குருவிரலால் (ஆள்காட்டி விரல்) குங்குமம் அணிவது முன்னனித்தன்மை,நிர்வாகம், ஆளுமை போன்றவற்றை ஊக்குவிக்கும்.

12. சனிவிரல் (நடுவிரல்) குங்குமம் இட்டுக் கொள்வது தீர்காயுளைக் கொடுக்கும். குங்குமம் அணிவது தெய்வீக தன்மை, உடல் குளிர்ச்சி மற்றும் சுயக் கட்டுபாட்டிற்கு நல்லது. 

Saturday, 14 April 2018

குளியல் முறை

மனிதர்களுக்கு உள்ள 75% நோய்களுக்கு காரணம் அதிகப்படியான உடல் வெப்பம்.
இரவு தூங்கி எழும்போது நமது உடலில் வெப்பக் கழிவுகள் தேங்கியிருக்கும்.
காலை எழுந்ததும் இந்த வெப்பகழிவை உடலில் இருந்து நீக்குவதற்காக குளிந்தநீரில் குளிக்கிறோம்.
வெந்நீரில் குளிக்க கூடாது. எண்ணெய் குளியலின் போது மட்டுமே மிதமான வெந்நீர் பயன்படுத்த வேண்டும்.


குளிர்ந்த நீரை அப்படியே மொண்டு தலைக்கு ஊற்றிவிடக்கூடாது. இது முற்றிலும் தவறு.
நீரை முதலில் காலில் ஊற்ற வேண்டும், பின், முழங்கால், இடுப்பு, நெஞ்சு பகுதி, இறுதியாக தலை.
எதற்கு இப்படி? காலில் இருந்து ஊற்றினால் தான் வெப்பம் கீழிருந்து மேல் எழும்பி விழி மற்றும் காது வழியாக வெளியேறும்.
நேரடியாக தலைக்கு ஊற்றினால் வெப்பம் கீழ் நோக்கி சென்று வெளியில் போக முடியாமல் உள்ளேயே சுழன்று கொண்டிருக்கும்.
இப்பொழுது நம் முன்னோர்களின் குளியல் முறையை கண்முன்னே கொண்டு வாருவோம்.
குளத்தில் ஒவ்வொறு படியாக இறங்குவார்கள். காலில் இருந்து மேல் நோக்கி குளிரும்.. வெப்பம் கீழ் இருந்து மேல் எழும்பி இறுதியில் தலை முங்கும் போது கண், காது வழியே வெப்பக் கழிவு வெளியேறிவிடும்.
இறங்கும் முன் ஒன்று செய்வார்கள் கவனித்ததுண்டா?? உச்சந்தலைக்கு சிறிது தண்ணீர் தீர்த்தம் போல் தெளித்துவிட்டு இறங்குவார்கள்.
இது எதற்கு... உச்சந்தலைக்கு அதிக சூடு ஏறக்கூடாது. சிரசு எப்போதும் குளிர்ச்சியாக இருக்க வோண்டும்.
எனவே உச்சியில் சிறிது நினைத்து விட்டால் குளத்தில் இறங்கும் போது கீழ் இருந்து மோலாக எழும் வெப்பம் சிரசை தாக்காமல் காது வழியாக வெளியேறிவிடுகிறது. வியக்கவைக்கிறதா... !
நம் முன்னோர்களின் ஒவ்வொறு செயலுக்கும் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு. குளித்துவிட்டு சிறிது நேரம் ஈரத் துணியோடு இருப்பது மிக நல்லது.
பித்தம் நீங்கி பிராணவாயு அதிகரித்தால் அனைத்து நோய்களும் ஓடிவிடும். புத்தி பேதலிப்பு கூட சரியாகும். குளியலில் இத்தனை விஷயங்கள் இருக்கும் போது. குளியல் அறை என்றாலே அதில் ஒரு ஹீட்டர் வேர, இப்படி சுடு தண்ணீரில் சோப்பும், ஷாம்பையும் போட்டு குளிச்சிட்டு வந்தா நாம நோயாளியா இல்லாம வேற எப்படி இருப்போம்.
குளிக்க மிக நல்ல நேரம் - சூரிய உதயத்திற்கு முன்
குளிக்க மிகச் சிறந்த நீர் - பச்சை தண்ணீர்.

ஆண்கள் தாடி அடர்த்தியா வளர

ஆண்கள் அதிகமா வெயிலில் சுத்துவதால் தூசு பட்டு முகத்தில் அழுக்குகள் ஒட்டி சில பேருக்கு எண்ணைய் சருமமா இருக்கும். அதற்கு ஸ்கரப் பயன்படுத்தலாம்.
எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி அதில் சிறிது சர்க்கரை தொட்டு அதை முகத்தில் தோய்த்து சிறிது நேரம் விட்டு கழுவுங்கள் முகம் பொழிவாக மாறிவிடும்.
கற்றாழை சாற்றை சிறிது பாலுடன் கலந்து முகத்தில் தேய்த்து குளித்தால் சரும வறட்சி மறைந்து முகம் பொழிவாக ஜொலிக்கும். அடுத்தடுத்து சிலருக்கு சருமம் வறட்சியா இருக்கும் ஷேவ் செய்வதால் முகத்தில் எரிச்சல் ஏற்பட்டு அது சிலருக்கு கருமை நிறமா மாறிவிடும்.


ஆண்கள் தாடி அடர்த்தியா வளர ஆசை படுவார்கள். அவங்க தாடியில் சிறிது விளக்கெண்ணெயை தோய்த்தால் போதும் தாடி அடர்த்தியாக வளர ஆரம்பிக்கும்.
கண் கருவளையம் உள்ள ஆண்கள் கருவளையம் போக வாழைப்பழ தோலின் உள் பகுதியை கண்களுக்கு மேலே ஒரு பத்து நிமிடங்கள் வைக்கவும். அப்படி இல்லை என்றால் தோலின் உள்பகுதியை எடுத்து கண்களுக்கு அடியில் வைத்து மஜாஷ் பண்ணுங்க
சில ஆண்களுக்கு முகத்தில் தோன்றும் கொப்புளங்களை நீக்க வாழைப்பழ தோல் ரொம்ப உதவியாக இருக்கும். வாழைப்பழ தோலை கொப்பளம் உள்ள இடத்தில் நன்கு தேய்த்தால் கொப்பளம் சீக்கிரமாக மறைந்து விடும்.
முகம் சோர்வு அடையாமல் இருக்க அடிக்கடி முகத்தை கழுவிகொள்ளுங்கள்.

தொப்பையைக் குறைக்க பலரும் கடுமையான உடற்பயிற்சி செய்தால் போதாது

குறைந்த நாட்களில் தொப்பையை குறைத்திடும் வழி



தொப்பையைக் குறைக்க பலரும் கடுமையான உடற்பயிற்சியை தினமும் செய்து வருவார்கள். ஆனால் அப்படி உடற்பயிற்சியை மட்டும் செய்தால் போதாது. உடலில் சேரும் கொழுப்புக்களை கரைக்க உதவும் உணவுகளையும், பானங்களையும் குடித்து வர வேண்டும்.
வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகம், கலோரிகள் குறைவு, நார்ச்சத்துக்கள் அதிகம் மற்றும் உடலின் அல்கலைன் அளவை சீராக பராமரிக்க உதவும். மேலும் இது வயிற்றில் சேரும் கொழுப்புக்களை கரைக்க மிகவும் சிறப்பான உணவுப் பொருள்.
எலுமிச்சையில் பெக்டின் என்னும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது பசியைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவும். மேலும் இவை உடலில் சேரும் நச்சுக்களை மட்டுமின்றி, தேவையில்லாத கொழுப்புக்களையும் கரைத்து வெளியேற்றும்.
புதினா உணவின் வாசனை மற்றும் சுவையை அதிகரிக்க உதவுவதோடு, புத்துணர்ச்சி அளித்து, பசியைக் கட்டுப்படுத்துவதிலும் மிகவும் சிறந்தது. மேலும் புதினா வாய் துர்நாற்றத்தையும் தடுக்கும்.
ஆய்வு ஒன்றில் இஞ்சியை தொடர்ந்து உணவில் சேர்த்ததால், அவர்கள் வயிறு நிறைந்தது போன்று உணர்ந்ததோடு, குறைவான அளவிலேயே உணவை உட்கொண்டனர். இதனால் இஞ்சியானது அதிகப்படியான கலோரிகளை எரித்து, அதிகப்படியான கொழுப்புக்களை கரையச் செய்ததாம்.

Friday, 13 April 2018

மரபணு மாற்று விதை


பயிர்களிலும் மற்ற உயிரினங்களிலும் மரபணு மாற்றங்களைச் செய்வது பொதுமக்களின் உடல்நலத்தையும் சுற்றுச்சூழலையும் ஆபத்திற்குள்ளாக்கும் வாய்ப்பு இருக்கிறது,
ஆனால் அதற்கும் மேலாக, ஒழுக்கம் மற்றும் நெறிமுறை சார்ந்த விஷயங்களை கேள்விக்கிடமாக்குகிறது என சிலர் கருதுகின்றனர்.
“கிரகத்தையே மாற்றிவிட, உயிரின் இயற்கையையே மாற்றிவிட இந்த மரபணு தொழில்நுட்பம் மனிதனுக்கு ஒரு வாய்ப்பை அளிக்கிறது.”
“எப்போது நீங்கள் உயிரியலிலுள்ள எல்லைகளையெல்லாம் தாண்டுகிறீர்களோ, அப்போது எல்லா உயிரினத்தையும், எப்படி வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளக்கூடிய வெறும் தகவல்களடங்கிய மரபணுக்களாகவே பார்ப்பீர்கள்.
அவ்வாறு இருந்தால் இயற்கையுடன் நமக்கிருக்கும் தொடர்பை மட்டுமல்ல ஆனால் அதை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதைப் பற்றிய நம்முடைய கருத்தையும் மாற்றிவிடும்.
“உயிரை மதிக்கிறோமா அல்லது வெறும் இயந்திரத்தைப் போல் உபயோகிக்கிறோமா? வருங்கால சந்ததிக்கான நம்முடைய கடமை என்ன? நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த உலகத்திலுள்ள மற்ற உயிரினங்களிடம் நமக்கிருக்கும் பொறுப்பை நாம் எவ்வாறு கருதுகிறோம்?”
கொஞ்சம்கூட சம்பந்தமே இல்லாத உயிரினங்களிடையே இவ்வாறு மரபணுக்களை மாற்றுவது “கடவுளுக்கு சொந்தமான, கடவுளுக்கு மட்டுமே சொந்தமான அதிகாரத்தில் நாம் தலையிடுவதாகும்”
கடவுள்தான் “ஜீவஊற்று” என பைபிள் மாணாக்கர்கள் உறுதியாக நம்புகின்றனர்.(சங்கீதம் 36:9) இருப்பினும், நம் கிரகத்தில் வாழ்ந்துவந்துள்ள கோடிக்கணக்கானோருக்கு அதிக உதவிகளை செய்துள்ள முறையான, மிருகங்களிலும் செடிகளிலும் தெரிந்தெடுத்து சேர்த்து இனப்பெருக்கம் செய்யும் முறையை கடவுள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.
இந்த நவீன உயிரியல் தொழில்நுட்பம் மனிதர்களையும் சுற்றுச்சூழலையும் பாதிக்குமா என்பதை காலமே பதில் சொல்லும்.
ஆனால் அவ்வாறு உண்மையிலேயே இந்த உயிரியல் தொழில்நுட்பம் “கடவுளுக்கு சொந்தமான அதிகாரத்தை” அபகரிக்க முயற்சித்தால், அப்போது மனிதர்கள்மீது கடவுளுக்கிருக்கும் அன்பு மற்றும் அக்கறையின் காரணமாக இப்படிப்பட்ட முன்னேற்றங்களை தலைகீழாகக்கூட அவரால் மாற்றக்கூடும்.
*ஆபத்தாகும் சாத்தியங்கள்*
உயிரியத் தொழில்நுட்பம், கொஞ்ச காலத்திலேயே மின்னல் வேகத்தில் முன்னேறியிருக்கிறது. அதனால் சட்டத்தாலோ, கட்டுப்படுத்தும் நிறுவனங்களாலோ இதற்கு ஈடுகொடுக்க முடியவில்லை.
அதுமட்டுமல்ல இப்படிப்பட்ட தொழில்நுட்பத்தால் என்ன பின்விளைவுகள் வரும் என்பதை ஆராய்ச்சியாளர்களால் முன்கூட்டியே அறிந்து, அவற்றை தடுக்கவும் முடியவில்லை.
விவசாயிகளின் பொருளாதார நலிவு, சுற்றுச்சூழல் நாசம், மனிதர்களின் உடல்நலக் கேடு போன்ற எதிர்பாராத பின்விளைவுகளை இது ஏற்படுத்தலாம் என்பதே அநேகரின் ஒருமித்த கருத்து.
மரபணு விதை உணவில் எந்த ஆபத்துமில்லை என நிரூபிப்பதற்கு எந்த ஒரு பெரிய அளவிலான, நீண்ட காலத்திற்குரிய ஆராய்ச்சியும் இல்லை என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.
அவ்வாறு ஆபத்துகளை ஏற்படுத்த சாத்தியங்கள் இருக்கும் சில குறிப்புகளை கவனியுங்கள்:
● அலர்ஜி. உதாரணமாக, ஏதாவது அலர்ஜிக்கு வழிநடத்தும் புரதத்தை உண்டாக்கும் ஒருவகை ஜீன், தானியத்தில் மாற்றப்பட்டிருப்பதாக வைத்துக்கொள்ளுங்கள். ஒருசில உணவுவகை ஒத்துக்கொள்ளாததால் அலர்ஜியில் அவதிப்படும் ஒருவர் அதை சாப்பிட்டால் அவருடைய உயிருக்கே அது ஆபத்தை விளைவிக்கலாம். அவ்வாறு மாற்றீடு செய்யப்பட்ட உணவுவகையில் அலர்ஜி ஏற்படுத்தும் புரதம் ஏதும் இருந்தால், உணவு கட்டுப்பாட்டு நிறுவனங்களுக்கு அதை அறிவிக்க வேண்டும் என்பது என்னவோ உண்மைதான், ஆனால் சில மறைமுகமான அலர்ஜென்கள் சோதனைகளை எல்லாம் ஏமாற்றிவிட்டு உணவில் கலந்துவிடலாம் என்று சில ஆராய்ச்சியாளர்கள் பயப்படுகின்றனர்.
● நச்சுத்தன்மை அதிகரிப்பு.இயற்கையாகவே சில செடிகளிலிருக்கும் நச்சுத்தன்மையை இந்த மரபணு மாற்றம் ஏதிர்பாராதவிதமாக அதிகரிக்கச் செய்துவிடலாம் என சில வல்லுநர்கள் நம்புகின்றனர். ஒரு ஜீன் செடிக்குள் செலுத்தப்பட்ட பிறகு, அது நல்ல விளைவுகளை ஏற்படுத்துவதோடுகூட, இயற்கையான நச்சை அதிகரிக்கவும் செய்யக்கூடும்.
●நோய் எதிர்ப்பு சக்திக்கு எதிர்ப்பு.தாவரங்களில் மரபணு மாற்றத்தின் ஒரு பாகமாக, தாங்கள் விரும்பிய ஜீன் வெற்றிகரமாக சென்று செயல்படுகிறதா என உறுதிப்படுத்திக்கொள்வதற்காக மார்க்கர் ஜீன் என அழைக்கப்படுவதை விஞ்ஞானிகள் பயன்படுத்துகின்றனர். இந்த மார்க்கர் ஜீன்களுள் பெரும்பாலானவை நுண்ணுயிர்க் கொல்லிகளை எதிர்க்கும் சக்தியை அளிப்பதால், நுண்ணுயிர் கொல்லியை எதிர்க்கும் திறன் என்ற நாளுக்குநாள் அதிகரித்துவரும் பிரச்சினைக்கு இதுவும் ஒரு முக்கியமான காரணமாக ஆகிவிடும் என சிலர் பயப்படுகின்றனர். இருப்பினும், இப்படிப்பட்ட மார்க்கர் ஜீன்கள் உயிரியலில் பயன்படுத்துவதற்கு முன்பே சேதமடைந்தவை, அதனால் இதில் ஆபத்து அதிகம் இல்லை என மற்ற சில விஞ்ஞானிகள் வாதிடுகின்றனர்.
●“சூப்பர் களைகளின்” அதிகரிப்பு.இருப்பதிலேயே அதிக பயத்திற்குரிய விஷயம் என்னவெனில், இவை மாற்றீடு செய்யப்பட்ட பிறகு, விதைகள் மற்றும் மகரந்தத்தின் மூலமாக ஜீன்கள் வெளியேறுகின்றன. இவை தன் இனத்தைச் சேர்ந்த மற்ற களைகளை சென்றடைகின்றன. இதனால் அவை “சூப்பர் களைகள்” உண்டாக்குகின்றன. இவை, களைக்கொல்லிகளை எதிர்க்கக்கூடும்.
● மற்ற உயிரினங்களுக்கு ஆபத்து. மரபணு மாற்று விதையில் முறையில் வளர்க்கப்பட்ட தானியங்களின் மகரந்தம் படிந்திருந்த இலைகளை சாப்பிட்ட மோனார்க் வண்ணத்துப்பூச்சியின் கம்பளிப் புழுக்கள், வியாதிப்பட்டு இறந்துவிட்டன என கோர்னெல் பல்கலைக்கழகத்திலிருந்து ஆராய்ச்சியாளர்கள் மே 1999-ம் தேதி அறிக்கை செய்தனர். இந்த ஆராய்ச்சியின் உண்மைகளை நம்பாத அநேகர் இருக்கின்றனர். ஆனால் இதுவரை சோதனை செய்யப்படாத மற்ற உயிரின வகைகளை இது பாதிக்கலாம் என்று சிலர் கருதுகின்றனர்.
● பாதுகாப்பான பூச்சிக்கொல்லிகளுக்கு முடிவு. அதிக வெற்றிகளைக் கண்டுள்ள மரபணு தாவரங்களில், பூச்சிகளை துரத்துவதற்கான ஒருவித புரத நச்சுடைய ஜீனைக்கொண்ட தாவரங்களும் சில இருக்கின்றன. எப்படியிருந்தாலும், தீங்கான பூச்சிகளை இப்படிப்பட்ட ஜீன்கள் தயாரிக்கும் நச்சுக்கு முன்பாக கொண்டுவருவதால் அந்த பூச்சிகள் உறுதித்தன்மையை வளர்த்துக்கொள்ள உதவி செய்து, பூச்சிக்கொல்லியை உபயோகமற்றதாக ஆக்கிவிடும் என உயிரியல் நிபுணர்கள் எச்சரித்திருக்கின்றனர்.
சிந்திப்போம்...
நம் வாழ்க்கை ஒரு வரம் அதை நாம் வீணாக்க கூடாது
உண்ணும் உணவில் முற்றிலும் இயற்கை முறை இல்லை என்றாலும் உங்களால் முடிந்த அளவு இயற்கை உணவை உண்ண முயற்சி எடுங்கள்..
இதற்க்கு தீர்வு நீங்களாக இயற்கை வீட்டுத்தோட்டம் மாடித்தோட்டம் அமைத்து இயற்கை
காய் கீரைகளை பயிர் செய்து உண்ணுவது தான்.
தோட்டத்தில் நமது பராம்பரிய விதைகளை மட்டும் பயிர் செய்வும்.
இயற்கை தோட்டம் பற்றிய ஆலோசனை க்கும்...
பாரம்பரிய நாட்டு விதைகள் வேண்டுமென்றால் தொடர்பு கொள்ளவும்.
உங்கள் இல்லங்களில் நடைபெறும் சுபகாரியங்களுக்கு நமது பாரம்பரிய விதையை பரிசாக கொடுங்கள் நிறைய மக்களுக்கு சென்றடைய வசதியாக இருக்கும்.
நன்றி
ஏஞ்சல் இயற்கை மாடித்தோட்டம்
கோயமுத்தூர்
9578419307
(வாட்ஸ்ஆப்)