Friday, 20 April 2018

மூலிகை பொடிகளும் அதன் பயன்களும்



கீழாநெல்லி பொடி : மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது. முடக்கத்தான் பொடி : மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது. கோரைகிழங்கு பொடி : தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.

குப்பைமேனி பொடி : சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.

பொன்னாங்கண்ணி பொடி : உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.

முருங்கைவிதை பொடி :
ஆண்மை சக்தி கூடும்.

லவங்கபட்டை பொடி : கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.

வாதநாராயணன் பொடி : பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.

பாகற்காய் பவுடர் : குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

வாழைத்தண்டு பொடி : சிருநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.

மணத்தக்காளி பொடி : குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.

சித்தரத்தை பொடி : சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.

பொடுதலை பொடி : பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்.

சுக்கு பொடி : ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.

ஆடாதொடை பொடி : சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.

கருஞ்சீரகப்பொடி : சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.

வெட்டி வேர் பொடி : நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.

மனித உடல்



* மனித உடலில் காணப்படும் தசைகளின் எண்ணிக்கை 639
* மனித மூளையின் மொத்தம் 1200 கோடி நரம்பு செல்கள் உள்ளன.
* மனிதன் இறந்த மூன்று நிமிடம் கழித்து மூளையின் இரத்த ஓட்டம் நின்று விடுகின்றது.
* மூளையில் உள்ள நியுரான்க்ளின் எண்ணிக்கை 1400
* மனிதனின் முதுகுத்தண்டின்எலும்புகள் 33
* மனித மூளையின் எடை 1.4 கிலோ
* உடலின் சாதாரண வெப்ப நிலை 98.4 டிகிரி செல்சியஸ்
* மனித உடலில் உள்ள ரத்தத்தின் சராசரி அளவு 5 லீட்டர
* உடலின் மெல்லிய சருமம் கண் இமை
* மனித உடலில் இள்ள குரோம்சோம்களின்எண்ணிக்கை 23 ஜோடி
* ஒரு மனித உடலில் கிடைக்கும் கொழுப்பில் இருந்து 10 சோப்புக்கட்டிகள் தயாரிக்கலாம்.
* மனிதனின் கண் நிமிடத்திற்கு25முறை மூடித்திறக்கிறது.
* நாம் ஒருவார்த்தை பேசும் போது நம் முகத்தில் 72 தசைகள் அசைகின்றன.
* மனித நாக்கின் நீளம் 10 செ. மீ 
* ஒருமனிதன் தன் வாழ்நாளில் சராசரியாக குடிக்கும் தண்ணீரின் அளவு 60,000 லீட்டர் .
* மனித உடலில் கெட்டியான பகுதி பற்களிலுள்ள இனாமல்.
* நமது கால் பாதங்களில் 2,50,000 வியர்வை சுரப்பிகள் உள்ளன.
* நாம் வாழ்நாளில் சராசரியாக சாப்பிடும் உணவின் மொத்த அளவு 30,000 கிலோ.
* நம் உடல் எடையில் 9 சதவிகிதம் இரத்தத்தினால் ஆனது. இந்த ரத்தத்தில் 91 சதவிகிதம் நீர்தான்.
* நம் உடல் முழுவதும் ரத்தம் ஒரு முறை சுற்ற 64 வினாடிகள் ஆகின்றன.
* நாம் குள்ளமாக இருப்பதற்கு காரணம் பிட்யூட்டரி சுரப்பி குறைவாக இருப்பது.
* நம் தசைகள் உண்டாக்கும் வெப்பம் ஒரு லிட்டர் நீரை ஒரு மணி நேரம் கொதிக்க வைக்கப் போதுமானது.
* நாம் வெளியேற்றும் சிறுநீரில் நீரின் அளவு 96 சதவிகிதமும், யூரியா 2 சதவிகிதமும், கழிவுப் பொருட்கள் 2 சதவிகிதமும் உள்ளன.
எலும்புகள் 
* நாம் பிறக்கும்போது சுமார் 300 எலும்புகளுடன் பிறந்து முழுவளார்ச்சியடைந்த பின் 206 எலும்புகளே இருக்கும்! நாளடைவில் ஒன்றோடொன்று இணைவதால் சுமார் 94 எலும்புகள் குறைகின்றன! 
* நமக்கு நாள்தோறும் 16 கிலோ காற்று சுவாசிக்கத் தேவைப்படுகிறது.
தோல்உடலின் மிகப் பெரிய பகுதியாக விளங்குவது தோல் பகுதியாகும். 
வளர்ந்த ஒரு மனித உடலில் சுமார் 2 சதுர மீட்டர் பரப்புள்ள தோல் பகுதி, உடலைநீரிலிலிருந்தும் வெப்பத்திலிருந்தும் பாதுகாக்கும் போர்வையாக விளங்குகிறது..
ஈரல்நமது உடலில் உள்ள ஈரல் (liver) 500 வகையான வேலைகளை செய்கிறது. மிகவும்சிக்கல்நிறைந்த, பெருமளவு செயல்களைச் செய்யும் உறுப்பாக மனித உடலில் விளங்குவது ஈரல் (liver) ஆகும். 
ஈரல் தசைகளில் உள்ள செல்கள் பாதிக்கப்பட்டு அவை சிதைவடைவதாலும் தாறுமாறான வளர்ச்சியாலும் ஈரல் புற்றுநோய் ஏற்படுகிறது.
புகை பிடிப்பதானது உடல்நலத்துக்குப் பெரிதும் தீங்குவிளைவிக்கும் செயலாகும். நுரை ஈரல் புற்று நோய், 
இதய நோய் உள்ளிட்ட பல நோய்களுக்கு இது ஊற்று மூலமாகும். தற்போது உலகில் சுமார் 110 கோடி பேர் புகைபிடிக்கின்றனர். இதன் விளைவாக, ஆண்டுதோறும், 35 லட்சம் பேர் மரணமடைகின்றனர்.
* மனித உடலில் உள்ள மிகப் பெரிய சுரப்பி கல்லீரல்தான்.
மனித நுரையீரலில் உள்ள நுண் காற்றுப் பைகளின் எண்ணிக்கை 300 மில்லியன். 
ஒவ்வொரு நுண் காற்றுப்பையும் 0.2 மில்லி மீட்டர் விட்ட அளவு கொண்டதுநா‌க்கும‌னித உட‌லி‌ல் சதை அழு‌த்த‌ம் அ‌திக‌‌ம் உ‌ள்ள பகு‌தி நா‌க்கு. 
ஒவ்வொரு மனிதனும் வாழ்நாளில் நடக்கும் கணக்கை பார்த்தால் அவன் பூமியை இரண்டு முறை சுற்றி வந்ததிற்கு சமம்.
நாம் தும்மும் போது நமது மூக்கின் வழியாக செல்லும் காற்றின் வேகம் சுமார் 150 கிலோமிட்டர்கள்.
அதுபோல தும்மும் போது கண்டிப்பாக கண்களை மூடிவிடுவோம்.
* 900 பெ‌‌ன்சில்களை தயாரிக்கும் அளவிற்கு ம‌னித உட‌லி‌ல் கார்பன் சத்து இருக்கிறது.
க‌ண் தான‌த்‌தி‌ல் கண்களில் விழித்திரை விழித்திரை நோயால் பார்வையிழந்த இரு நபர்களுக்கு பொரு‌த்த‌ப்படு‌கி‌ன்றன.
விரல் நகம்மனித உடலில் மிகவும் பலமானது விரல் நகங்களே. 
அதில் கெராடின் சத்து உள்ளது, இதுகாண்டாமிருகத்தின் கொம்புகளில் காணப்படுவது, 
மரணத்திற்குப்பிறகும் கூட நகம்ஒன்றுமே ஆகாது.

புதிதாக கல்யாணம் கட்டிக்கொண்ட தன் மகனுக்கு அம்மா கூறும் அறிவுரை


1. எந்த சமயத்திலும் மனைவியை அம்மா கூட ஒப்பிடவே கூடாது....!!

மகனே...மறந்து கூட என்னை உன் மனைவியோட ஒப்பிட்டுப் பார்க்காதே...

உன் அம்மாவுக்கு குடும்ப வாழ்க்கையில், 20 ஆண்டு கால அனுபவம் இருக்கு.
ஆனா உன் மனைவி உன்னை மாதிரி தான். இந்த வாழ்க்கைக்கு புதுசு.

உன்னை நான் வளர்த்த மாதிரி தான். அவங்க அம்மாவும் அவளை பார்த்துப் பார்த்து வளர்த்து அனுப்பியிருக்காங்க.

அவளுக்கு கொஞ்சம் ஆண்டுகள் தேவைப்படும்.
அதுக்கப்புறம், உன் குழந்தைக்கு அருமையான அம்மாவாக அவள் இருப்பாள்.

2. மனைவி உனக்கு அம்மா இல்லை, தோழி..!!

மகனே, உன் மனைவி உன்னுடன் வாழ்க்கைய பகிர்ந்துகொள்ள வந்துள்ள தோழி. அம்மா இல்லை.

உன் அம்மாவுக்கு உன்னை கவனிக்கறது மட்டும் தான் வேலை.
ஆனா உனக்கு, உன் மனைவிய நீ நன்றாக கவனிக்கிறது முக்கியம்.

நீங்க ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் கவனிச்சு அன்பு செலுத்தறது மிக மிக முக்கியம்டா.

3.மதிக்கப்படவேண்டியவள் மனைவி...!!

மகனே , உன் வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வுகள், நல்லது கெட்டது அனைத்திலும் உன் மனைவி உடனிருந்து பங்கு கொள்ளப்போகிறவள்.

அவளை மதிக்கவேண்டும்.
உன் ஒவ்வொரு முன்னேற்றப்படியிலும் அவள் பங்கு உள்ளது.

அவள் கருத்துகளைக் கேட்டு, முன்னுரிமை கொடுத்து வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருடா.!

4. புகுந்த வீடு வந்த மனைவியை இயல்பாக உணர வைக்க
உதவி செய்யணும்.

பிறந்து , வளர்ந்து மகிழ்ந்திருந்த பிறந்த வீட்டை விட்டு,
நம் பொருட்டு புகுந்த வீட்டுக்கு வந்திருக்கா உன் மனைவி...

அவளை இயல்பா இருக்க வைக்க நீதான் உதவணும்..
சின்னச் சின்ன விஷயங்கள் கூட அவளுக்கு சங்கடத்தைத் தரலாம்..

அதை நீதான் கவனிச்சு அவள் பிறந்த வீட்டில் இருப்பதைப் போல உணர வைக்கணும்டா...!

5. எப்பவும் மனைவிய காதலிக்கவேணும்

காதலிக்க வயசு ஒரு விஷயமே இல்லடா.. எப்பவும் உன் மனைவியை..சந்தோஷமா வச்சுக்கோ..

சின்னச்சின்ன சர்ப்ரைஸிங்கான பரிசுகள், வெளிய அழைச்சுட்டுப் போறது, அவள் டிரஸ்ஸிங்கை சிலாகிச்சுப் பேசறது, சந்தோஷமா வாய்விட்டு சிரிக்கறது மாதிரியான விஷயங்கள் உங்க ரெண்டுபேரையும்...எப்பவும்இளமையா உணர வைக்கும்...!!

ஐந்து பாய்ண்ட்டுகளையும் சேர்த்து ஒரே பாய்ண்ட்டா சொல்றேன்டா.....!!

உங்க அப்பா(நல்ல அப்பா மட்டும்) என்னை எப்படி நடத்தறாரோ....?
அது போல நீயும் உன் மனைவியை...கௌரவமா மதிச்சுக் குடும்பம் நடத்துடா மகனே..!!

உனக்கும் மருமகளா வந்திருக்கும் மகளுக்கும் என் அன்பும் வாழ்த்துகளும்... ஆசீர்வாதங்களும்...

தொப்பையைக் குறைக்க



2 டேபிள் ஸ்பூன் சீரகத்தை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை கொதிக்க வைத்து, வடிகட்டி, அதில் சிறிது எலுமிச்சையை பிழிந்து, இரண்டு வாரத்திற்கு தினமும் காலையில் குடித்து வர, விரைவில் உடல் எடை குறைந்திருப்பதைக் காணலாம்.

*•• சீரகப் பொடி மற்றும் தயிர்*

மற்றொரு வழி சிறிது தயிரில் 1 டீஸ்பூன் சீரகப் பொடி சேர்த்து கலந்து தினமும் உட்கொண்டு வந்தால், உடல் எடையைக் குறைக்கலாம்.

*•• சீரகப் பொடி மற்றும் தேன்*

1/2 டீஸ்பூன் சீரகப் பொடியை நீரில் சேர்த்து, அதோடு தேன் கலந்து தினமும் குடித்து வருவதன் மூலமும் உடலில் உள்ள கொழுப்புக்களைக் கரைத்து உடல் எடையைக் குறைக்கலாம்.

*•• சூப்புடன் சீரகப் பொடி*

உடல் எடையைக் குறைக்க நினைப்போர் தினமும் சூப்புடன் சீரகப் பொடியை ஒரு டீஸ்பூன் சேர்த்து கலந்து குடித்து வர, உடல் எடை குறையும்.

*•• எடையைக் குறைக்கும் சீரக ரெசிபி*

எலுமிச்சை மற்றும் இஞ்சி எடையைக் குறைக்க உதவும் பொருட்களில் முதன்மையானவை.

அதிலும் சீரகத்துடன் சேர்ந்தால், இதன் சக்தி அதிகமாகும். அதற்கு ஒரு பாத்திரத்தில் கேரட் மற்றும் பிடித்த வேறு காய்கறிகளை சேர்த்து நன்கு வேக வைத்துக் கொள்ளவும். பின் அந்த காய்கறிகளில் இஞ்சியை துருவிப் போட்டு, எலுமிச்சை சாறு, சீரகப் பொடி சேர்த்து கலந்து, இரவு நேரத்தில் உட்கொண்டு வர, உங்கள் எடை குறைவதை நன்கு காணலாம்.

*தொப்பையைக் குறைக்கும் சீரகம்*

சீரகம் உடலில் கெட்ட கொழுப்புக்கள் சேர்வதைத் தடுத்து, அதிகப்படியான கலோரிகளை எரிக்கும். ஏனெனில் இதில் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்களும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் ஏராளமாக உள்ளது. இதனால் இவற்றை அன்றாட உணவில் எடுத்து வந்தால், கொழுப்புக்களால் அதிகரித்த தொப்பையைக் குறைக்கலாம்.

*•• சீரகத்தின் வேறுசில நன்மைகள்*

மாரடைப்பைத் தடுப்பது, ஞாபக சக்தியை அதிகரிப்பது, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்துவது, இரத்த சோகையை சரிசெய்வது, செரிமானத்தை மேம்படுத்துவது, வாய்வு தொல்லையை நீக்குவது போன்றவற்றை குணமாக்கும் சக்தி சீரகத்திற்கு உண்டு...

Wednesday, 18 April 2018

மனைவி













இவ்வுலகில் இறைவன் உங்களுக்கு கொடுத்த பெரிய வரம் உங்கள் கணவனே என்பதனை மறந்து விடாதீர்கள்.

நீங்கள் வாழப்போகும் இடம் புதிய சூழலாக இருப்பின் அதற்கு அமைய உங்களை மாற்றிக் கொள்ளுங்கள்.

கிடைத்ததை வைத்துக் கொண்டு மகிழ்வாக வாழப் பழகுங்கள்.

உங்கள் கணவரே இவ்வுலகில் மிகவும் அழகானவர், பண்பானவர், கண்கண்ட தெய்வம் என்பதனை மனதில் பதித்துக் கொள்ளுங்கள். 

பிறந்த வீட்டாரைப் போல், புகுந்த வீட்டாரையும் மதித்து, பணிந்து நடக்கத் தவறாதீர்கள்.

கணவனுக்கு விருப்பமில்லாத எதையும் செய்யத் துணியாதீர்கள்.

கணவனுக்கு பிடித்தமான உணவுகளை உங்களுக்கு பிடிக்காவிட்டாலும் சமைத்து பரிமாறத் தவறாதீர்கள்.

கணவனுக்கு விருப்பம் இல்லாதவிடத்து அடம்பிடித்து வேலைக்குப் போக துணியாதீர்கள்.

 கிழமையில் ஒருநாளைக்காவது அப்பா, அம்மா, மாமா, மாமியயைக் கண்டு சுகதுக்கம் கேட்கத் தவறாதீர்கள்.

எதுவித காரணம் கொண்டும், புகுந்த வீட்டு குறை குற்றங்களை உற்ற நண்பிகளிடத்தோ, அல்லது உங்கள் பெற்றோரிடத்தோ அல்லது, உறவுகளிடத்தோ கூறாதீர்கள். 

 கணவன் வீட்டாரை பெருமையாக பேசிக்கொள்ளுங்கள். நீங்கள் அங்கு விவாகம் செய்ததால் உங்களுக்கு மதிப்பும், மரியாதையும் கூடிவிட்டதாக பெருமைப் பட்டுக் கொள்ளுங்கள்.

 உங்கள் அப்பா, அம்மா, உறவினரின் மரியாதையை பேணுவதைப்போல் உங்கள் மாமா, மாமி உறவினர்களின் மரியாதையை பேணுங்கள்

 உங்கள் மாமா, மாமி, உறவினர்களைப் பற்றி உங்கள் அப்பா, அம்மா, உறவினர்கள் உங்களுக்கு கூறுவதை உங்கள் கணவனுக்கு கோள்மூட்டாதீர்கள்

 உங்கள் கணவரை விட நீங்கள் கல்வித் தகமை கூடியவராக அல்லது பதவியில் உயர்ந்தவராக இருந்தாலும்கூட உங்கள் தகமையைப் பற்றி எந்த ஒரு காரணம் கொண்டும் யாரிடமும் கூறாதீர்கள்.

 உங்கள் கணவனிடத்து உங்கள் அன்பையோ, அழகையோ மறைக்காதீர்கள்.

உங்கள் கணவனிடத்து, எதையும் மறைக்காதீர்கள். பொய் சொல்லுவதையோ, உண்மையை மறைப்பதையோ, திருடுவதையோ தவிர்த்துக் கொள்ளுங்கள்.

 உங்கள் கணவனுக்கு ஆலோசனை கூறுவதில் நல்ல மந்திரியாகவும், உணவு தயாரிப்பதில் அன்னையைப் போலவும், உபசரிப்பதில் நல்ல சேவகியாகவும், தாம்பத்திய உறவில் தாசிப் பெண்போலவும் நடக்க பழகிக் கொள்ளுங்கள்

 பணியிலிருந்தோ அல்லது பயணத்திலிருந்தோ கணவன் வீட்டிற்கு வரும்போது அவரை நல்ல வார்த்தைகள் கூறி வாழ்த்துக்களுடன் வரவேற்று உபசரியுங்கள்.

 முகமலர்ச்சியுடன் கணவரை எதிர்கொள்ளுங்கள்.

 சந்தோஷமான செய்தியை முதலில் தெரிவியுங்கள், கவலையான செய்தி இருந்தால் உங்கள் கணவர் அமைதி அடையும் வரை பிற்படுத்தி வையுங்கள்.

அன்பான, அரவணைப்பான வார்த்தைகளை உங்கள் கணவரிடத்தில் பயன்படுத்துங்கள் (வேலையிலோ அல்லது வரும் வழியிலோ ஏதாவது பிரச்சினைகளைச் சந்தித்திருக்கலாம்).

கணவருக்காக அக்கறையுடன் தயாரிக்கப்பட்ட உணவை சரியான நேரத்திற்குள் பரிமாறுங்கள் (கணவருடன் சேர்ந்து உண்ணும் வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்).

 உங்கள் கணவரிடம் மென்மையான குரலில் அழகாக, அன்பாக பேசுங்கள். மற்ற ஆண்களுக்கு முன்னால் இவ்வாறு குழைந்து பேசக் கூடாது என்பதை மறந்துவிடாதீகள். 

உங்கள் கணவரிடத்தில் உம்!! இல்லை!! என்று சொல்லி அவரின் பேச்சை உதாசீனப்படுத்தாதீர்கள்.

வீட்டிற்கு கணவன் வருவதற்கு முன்னால் உங்களை அழகுபடுத்திக் கொள்ளுங்கள். (அழுக்கான ஆடையுடன் முகத்தில் எண்ணெய் வடிந்திருக்கும் நிலையில் உங்கள் கணவரிடம் செல்லாதீர்கள்)

 கணவனின் துணிவகைகளை துவைத்து அவரை அழகான ஆடை அணிந்து அழகு பாருங்கள்.

 எந்தப் பெண் தன் கணவன் தன்னைப் பார்க்கும் போது அவனை மகிழ்விப்பாளோ, அவன் கட்டளையிட்டால் அவனுக்கு கீழ்ப்படிந்து நடப்பாளோ, தன் விஷயத்திலும், தன்னுடைய பொருளிலும் தன் கணவனுக்கு விருப்பமில்லாத எந்தப் போக்கையும் மேற்கொள்ளமாட்டாளோ அத்தகையவளே, அனைவரையும் விடச்சிறந்தவள்”. 

உங்களுடைய கணவன் ஏழையாகவோ அல்லது சாதாரண வேலையிலோ இருந்தால் அதற்காக வாழ்க்கையை வெறுத்துவிடாதீர்கள். (பிறரின் கணவர்கள் போல் நீங்கள் இல்லையே என ஒப்புமையும் செய்யாதீர்கள். அது உங்கள் கணவருக்கு வெறுப்பை உருவாக்கும்).

ஏழைகள், உடல் ஆரோக்கியம் இல்லாதவர்கள், ஊனமுற்றோர்கள் போன்ற நம் நிலைக்கு கீழாக உள்ளவர்களை பார்த்தேனும் இறைவன் நம்மை இந்த நிலைக்கு உயர்த்தி வைத்திருப்பதை நினைத்து சந்தோஷப்படுங்கள்.

தன்னம்பிக்கையும் மற்றும் கணவருக்கு நீங்கள் அளிக்கும் ஊக்கமும்தான் உங்கள் வாழ்க்கையின் முன்னேற்றம் என்பதை மறந்துவிடாதீர்கள். உலக விஷயத்திலேயே மூழ்கிவிடாதீகள்.

உங்கள் செலவை குறைத்து அதனை தர்மம் செய்யவும், ஏழைகள் மற்றும் தேவைப்படும் மக்களுக்கு கொடுக்கவும் ஆர்வம் காட்டுங்கள்.

அவசியம் இல்லாத பொருள்களை வாங்கித் தரும்படி கேட்டு கணவனை நச்சரிக்காதீர்கள். (உங்கள் பெற்றோர்கள் வீட்டில் கிடைத்த மாதிரி கணவனிடம் எதிர்பார்க்காதீர்கள். உங்கள் கணவனின் வசதிக்கேற்ப உங்களை மாற்றிக்கொள்ளுங்கள்).

 செல்வமும், பிள்ளைகளும் இவ்வுலக வாழ்வின் உங்கள் சொத்துக்களாகும். அவற்றைப் பேணி நல்லமுறையில் வளர்த்தெடுக்க உங்கள் முழு முயற்சிகளையும் முன்னெடுங்கள்.

உங்கள் கணவர் உங்களுக்கு செய்யும் உதவிகளுக்கு உடனுக்குடன் நன்றி செலுத்தும்போது உங்கள் கணவரை மேலும் உதவி செய்பவராகவும் உங்களை பலவழிகளில் சந்தோஷப் படுத்துபவராகவும் காண்பீர்கள்.

 உங்கள் கணவரின் நன்றியை நீங்கள் மறக்கும்போது, உங்கள் கணவர் "ஏன் இவளுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று தன்னைத்தானே நொந்து கொள்வார்”. 

 உங்கள் கணவர் ஏதேனும் விபத்தின் காரணமாக ஊனம் ஏற்பட்டுவிட்டால் அல்லது வியாபாரத்தில் நஷ்டமடைந்துவிட்டால் உங்கள் சொத்தின் மூலமாகவோ கணவனுக்கு 'தோள்” கொடுங்கள்.

 உங்கள் கணவரை எது கோபப்படுத்துமோ அதை தவிர்த்துவிடுங்கள். அப்படி தவிர்க்க முடியாத சூழ்நிலையில் சமாதானப் படுத்துங்கள்.

 நீங்கள் பிழை செய்திருந்தால் மன்னிப்புக் கேளுங்கள். (கோபமான சூழ்நிலையில் ஒருவருக்கொருவர் வீசிக் கொள்ளும் ‘உப்பு சப்பு” பெறாத வார்த்தைகள்தான் விவாகரத்தில் முடிகிறது என்பதை எல்லோருமே அறிவார்கள்).

 கணவர் தவறு செய்திருந்தால் அதனை நல்ல சூழ்நிலை பார்த்து சொல்ல முயற்சி செய்யுங்கள். அல்லது அவருடைய கோபம் குறையும் வரை அமைதியாகக் காத்திருந்து சாந்தமான முறையில் அவருடன் பேச்சுவார்த்தை நடத்துங்கள்.

வெளி விஷயத்தின் காரணமாக கோபம் இருந்தால், கோபம் குறையும் வரை காத்திருந்து பிறகு அவரை சமாதானப்படுத்த முயற்சி செய்யுங்கள். (உதாரணமாக வேலையில் பிரச்சினை, மற்றவர்களால் அவமானப் படுத்தப்பட்டிருத்தல்)

♥அவருடைய பிரச்சினைகளை அறிந்து கொள்ளும் பொருட்டு அந்த கோபமான நிலையிலேயே பற்பல கேள்விகளை எழுப்பி தொந்தரவு செய்யாதீர்கள்.

*♥ "என்ன நடந்தது? என்று நீங்கள் சொல்லித்தான் ஆகவேண்டும்;” என்றோ அல்லது எது உங்களை கோபப்படுத்தியது? என்று எனக்கு தெரிந்துதான் ஆகவேண்டும்! என்றோ அல்லது நீங்கள் எதையோ மறைக்கிறீர்கள்! அதைத் தெரிந்து கொள்வதற்கு எனக்கு முழு உரிமை இருக்கின்றது! என்றோ கேள்வி கணைகளை எழுப்பி எரிகிற வீட்டில் எண்ணெய்யை ஊற்றாதீர்கள்.

♥ நல்லொழுக்கமுள்ள மனைவிமார்கள் (தங்கள் கணவனிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். (தங்கள் கணவர்) இல்லாத சமயத்தில் அவர்களின் (செல்வம், உடைமை, மானம், மரியாதை) அனைத்தையும் பாதுகாப்பவர்களாகவும் இருப்பார்கள். (தங்கள் கணவருக்கு மாறு செய்ய மாட்டார்கள்). 

♥ தடுக்கப்பட்ட நட்புகளைவிட்டும் உங்களை காத்துக் கொள்ளுங்கள்.

♥ குடும்பத்தின் ரகசியங்களை மற்றவரிடம் சொல்லாதீர்கள். முக்கியமாக தாம்பத்தியம் மற்றும் உங்கள் கணவர் பிறரிடம் சொல்ல விரும்பாத விஷயங்கள்)

♥ வீட்டில் உள்ள பொருள்களையும் குழந்தைகளையும் பேணிப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

♥ கணவனுடைய பணத்தையும் சொத்துக்களையும் பாதுகாத்து வையுங்கள்.

♥ கணவனுடைய அனுமதியின்றி வீட்டைவிட்டு வெளியேறாதீர்கள்.

♥ உங்கள் கணவருக்குப் பிடிக்காதவர்களை வீட்டிற்குள் வர அனுமதிக்காதீர்கள்.

♥கணவர் வீட்டில் இருக்கும் நேரத்திலும், இல்லாத நேரத்திலும் அவருடைய பெற்றோர்களுடனும் உறவினர்களுடனும் நல்லபடியாக நடந்து கொள்ளுங்கள்.

♥ கஷ்டங்களை எதிர்கொள்ளும்போது பொறுமையுடன் இருங்கள்.

♥ வாழ்க்கையில் இழப்புகள் சோதனைகள் (உங்களுக்கு, உங்கள் கணவருக்கு, குழந்தைகளுக்கு, உறவினர்களுக்கு, சொத்துக்களுக்கு…) ஏற்படும்போதும் இறைவனின் வேண்டிக்கொள்ளுங்கள்.

♥உங்களிடம் உங்கள் கணவர் மோசமாக நடந்து கொண்டால்கூட அவரிடம் நீங்கள் நல்ல முறையாக நடந்து பாடம் புகட்டுங்கள். (இவள் நம்மீது இவ்வளவு அன்பு பொழியும் போது நாம் ஏன் இவளிடம் நல்ல முறையாக நடந்தக் கொள்ளக்கூடாது என்று நினைத்து வருந்தி தன் தவறுகளைத் திருத்திக் கொள்வார்).

♥உங்கள் கணவருடன் ஒத்துழையுங்கள். கடமையான மற்றும் உபரியான வணக்கங்களை அவருக்கு நினைவுபடுத்துங்கள்.

♥ உங்களுடைய அன்புக் கணவருக்கு ஒத்தாசையாக இருந்து அவரை ஊக்கப்படுத்தி, அவருக்குத் தேவையான நல்ல கருத்துகளைச் சொல்லி அவரின் துன்பங்களில் பங்கெடுத்துக் கொள்ளுங்கள்.

♥ வீட்டை சுத்தமாகவும், அழகாகவும் நேர்த்தியாகவும் வைத்துக் கொள்ளுங்கள்.

♥ பொழுது போகாத நேரங்களில் வீட்டுப்பொருள்களை சீர்படுத்தி வையுங்கள், உங்கள் கைகளால் தயாரித்த அலங்காரப் பொருள்களைக் கொண்டு வீட்டை அழகுபடுத்துங்கள். (உங்கள் கணவர் மிக சந்தோஷம் அடைவார்).

♥ தேர்ந்தெடுக்கப்பட்ட தரமான உணவுகளையும் புதிய வகையான உணவுகளையும் தயாரித்து உங்கள் கணவருக்கும் குழந்தைகளுக்கும் கொடுங்கள்.

♥ அனைத்து வீட்டு வேலைகளையும் நேர்த்தியாகச் செய்ய கற்றுக்கொள்ளுங்கள்.

♥ பணத்தை கணவனுடைய அனுமதி இல்லாமல் செலவழிக்காதீர்கள். (அது தர்மமாக இருந்தாலும் சரி. ஆனால், உங்கள் கணவர் இதற்கு உடன்படுவார் என்பது தெரிந்தால் செய்யலாம்)

♥ வீடு, வாகனம் போன்றவற்ளை கணவன் வீட்டில் இல்லாத போது பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

♥ குழந்தைகளை சுத்தப்படுத்தி நல்ல ஆடைகளை அணிவித்து அழகூட்டுங்கள். குழந்தைகளுடைய பாதுகாப்பு மற்றும் கல்வி விஷயங்களில் பேணி நடந்து நல்ல பண்புகளை புகட்டுங்கள்.

♥ கெட்ட பெண்களை அல்லது நடிகைகளைப் பின்பற்றுவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

♥கணவனுக்கு சமயோசித முடிவுகள் தேவையானபோது சொல்லிக் கொடுங்கள். (முதலில் அதற்கான அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்)

♥ கணவனுடைய திருப்தியைப் பெற்ற நிலையில் எப்பொழுதுமே இருக்க முயற்சி செய்யுங்கள்.

♥ ஒரு பெண் தன் கணவனது திருப்தியைப் பெற்ற நிலையில் மரணித்துவிட்டால் அவள் சொர்க்கத்தில் நுழைவாள். தீர்க்க சுமங்கலியாவாள்

நல்ல மனைவி இல்லத்தையும் சுவர்க்கமாக்குவாள். துர்நடத்தையுள்ள மனைவி இல்லத்தையும் சுடுகாடு ஆக்குவாள் 

உடற்பயிற்சி செய்யாதவர் எனில் இன்றிலிருந்தே உடற்பயிற்சியை ஆரம்பியுங்கள்




40வயதில் பெண்களின் உடல், 20 வயதில் இருப்பது போல் இருக்காது, வயதாக ஆக பெண்களின் உடல் பல மாறுபாடுகளை எதிர்கொள்கிறது. இதையெல்லாம் தவிர்க்கவேண்டும் என்றால் சில உடற்பயிற்சிகளை பெண்கள் தொடர்ந்து மேற்கொள்வது கட்டாயம். தசைகளை வலுமைப்படுத்த, எலும்பு அடர்த்தியை காப்பாற்ற, சீக்கிர‌ம் வயதான தோற்றம் ஏற்படுவதை தடுக்க, உடல் அமைப்பை அழகாக்க என எல்லாவற்றிற்கும் உடற்பயிற்சி அவசியம். 40 வயது பெண்களால் 20 வயது பெண்களைப் போல் கடின மான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள முடியாது. நீங்கள் ரொம்ப வலுவானவராக மூட்டுவலி பிரச்னை அற்றவராக இருப்பின் சிறு வயது பெண்கள் மேற்கொள்ளும் பயிற்சிகளை மேற்கொள்ளலாம். மற்ற பெண்கள் செய்ய வேண்டிய 5 அடிப்படை பயிற்சிகள்.

ஸ்குவாட்
நின்றபடி கைகளை முன்னால் சாதாரணமாக நீட்டியபடியோ அல்லது கோர்த்தோ தங்கள் வசதிக்கேற்றபடி வைத்துக்கொள்ள வேண்டும். கைகளை நீட்டியபடியே மெல்ல மெல்ல முட்டியை மடக்கி அமர வேண்டும். பின்பகுதியை மெல்ல பின்னால் கொண்டு செல்ல வேண்டும். உடலின் எடையை கால்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும். உங்கள் பின்புறம் தரைக்கு இணையாக இருக்க வேண்டும். மார்பகங்கள் தூக்கியபடி இருக்க வேண்டும். உங்கள் முட்டியின் நீளம் கால் கட்டை விரல் நீளத்தைத் தாண்டக்கூடாது. படத்தில் உள்ளது போல் அமர வேண்டும். இப்படி 15 முறை செய்ய வேண்டும். இது ஒரு செட். இப்படி மூன்று செட்கள் வரை செய்யலாம். கட்டாயம் 2 செட்களாவது செய்ய வேண்டும்.

ப்ளாங்க்
தரையில் புஷ் அப் பொஷிசனில் படுக்க வேண்டும். கைமுட்டிகளை 90 டிகிரிக்கு மடக்கி உடலின் எடையை தாங்க வேண்டும். உங்கள் தலை தரையைப் பார்த்தபடி இருக்கவேண்டும். தலையைத் தவிர்த்து உங்கள் உடல் பகுதி ஒரே நேர் அமைப்பில் இருக்க வேண்டும். வளையக் கூடாது. மெதுவாக மூச்சை உள்ளிழுத்து மெதுவாக வெளியேற்ற வேண்டும். உங்களால் முடிந்த வரை அதே பொஷிசனில் நீடிக்கலாம். குறைந்தபட்சம் ஒரு நிமிடம் வரை இருக்க வேண்டும்.

லெக் ரைஸ்
நேராக படுக்கவும். உங்கள் கைகளை இருபுறமும் சாதாரணமாக வைத்துக்கொள்ளவும். ஒரு காலை சிறிதளவு மடக்கியோ, நீட்டியோ வைத்திருக்க வேண்டும். மற்றொரு காலை 90 டிகிரி அளவில் உங்கள் உடல் ‘L’ வடிவத்தில் வரும் வரை காலை தூக்க வேண்டும். மறுபடி அதனை 30டிகிரிக்குக் கொண்டு வர வேண்டும். இப்படி 15 முறை செய்ய வேண்டும். இது ஒரு செட். இப்படி இரண்டு செட்கள் வரை செய்யலாம். அடுத்து இன்னொரு காலை தூக்கி இப்படி செய்ய வேண்டும்.

லஞ்செஸ்
நின்று கொண்டு கைகளை தொங்கபோட வேண்டும். தோள்களை பின்புறமாக கொண்டு செல்ல வேண்டும். மெல்ல வலது காலை 90 டிகிரி அளவில் மடக்கி உட்கார வேண்டும். இடது காலை மடக்க வேண்டும். ஆனால் தரையில் படக்கூடாது. அப்படியே மெல்ல எழுந்திருக்க வேண்டும். இப்படியாக மொத்தம் 20 முறைகள் செய்ய வேண்டும். இது ஒரு செட். இப்படி இரண்டு செட்கள் வரை செய்யலாம். மறுபடி இடது காலில் இதனை செய்ய வேண்டும்.

பர்பீஸ்
நேராக நின்று கொள்ள வேண்டும். ஸ்குவாட் பொஷிசனில் உட்கார வேண்டும். (உங்கள் பாதங்களுக்கு முன் உங்கள் கைகளை தரையில் வைக்க வேண்டும்) பின்னர் ப்ளாங்க் பொஷிசனுக்கு (தரையில் புஷ் அப் பொஷிசனில் படுக்க வேண்டும். கைமுட்டிகளை 90 டிகிரிக்கு மடக்கி உடலின் எடையை தாங்க வேண்டும். உங்கள் தலை தரையைப் பார்த்தபடி இருக்கவேண்டும்.) உடம்பை கொண்டு செல்ல வேண்டும்.

மறுபடி ஸ்குவாட் பொஷிசனுக்கு வந்து மறுபடி நிற்கும் நிலைக்கு வரவேண்டும். இப்படியாக மொத்தம் 15 முறைகள் செய்ய வேண்டும். இது ஒரு செட். இப்படி மூன்று செட்கள் வரை செய்யலாம். கட்டாயம் 2 செட்களாவது செய்ய வேண்டும். தொடர்ச்சியாக இந்தப் பயிற்சிகளை செய்து வருவது 40 வயதைத் தாண்டிய பெண்களுக்கு ஆஸ்டியோபோரோஸிஸ் மற்றும் எலும்புகள் உடைதல் போன்ற பிரச்னைகளிலிருந்து காப்பாற்றும். வயதாக ஆக குறையும் வளர்சிதை மாற்றம் (மெட்டபாலிஸம்) பூஸ்ட் அப் ஆகும். உங்கள் உடல் வலுவாக இருக்கும் போது தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

உடற்பயிற்சியின் போது மூளைக்கு ரத்த ஓட்டம் அதிகரிப்பதால் புத்திக்கூர்மை அதிகரிக்கும். வயதாக ஆக தூக்கக் குறைபாடு ஏற்படும். முறையான உடற்பயிற்சி நல்ல தூக்கத்திற்கு வழிவகுக்கும். வயதாவதை தடுக்க முடியாது. ஆனால் முறையான உடற்பயிற்சிகளின் மூலம் விரைவிலே உடல் வலுவிழப்பதை தடுக்க முடியும். எனவே நாற்பது வயதை தாண்டிய பெண்களே நீங்கள் இதுவரை உடற்பயிற்சி செய்யாதவர் எனில் இன்றிலிருந்தே உடற்பயிற்சியை ஆரம்பியுங்கள்.