Monday, 21 May 2018

சிறுநீரகம் தொடர்பான வியாதியை குணமாக்கும் நெருஞ்சி

சிறுநீரகம் தொடர்பான வியாதியை குணமாக்கும் நெருஞ்சி

நெருஞ்சில் ஒரு அற்புதமான மூலகை ஆகும், இதன் இலை, வேர், காய், பூ, தண்டு மற்றும் முள் என அனைத்தும் பயன்தரும். நெருஞ்சில் மணற்பாங்கான இடங்களில் தரையில் படர்ந்து காணப்படும். மஞ்சள் நிற மலர்களுடையது.
இதன் இலையை தண்ணீரில் சிறிது நேரம் வைத்தால், தண்ணீரின் அடர்த்தி மிகுந்து காணப்படும். எண்ணெய்போல் பிசுபிசுப்பு ஆகிவிடும். இது காமவர்த்தினி. ஆண்மை பெருக்கியாகவும், இந்த நீரில் பட்டு, நூல் துணிகளை ஊற வைத்து எடுக்க அழுக்கு, கறை அகலும். பட்டுத்துணிகளை சுத்தப்படுத்தும்.
நாம் உண்ணும் உணவின் சாரத்தின் பகுதி சிறு நீரகத்தில் நீராக பிரிக்கப்பட்டு சிறுநீராய் வெளியாகிறது. இந்நீரில் பல வகைப்பட்ட உப்புகள் நிறைந்திருக்கின்றன. இந்த உப்புகள் சிலவேளை சிறுநீரகத்தில் தங்கி உறைந்து பெருத்து வளர்கிறது. இதுவே கல்லடைப்பு நோயாகும். நெருஞ்சில் கல்லடைப்பு, நீரடைப்பு, நீர் எரிச்சல், நீர் வேட்கை, வெள்ளை நோய், வெப்ப நோய், சொட்டு நீர், முதலியவற்றை நீக்கும் குணமுடையது.
உடம்பு எரிச்சல், வெண் புள்ளி, மேகம் முதலியவற்றை யானை நெருஞ்சில் தீர்க்கும் குணமுடையது. ஆனை நெருஞ்சில் மலட்டுத் தன்மை, வெள்ளை, நீர்க்கடுப்பு, விந்தணு பெருக்குதல் போன்ற வேலைகளை செய்யும்.
நெருஞ்சில் செடி இரண்டு வேருடன் பிடிங்கி, ஒரு பிடி அருகம்புல்லுடன் சட்டியில் போட்டு ஒரு லிட்டர் நீர்விட்டு அரை லிட்டராகச் சுண்டக் காய்ச்சி குடி நீராகப் பயன்படுத்தலாம். 50 மி.லி. அளவு இரு வேளை மூன்று நாள் வெறும் வயிற்றில் குடித்து வர உடல் வெப்பம் தணியும். கண் எரிச்சல், நீர் வடிதல், சிறுநீர் சொட்டாக வருதல் போன்றவை குணமாகும்.
நாட்பட்ட வெள்ளை நோயுடன் கூடிய நீர் கடுப்பிற்கு நெருஞ்சில் காயையும், வேரையும் ஒரே அளவாக எடுத்துக் கொண்டு அதனுடன், பச்சரிசி சேர்த்து கஞ்சி வைத்து அருந்தி வர குணமாகும்.

Sunday, 20 May 2018

பெண்களுக்கு படர்தாமரை

நமது சருமங்களில் வரும் நோய்களில் ஒன்றான இந்த படர்தாமரை நமக்கு அதிக தொல்லையை கொடுக்க கூடியது. இந்த படர்தாமரை வந்தால், இடம், பொருள், ஏவல் என்று எதுவும் பார்க்காமல், சொறிய தோன்றும்.. பூஞ்சையினால் ஏற்படக்கூடிய படர்தாமரை எனும் நோய் கோடைக்காலங்களில் தோலில் அதிகமாக ஏற்படுகிறது. இது பெண்களை விட ஆண்களை அதிகம் தாக்கும்.

பிறப்புறுப்பில் தொடங்கி, தொடை இடுக்குகளில் பரவும் இந்த நோயால் சொறியப்படும் இடம் சிவந்திருக்கும். இந்த நோய், வேதனையான அரிப்பை பல முறை உண்டாக்கும். இந்த படர்தாமரை நோய் எப்படி வருகிறது.. அது வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? படர்தாமரை நோயை எப்படி குணப்படுத்தலாம் என்பது பற்றி எல்லாம் இந்த பகுதியில் விரிவாக காணலாம்.

*காரணம் என்ன?*

‘ஃபங்கஸ்' (Fungus) என அழைக்கப்படுகிற காளான் படை நோய்கள் வருவது அதிகம். மக்கள்தொகை பெருக்கம், பொதுச் சுகாதாரக் குறைவு, உடலில் அதிகம் வியர்ப்பது போன்ற காரணங்களால் காளான் நோய்கள் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவும் வாய்ப்பு ஏற்படுகிறது.

*சுய சுத்தம்*

சுயச் சுத்தம் குறைவாக உள்ளவர்களுக்கும், உடல் பருமன், நீரிழிவு உள்ளவர்களுக்கும், ஊட்டச்சத்து குறைந்தவர்களுக்கும் மக்கள் நெருக்கடி மிகுந்த இடங்களில் வசிப்போருக்கும் தண்ணீரில் அதிகம் புழங்குபவர் களுக்கும் காளான் கிருமிகள் பாதிக்கிற வாய்ப்பு அதிகம்.

இந்தக் கிருமிகள் மண்ணிலும், மனிதர்கள் மற்றும் விலங்குகளிடத்திலும் வசிக்கக்கூடியவை. எனவே, காளான் நோயுள்ள ஒருவருடன் நெருங்கிப் பழகும்போதும், வீட்டில் வளர்க்கப்படும் நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகளிடமிருந்தும் இது பரவ வாய்ப்புள்ளது. அசுத்தமான இடங்களில் குழந்தைகள் விளையாடும்போது மண்ணிலிருந்து கிருமிகள் பரவி நோய் வருவதுண்டு.

*அறிகுறிகள்*

படர் தாமரை பரவிய இடங்களில், தோல் நிறமாற்றம் அடைந்து அடர் கறுப்பு நிறமாகிவிடும். தீராத அரிக்கும் தன்மை உடையது. இதை சொறிந்துவிட்டால் அதிலிருந்து வெளியாகும் நீர்மத்தினால், மற்ற பாகங்களுக்கும் பரவும்.

படர் தாமரை, தலையில் தாக்கினால், அரிப்பை ஏற்படுத்தும். இதனால் தலைமுடி பாதிக்கப்பட்டு, சிவப்பு படர்தாமரை வளையங்கள் தோன்றி நமைச்சல் அதிகரிக்கும். உடலில் எங்கு வேண்டுமானாலும், இந்த படர்தாமரை வரும்.

*நகங்களில்...*

பாக்டீரியா தாக்குதல், நகத்தில் சிதைவை ஏற்படுத்தும். கால் விரல் நகங்களில் அதிகம் வரும். அவ்வப்போது கால் விரல்களை கவனித்து நகங்களை வெட்டிவிட வேண்டும்.

*எந்த இடத்தில்*
*வரும்?*

படர் தாமரை ஒருவருக்கொருவர் தொற்றிக் கொள்ளும் சரும வியாதி. அந்த நுண்ணுயிர்களுக்கு பிடித்த ஈரமான இடம் கால் விரல்களின் இடுக்கு. இது, முதலில் சிறு பகுதியில் தாக்கி, பாதம் முழுவதும் புண்ணாகும்.

படர் தாமரை பரவும் இடங்கள் அக்குள், பிறப்புறுப்பு, தொடை, தொடை இடுக்குகள், கால் நகங்கள், கழுத்து மடிப்பு கால் இடுக்குகள், பெண்களுக்கு மார்பகங்களின் கீழ் சதை மடிப்புகளில் வரும்.

*பெண்களுக்கு..*

முக்கியமாக, வீட்டு வேலை செய்யும் பெரும்பாலான பெண்களுக்கு இடுப்பைச் சுற்றி, இந்தத் தொற்று இருக்கும். இவர்களுக்கு அதிகமாக வியர்க்கும் என்பதாலும், ஈரம் அதிகம் இருக்கும் இடங்களில் அதிக நேரம் பணி செய்வதாலும் கை, கால்களில், ஈரத்தில் இருக்கும் காளான் கிருமிகள் எளிதாகத் தாக்கி நோயைத் தருகின்றன. வீட்டில் ஒருவர் உடுத்திய சேலை, சுடிதார், உள்ளாடை போன்றவற்றை அடுத்தவர் உடுத்தும்போது, இது மிக எளிதில் பரவிவிடுகிறது.

*குளித்தல்*

படர்தாமரை உங்களுக்கு வராமல் இருக்க வேண்டும் என்றால் நீங்கள் கண்டிப்பாக தினமும் இருமுறை குளிக்க வேண்டும். தினமும் இருமுறை குளிப்பதால், உடலில் வியற்வையினால் உண்டான கிருமிகள் அழிந்து உடல் சுத்தமாக இருக்கும். இதனால் படர்தாமரை வராது.

*அழுக்கு துணிகள்*

சிலர் துவைக்காமலேயே ஒருமுறை பயன்படுத்திய ஆடைகளை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவார்கள். இப்படி பயன்படுத்த கூடாது.. சலவை செய்த துணிகளையே பயன்படுத்த வேண்டும். இதனை பின்பற்றினால் படர்தாமரையை தடுக்க முடியும்.

*மிளகு*

மிளகை நெய்யுடன் சேர்த்து நன்கு அரைத்து இரவு படுக்கப் போகும் முன்பாக படர்தாமரை உள்ள இடத்தில் பூசி வைத்திருந்து காலையில் சீயக்காய் பொடியை தேய்த்து கழுவிவிட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் உடலில் ஏற்படும் படர்தாமரை குறையும்.

*அருகம்புல்*

அருகம்புல்லும், மஞ்சளும் சம அளவு எடுத்து அதை நன்கு அரைத்து படர்தாமரையில் பூச படிப்படியாக படர்தாமரை மறையும்.

*பூவரசங் காய்*

பூவரசங் காயை உடைத்தால் அதில் மஞ்சள் நிறமான திரவம் வெளிவரும். இதனை படர்தாமரை, தேமல் மீது தடவினால் தேமல், படர்தாமரை குறையும்.

*சந்தனம்*

சந்தனக்கட்டையை எலும்மிச்சம் பழ சாற்றில் உரைத்து பசையாக செய்து பாதிக்கப்பட்ட இடத்தில் பூசி வந்தால் படர்தாமரை குணமாகும்.

*குப்பை மேனி*

ஒரு பாத்திரத்தில் 2 பங்கு தேங்காய் எண்ணெய் விடவும். ஒரு பங்கு குப்பை மேனி மற்றும் கீழா நெல்லி சேர்ந்த இலை பசை சேர்க்கவும். சிறுதீயில் வைத்து தைலப்பதத்தில் காய்ச்சவும். ஆற வைத்து எடுத்து வைத்து பூசி வர படர்தாமரை சரியாகும்.

தோலை பற்றி தொல்லை தரும் படர்தாமரைக்கு குப்பை மேனி மருந்தாகிறது. இது பூஞ்சை காளான்களை போக்க கூடியது. நுண்கிருமிகளை அழிக்க கூடியது.

*கீழாநெல்லி*

கீழாநெல்லி மஞ்சள் காமாலைக்கு மட்டும் இல்லை.. தோல் நோய்களை போக்கும் தன்மையும் கொண்டது. கீழாநெல்லியை அரைத்து பற்று போட்டால் படர்தாமரை நோய் விலகும்.

*பூண்டு*

பூண்டு இந்த படர்தாமரைக்கு மருந்தாக பயன்படுகிறது. ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் விட்டு நசுக்கி வைத்த பூண்டு பற்களை சேர்க்கவும். இதை தைலப்பதத்தில் காய்ச்சி எடுக்கவும். வடிக்கட்டி படர்தாமரை இருக்கும் இடத்தில் காலை, மாலை வேளையில் பூசி சிறிது நேரம் கழித்து குளித்தால் படர்தாமரை சரியாகும்.

*தும்பை இலைகள்*

தும்பை இலைகளை பயன்படுத்தி மருந்து தயாரிக்கலாம். 2 ஸ்பூன் தும்பை இலை பேஸ்டை எடுக்கவும். இதனுடன் ஒரு ஸ்பூன் திரிபலா சூரணம், கால் ஸ்பூன் மஞ்சள் பொடி சேர்த்து கலந்து படர்தாமரை உள்ள இடத்தில் பூசி சிறிது நேரம் கழித்து குளித்துவர படர்தாமரை விரைவில் குணமாகும்

வெறுங்காலில் நடைப்பயிற்சி செய்தால் கிடைக்கும் நன்மைகள்


காலணிகள் அல்லது காலுறைகள் எதுவும் இல்லாமல் வெறும் காலுடன் தரையில் நடப்பதன் பெயர் தான் (Earthing /Grounding) புவி தொடுப்பு அல்லது மண் அணைத்தல்.
1. ஆய்வுகளின்படி ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.
2. இதயத் துடிப்பை சீராக்குகிறது.
3. பல நாள்பட்ட நோய்களுக்கு வீக்கத்தோடு ஒரு தொடர்பு உண்டு என்று நவீன அறிவியல் கருதுகிறது. இந்தப் பயிற்சியின் மூலம் வீக்கம் குறைக்கப்படுகிறது.
4. பல நாள்பட்ட சோம்பலைக் கூட நீக்கும் தன்மை இந்தப் பயிற்சிக்கு உண்டு.
5. நரம்பு மண்டல அமைப்பை சீராக்குகிறது.
6. மன அழுத்தத்தைக் குறைக்கிறது.
7. போதுமான எலக்ட்ரான்கள் உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
8. பூமியிலிருந்து நாம் பெறும் எலக்ட்ரான்கள் ஆன்டிஆக்ஸிடன்ட் விளைவுகளை ஏற்படுத்தும். இவை நமது உடலை வீக்கத்திலிருந்தும், பலவிதமான நோய்கள் ஏற்படுவதற்கு முன்னேயும் பாதுகாக்கும்.
இதன்பிறகு நடைப்பயிற்சி மேற்கொள்ளும்போது காலணிகள் இல்லாமல் பயிற்சி மேற்கொள்ளுங்கள். புல்தரை, கான்கிரீட், மணல் என அனைத்துமே எதிர்மறை எலக்ட்ரான்களைத் தருகிறது.
இந்தப் பயிற்சி செய்து முடித்த 30 நிமிடங்களிலேயே உடலில் ஏற்படும் மாற்றங்களை உணர முடியும். சூரிய ஒளியிலிருந்து கிடைக்கும் வைட்டமின் D போலவும், தண்ணீரீலிருந்து கிடைக்கும் மினரல் போலவும், பூமியிலிருந்து பெறப்படும் எலக்ட்ரான்களும் முக்கியம்.

Tuesday, 1 May 2018

mehndi desingns





வெயில் கால உணவுகள்



* வெந்தயப் பணியாரம்
* கேரட் கீர்
* எலுமிச்சை - புதினா இஞ்சி ஜூஸ்
* வெந்தயத் தேங்காய்ப்பால் கஞ்சி
* கம்மங்கூழ்
* வெள்ளரிக்காய்ப் பாயசம்
* நுங்குப் பால்
* இளநீர்ப் பாயசம்
* வெந்தய மசாலா சாதம்.

கொளுத்தும் கோடை வெயிலுக்கு உடலைக் குளிர்ச்சியாக்கும் சம்மர் கூல் ரெசிபி.

*வெந்தயப் பணியாரம்*

தேவையானவை:
பச்சரிசி - 200 கிராம்
உளுந்து - 6 டீஸ்பூன்
வெந்தயம் - ஒன்றரை டீஸ்பூன்
வெல்லம் - 200 கிராம்
ஏலக்காய் - 2
நெய் - 2 டீஸ்பூன்
தேங்காய்த் துருவல் - 10 டீஸ்பூன்
சோடா உப்பு - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

பச்சரிசி, உளுந்து, வெந்தயம் மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து 4 மணி நேரம் ஊறவைக்கவும். ஏலக்காயைப் பொடித்துக் கொள்ளவும். அடுப்பில் கனமான அடிப்பகுதியுள்ள பாத்திரத்தை வைத்து சிறிது தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். இத்துடன் பொடித்த வெல்லம் சேர்த்துக் கொதிக்கவிட்டு கரைத்து வடிகட்டவும். ஊறிய அரிசி, உளுந்து, வெந்தயத்துடன் வெல்லம் கரைத்த தண்ணீர் ஊற்றி மையாக கிரைண்டரில் அரைக்கவும். மாவை வழித்தெடுத்து ஒரு பாத்திரத்தில் சேர்த்து 8 மணிநேரம் புளிக்கவிடவும். அடுப்பில் வாணலியை வைத்து, நெய் ஊற்றி தேங்காய்த் துருவல் சேர்த்து லேசாக வதக்கவும். இதை புளிக்க வைத்துள்ள மாவில் சேர்த்துக் கலக்கவும். இத்துடன் பொடித்த ஏலக்காய், சோடா உப்பு இரண்டையும் சேர்த்து பணியாரம் ஊற்றும் பதத்துக்குக் கரைத்து, பணியாரக் குழியில் ஊற்றி எண்ணெய் விட்டு இருபுறமும் வேகவைத்து எடுக்கவும்.

*கேரட் கீர்*

தேவையானவை:
கேரட் - கால் கிலோ
பால் - அரை லிட்டர்
சர்க்கரை - 200 கிராம்
ரோஸ் எசன்ஸ் - கால் டீஸ்பூன்
முந்திரி - 15
நெய் - 2 டீஸ்பூன்

செய்முறை:

பாலைக் காய்ச்சி ஆறவைத்துக்கொள்ளவும். முந்திரியை நெய்யில் வறுத்துக்கொள்ளவும். கேரட்டை தோல் சீவி பெரிய துண்டுகளாக நறுக்கி, குக்கரில் வேகவைத்து அதன் தண்ணீரை வடித்து தனியே எடுத்து வைக்கவும். கேரட் ஆறியதும் வடித்த தண்ணீருடன் சேர்த்து மிக்ஸியில் மையாக அரைக்கவும். அடுப்பில் கனமான அடிப்பகுதியுள்ள பாத்திரத்தை வைத்து அரைத்த கேரட் விழுது சேர்க்கவும். இத்துடன் சர்க்கரை சேர்த்து கரையும் வரை நன்றாகக் கிளறி விடவும். பிறகு காய்ச்சிய பால், ரோஸ் எசன்ஸ் சேர்த்துக் கலக்கி முந்திரி சேர்த்து இறக்கவும். இதை சூடாகவோ அல்லது ஃப்ரிட்ஜில் வைத்து சில்லென்றோ பரிமாறவும்

*எலுமிச்சை - புதினா இஞ்சி ஜூஸ்*

தேவையானவை:
எலுமிச்சை - ஒன்று
நாட்டுச் சர்க்கரை -
6 டீஸ்பூன்
புதினா - 2 டீஸ்பூன்
இஞ்சி - ஒரு துண்டு
(2 அங்குல அளவு)
உப்பு - சிறிதளவு
தண்ணீர் - 300 மில்லி

செய்முறை:

புதினாவை சுத்தம் செய்து கொள்ளவும். இஞ்சியைத் தோல் சீவி வைக்கவும். எலுமிச்சைப்பழத்
தைப் பிழிந்து சாறு எடுத்து வைக்கவும். இஞ்சி, புதினாவை தண்ணீருடன் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுழற்று சுழற்றி எடுக்கவும். இத்துடன் நாட்டுச்சர்க்கரை, உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு எலுமிச்சைச்சாற்றையும் ஊற்றிக் கலக்கி வடிகட்டினால் லெமன் மின்ட் ஜூஸ் ரெடி.

*வெந்தயத் தேங்காய்ப்பால் கஞ்சி*

தேவையானவை:
பச்சரிசி - 200 கிராம்
பாசிப்பருப்பு - 50 கிராம்
வெந்தயம் - 2 டீஸ்பூன்
தேங்காய் - ஒரு மூடி (சிறியது)
பொடியாக நறுக்கிய பெரிய
வெங்காயம் - ஒன்று
பூண்டு - 7 பல்
சோம்பு - ஒரு டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்
பட்டை - 2 சிறியது
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - ஒன்று
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
புதினா இலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை

பச்சரிசி மற்றும் பாசிப்பருப்பு இரண்டையும் ஒரு மணி நேரம் ஊற விடவும். தேங்காயைத் துருவி பால் எடுத்து வைக்கவும். சோம்பு மற்றும் பூண்டுப்பபல்லை ஒன்றிரண்டாகத் தட்டி வைக்கவும். அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி சுடானதும், பட்டை சேர்த்துத் தாளித்து, பூண்டு, சோம்பு சேர்த்து வதக்கவும். இத்துடன் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து நன்கு வதங்கியதும் கொத்தமல்லித்தழை, புதினா இலை, வெந்தயம் சேர்த்து வதக்கவும். ஒரு பங்கு அரிசிக்கு 6 பங்கு தண்ணீர் என்கிற அளவில் அரிசி மற்றும் தண்ணீரை குக்கரில் சேர்க்கவும். இத்துடன் தேவையான அளவு உப்பு, பருப்புக் கலவையும் சேர்த்துக் கலக்கி குக்கரை மூடி பத்து விசில் வரும் வரை வேகவைத்து இறக்கவும். ஆறியதும் வெந்தய கஞ்சியை ஒரு கிண்ணத்தில் ஊற்றி தேங்காய்ப்பால் சேர்த்துக் கலக்கவும். பிறகு கொத்தமல்லித்தழை, புதினா இலைகள் தூவிப் பரிமாறவும்.
குறிப்பு:
தேங்காய்ப்பால் சேர்ப்பதற்கு முன்பு கஞ்சி கெட்டியாக இருந்தால், தேவைக்கேற்ப வெந்நீர் சேர்க்கவும். விருப்பப்பட்டால், மிளகுத்தூளும் சேர்த்துக்கொள்ள
லாம்.

*கம்மங் கூழ்*

தேவையானவை:
கம்பு - கால் கிலோ
மோர் - அரை லிட்டர்
உப்பு - தேவையான அளவு
சின்ன வெங்காயம் - 20
தண்ணீர் - தேவையான அளவ

செய்முறை

முதலில் கம்பைக் கழுவி சுத்தம் செய்து தண்ணீரை வடித்து அரை மணி நேரம் வெயிலில் காய விடவும். பிறகு மிக்ஸியில் தேவையான அளவு தண்ணீர் விட்டு கெட்டியாக மையாக அரைத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அடுப்பில் வாய் அகன்ற பாத்திரத்தை வைத்து ஒன்றரை லிட்டர் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடவும். பிறகு அரைத்த கம்பை தண்ணீரில் கெட்டியாகக் கரைத்து கொதிக்கும் தண்ணீரில் சேர்த்துக் கட்டியில்லாமல் கலக்கவும். கம்பு 10 நிமிடம் கொதித்ததும் உப்பு போட்டு கரண்டியால் கலக்கி இறக்கவும். கூழ் சிறிது கெட்டியாக இருப்பது போல் இருந்தால், தண்ணீர் ஊற்றிக் கலந்து கொள்ளலாம். பரிமாறும் போது மோர் ஊற்றிக் கலக்கி நறுக்கிய வெங்காயம் சேர்த்துப் பருகுவதற்குக் கொடுக்கவும்.

*வெள்ளரிக்காய்ப் பாயசம்*

தேவையானவை:
வெள்ளரிக்காய் - ஒன்று (பெரியது)
பால் - 250 மில்லி
சர்க்கரை - தேவையான அளவு
அரிசி மாவு - 3 டீஸ்பூன்
பாதாம் மிக்ஸ் - ஒரு டேபிள்ஸ்பூன்
நெய் - 2 டீஸ்பூன்
ஏலக்காய் (தூளாக்கிக் கொள்ளவும்) - 2
முந்திரி - தேவையான அளவு

செய்முறை:

வெள்ளரிக்காயைத் துருவி வைத்துக்கொள்ளவும். பாலைக் காய்ச்சி ஆறவைத்துக்கொள்ள
வும். அரிசி மாவு, பாதம் மிக்ஸை சிறிது தண்ணீரில் ஒன்றாகக் கலக்கி வைத்துக்கொள்ளவும். முந்திரியை ஒரு டீஸ்பூன் நெய்யில் வறுத்துக்கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து, வெள்ளரிக்காயை மீதமிருக்கும் நெய்யில் வதக்கி, சிறிது தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் வேக விடவும். இத்துடன் அரிசி மாவுக்கலவையைச் சேர்த்துக் கலக்கவும். பிறகு சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்து 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கி ஆறிய பால், முந்திரி சேர்த்துப் பரிமாறவும்.

*நுங்குப் பால்*

தேவையானவை:
நுங்கு - 10
பால் - 200 மில்லி
மில்க்மெய்ட் - 2 டீஸ்பூன்

செய்முறை:

நுங்கை மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். காய்ச்சிய பாலில் மில்க் மெய்ட் மற்றும் அரைத்த நுங்குக் கலவையும் சேர்த்தால் சுவையான ‘நுங்குப்பால்’ ரெடி. பிரிட்ஜில் வைத்தும் பருகலாம். இனிப்பு அதிகம் வேண்டும் என்பவர்கள் சிறிது சர்க்கரை சேர்த்துக்கொள்ளவும்.

*இளநீர்ப் பாயசம்*

தேவையானவை:
இளநீர் - ஒன்று
பால் - அரை லிட்டர்
மில்க்மெய்ட் - 2 டீஸ்பூன

செய்முறை:

இளநீரைத் தனியாகவும், வழுக்கையைத் தனியாகவும் எடுத்து வைக்கவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து அரை லிட்டர் பாலை 400 மில்லி ஆக குறையும் வரை சுண்ட காய்ச்சவும். மில்க்மெய்டையும் சுண்டிய பாலில் சேர்த்துக் கலக்கவும். இளநீரில் உள்ள வழுக்கையை மிக்ஸியில் ஒரு சுழற்று சுழற்றி பால் கலவையில் சேர்த்து இளநீரையும் கலந்து கொள்ளவும். லேசாக சூடானதும் இறக்கிப் பரிமாறவும். இனிப்பு வேண்டுமென்பவர்கள் சிறிது சர்க்கரை சேர்த்துக் கரைத்துக்கொள்ளலாம். பாலை இறக்கிவிட்டு, இளநீரை ஊற்றிக் கலக்கிய பிறகும் கிளாஸில் ஊற்றிப் பரிமாறலாம்.

*வெந்தய மசாலா சாதம்*

தேவையானவை:
அரிசி - 300 கிராம்
வெந்தயம் - 2 டீஸ்பூன்
கீறிய பச்சை மிளகாய் - 2
நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 2
மீடியம் சைஸில் நறுக்கிய தக்காளி - 3
பூண்டு - 10 பல்
சின்ன வெங்காயம் - 15
சோம்பு - ஒரு டீஸ்பூன்
தேங்காய் - ஒரு மூடி
சாம்பார் பொடி - ஒரு டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) - அரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் - சிறிதளவு
மிளகாய்த்தூள் - கால் டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - 4 டீஸ்பூன்

செய்முறை:

அரிசியை 20 நிமிடம் ஊற வைக்கவும். தேங்காயைத் துருவி பால் எடுத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை ஒன்றிரண்டாகத் தட்டி வைக்கவும். அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, வெந்தயம் சேர்த்துத் தாளிக்கவும். பிறகு சோம்பு சேர்த்து பொரிந்ததும் வெங்காயம், பூண்டு, பச்சைமிளகாய், தக்காளி என ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து வதக்கி நிறம் மாறியதும், சின்ன வெங்காயம் சேர்த்து சுருள வரும் வரை வதக்கவும். இத்துடன் சாம்பார் பொடி, மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), மஞ்சள்தூள், உப்பு சேர்த்து மசாலா வாசனை போகும் வரை வதக்கவும். இத்துடன் தேங்காய்ப்பால் மற்றும் தண்ணீரை சமஅளவில் சேர்த்து ஊற்றவும். பிறகு ஊறவைத்த அரிசியைச் சேர்த்து வெந்ததும் எடுத்துப் பரிமாறவும்.

பி‌த்த‌‌ம் தொட‌ர்பான ‌பிர‌ச்சனைகளையு‌ம், அதனை போ‌க்கு‌ம் எ‌ளிய இய‌ற்கை மரு‌த்துவ முறைகளையு‌ம் இ‌ப்போது பா‌ர்‌‌‌ப்போ‌ம்.



விரு‌‌ப்பமான உணவுக‌ள், மசாலா உணவுக‌ள் போ‌ன்றவ‌ற்றை‌ப் பா‌ர்‌த்தா‌ல் சா‌ப்‌பிடலாமா, வே‌ண்டாமா எ‌ன்ற அ‌ச்ச‌ம். அ‌திக‌ம் சா‌ப்‌பிடலமா? சா‌ப்‌பி‌ட்டா‌ல் ‌ஜீரணமாகுமா? நெ‌ஞ்சு க‌றி‌க்குமா? எது‌க்‌கி‌க்கொ‌ண்டே இரு‌க்குமா? இதுபோ‌ன்ற கே‌ள்‌விகளு‌க்கெ‌ல்லா‌ம் மு‌க்‌கிய காரணமாக ‌விள‌ங்குவது ‌பி‌த்த‌ம். 

இ‌ந்த ‌பி‌த்த‌‌ம் தொட‌ர்பான ‌பிர‌ச்சனைகளையு‌ம், அதனை போ‌க்கு‌ம் எ‌ளிய இய‌ற்கை மரு‌த்துவ முறைகளையு‌ம் இ‌ப்போது பா‌ர்‌‌‌ப்போ‌ம்.

இஞ்சித் துண்டு தேனில் ஊறவைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் தெளிந்து ஆயுள் பெருகும்.

இஞ்சிச் சாறு, வெங்காயச் சாறு தேன் கலந்து குடித்தால் பித்த மயக்கம் தீரும்.

பழுத்த மாம்பழத்தை சாறு பிழிந்து அந்தச் சாறை அடுப்பில் லேசாக சூடேற்றி பின் ஆறவைத்து சாப்பிட்டு வந்தால் பித்தம் குறையும்.

எலுமிச்சை சாதம் வாரத்தில் மூன்று நாள் காலையில் சாப்பிட்டால் பித்தத்தை தணிக்கும்.

ரோஜாப்பூ கஷாயம் பால் சர்க்கரை கூட்டி சாப்பிட்டால் பித்த நீர் மலத்துடன் வெளியேறும்.
பொன்னாவரை வேர், சுக்கு, மிளகு, சீரகம் கஷாயம் குடித்தால் பித்தபாண்டு தீரும்.

விளாம்பழம் கிடைக்கும் காலங்களில் தினசரி ஒன்று சாப்பிட்டு வந்தால் பித்தத்தை குறைக்கலாம்.

அகத்திகீரை சாப்பிட்டு வந்தால் பித்தக் கோளாறுகள் அகலும்.

பனங்கிழங்கு சாப்பிட்டால் பித்தம் நீக்கி உடல் பலம் பெருகும்.

கமலா பழம் (ஆரஞ்சு) சாப்பிட்டால் உடல் உஷ்ணத்தை தணிக்கும்.

நத்தைசூரி விதையை வறுத்து பொடித்து காய்ச்சி கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வர கல்லடைப்பு தீரும்.

எலுமிச்சை இலையை மோரில் ஊறவைத்து அந்த மோரை உணவில் பயன்படுத்தி வந்தால் பித்த சூடு தணியும்.

அரச மரக் குச்சியை சிறு துண்டுகளாக வெட்டி சட்டியில் போட்டு காய்ச்சி ஆறவைத்து, அந்த நீரில் தேன் கலந்து குடித்தால் ரத்தத்தில் உள்ள பித்தம் குறையும்.

ஒரு தீராத உடல் வலி பிரச்சனைக்கான தீர்வு


பெரும்பாலான பெண்களுக்கும் ஆண்களுக்கும் உள்ள ஒரு தீராத உடல் வலி, இடுப்பு வலி. தரையில் அமர்ந்தால் எழ முடியாது, சற்று நேரம் நிற்கும் நிலை ஏற்பட்டால், இடுப்பு வலி வந்து, வேதனை தந்துவிடும். இடுப்பு வலி தரும் துன்பம், அத்தகையது.

பொதுவாக இக்காலப் பெண்கள், அதிக உயரம் கொண்ட மிதியடிகளை அணிகிறார்கள், இதன் காரணமாக, பின்னங்கால்கள் உயர்ந்தும், கால் விரல்கள் தாழ்ந்தும் இருப்பதால், நடக்கும்போது, பாதங்களில் மிக அதிகமான அழுத்தம் ஏற்பட்டு, அதனால், காலில் ஏற்படும் வலி, இடுப்பில் வந்து முடிகிறது.

இதுபோன்ற பாதிப்புகளை சரிசெய்ய, நல்லெண்ணையில் ஒன்றிரண்டு மிளகுகள் இட்டு காய்ச்சி, அதில் சிறிது பனை வெல்லம் சேர்த்து சாப்பிட்டு வர, இடுப்பு வலி பாதிப்புகள் விலகும்.

கொள்ளு குதிரைக்கு தீவனம் மட்டுமல்ல, மனிதருக்கு சிறந்த உடல் நல மருந்தும் கூட. இடுப்பு வலியை குணமாக்குவதில், சிறந்த பங்கு வகிக்கிறது, கொள்ளு.

அதிக உடல் எடையும் இடுப்பு வலிக்கு ஒரு காரணமாக இருக்கிறது, உணவுப் பழக்கங்களில் கட்டுப்பாடு இல்லாமல் உண்பது, அதிகமாக மது அருந்துவது போன்ற காரணங்களால், உடல் எடை சிலருக்கு அதிகரித்து விடும். இதன் காரணமாக உடலில் கொழுப்புச் சத்து மிகுந்து அது வெளியேற முடியாமல், உடலை வீங்கச்செய்யும். இதனால்கூட, சிலருக்கு இடுப்பு வலி வரலாம்.

அதிக எடை கொண்டவர்கள், உணவில் 'கொள்'ளை அவ்வப்போது சேர்த்துவர, உடலில் உள்ள கொழுப்பு மற்றும் நச்சுக்கள் கரைந்து வெளியேறி, உடல் பருமன் வற்றி, உடல் உறுதியாகும். இடுப்பு வலியும் விலகும்.

வாரமிருமுறை உணவில் கொள்ளு இரசம் செய்து சாப்பிட்டு வர, இடுப்பு வலியைப் போக்கலாம்.

இடுப்பு வலியைப் போக்க மேலும் சில வழிமுறைகள்:
வெகு சுலபமான ஒரு வழி, பச்சைக் கற்பூரத்தை புதினா இலைச் சாற்றில் கலந்து அந்த கலவையை, இடுப்பைச்சுற்றி தடவி வர, இடுப்பு வலி குறையும்.
ஓமத்தன்ணீரை சிறிது தேங்காயெண்ணையில் கலந்து சூடாக்கி, அதில் பச்சைக் கர்ப்பூரத்தை சேர்த்து, வலியுள்ள இடங்களில் தேய்த்து வர, இடுப்பு வலி விலகிவிடும்.

தழுதாழைக் குளியல்:
தழுதாழை என்பது சிறு செடி வகை, இவை வயல்வெளிகளில் புதர்களில் மண்டி இருக்கும், உடல் வலிகளுக்கு சிறந்த நிவாரணம் தருபவை, இந்த தழுதாழை இலைகள்.
இவற்றைக் கொதிக்கும் நீரில் ஊற வைத்து, அந்த நீரில் தினமும் குளித்து வர, இடுப்பு வலி மட்டுமன்றி, உடல் வலி அனைத்தும் தீர்ந்து விடும்.
மேலும், தழுதாழை இலைகளை பூண்டு, சிறிது இந்துப்பு சேர்த்து துவையல் போல அரைத்து, அந்த துவையலை சாதத்தில் கலந்து, நல்லெண்ணை ஊற்றிச் சாப்பிட்டு வர, இடுப்பு வலி விரைவில் விலகும்.

வாத நாராயண இலைகள்:
வாதநாராயணா மரத்தின் இலைகள், நுணா இலைகள் இவற்றைப் பறித்து, இலைகளை நீரில் இட்டு, உடல் பொறுக்கும் சூட்டில், அந்த நீரை உடலில் வலியுள்ள இடுப்புப்பகுதியில் மசாஜ் செய்வதுபோல, மென்மையாகத தடவி, ஒத்தடம் கொடுத்துவர, இடுப்பு வலிகள் தீரும்.

புளிய இலைகள்
புளிய இலை, நொச்சி இலை இவைகளைச் சேர்த்து, நீரில் கொதிக்க வைத்து, அந்த நீரில் ஒத்தடம் கொடுத்து வரலாம், அல்லது அந்த நீரில் குளித்தும் வரலாம், இதன் மூலம், இடுப்பு வலியின் வேதனை குறைந்து, படிப்படியாக, வலி விலகிவிடும்.

புதினா உப்பு :
விளக்கெண்ணையைக் காய்ச்சி, அதில் சிறிது புதினா உப்பைக் கலந்து, இடுப்பில் வலியுள்ள இடங்களில் தடவி வரலாம், இதன் மூலம், இடுப்பு வலி தீரும்.
பெண்களுக்கு மாதாந்திர விலக்கின் போது இடுப்பு வலி ஏற்படலாம், இதற்கு அசோகமரப் பட்டைகளைத் தூளாக்கி, அத்துடன் பெருங்காயத் தூளைக் கலந்து வெண்ணையில் வைத்து தினமும் இருவேளை சாப்பிட்டு வர, இடுப்பு வலி குறையும்.

முருங்கைப் பட்டை :
முருங்கைப் பட்டை சுக்கு இவற்றைத் தூளாக்கி, அதை எண்ணையில் கலந்து இடுப்பில் தடவி வந்தாலும், இடுப்பு வலி குணமடையும்.
எருக்கம் இலைகளை விளக்கெண்ணையில் தோய்த்து, அதை சூடாக்கி, இடுப்பில் வலியுள்ள இடங்களில் வைத்து வர, இடுப்பு வலி உடனே விலகி விடும்.
இதுபோன்ற எளிய முறைகளில் இடுப்பு வலி பாதிப்புகளை விலக்கி நலம் பெறலாம். சில வகை உடற்பயிற்சிகளும், ஆசனங்களும், இடுப்பு வலியைக் குறைக்கக் கூடியவை. ஆயினும், அவற்றை இடுப்பு வலி அதிகம் உள்ள சமயங்களில் செய்வது, மேலும் சிரமத்தை ஏற்படுத்தி விடலாம்.

வலி சற்று குறைந்ததும், முறையான பயிற்சியாளரிடம் சென்று பயிற்சி பெற, இடுப்பு வலிகளை நிரந்தரமாக உடலில் இருந்து, விரட்டி விடலாம்.
இதுபோன்ற முறைகளில், இடுப்பு வலி பாதிப்பை உடலில் இருந்து விலக்கி விட்டாலும், தொடர்ந்து சில வழிமுறைகளை, முறையாகக் கடைபிடித்து வர, இடுப்பு வலியை வரவிடாமல் தடுக்கலாம்.

எண்ணெய் குளியல் :
உடலில் சேரும் வாயுவை வெளியேற்றும் தன்மை, எண்ணைக் குளியலுக்கு உண்டு. முன்னோர்கள் வாராவாரம், உடலுக்கு எண்ணை தேய்த்துக் குளிக்கச் சொன்னதன் காரணம், உடலில் உள்ள சூட்டையும் வாயுவையும் வெளியேற்றவே. அதைச் செய்யத்தவறியதன் விளைவுதான், இன்றைய வியாதிகள்.
வாராவாரம் சனிக்கிழமைகளில், இளஞ்சூடாக காய்ச்சிய நல்லெண்ணையை உடலில் தடவி, தலையில் மயிர்க்கால்கள் வரை அழுத்தித்தேய்த்து, சற்று நேரம் ஊற வைத்து, சீயக்காய் அரப்பு தேய்த்துக் குளிக்க வேண்டும்.
எண்ணை தேய்த்துக் குளிக்கும் சமயங்களில், சோப்பு மற்றும் ஷாம்பூ கொண்டு குளிப்பது என்பது, சூடான டீயைப் பருகியபின், ஜில்லென்ற ஐஸ்க்ரீம் சாப்பிடுவதற்கு ஒப்பாகும். கிடைக்கும் பயனும் விலகி, உடல் நலம் கெடும்.
இப்படி குளித்து வருவதன் மூலம், இடுப்பு வலியை உடலில் இருந்து விரட்டலாம்.

உணவு :
மிதமான உணவை, அளவோடு சாப்பிட்டு உடல் நலத்தைப் பேணிவரவேண்டும். பயிற்சி இல்லாமல் அதிக எடையை தூக்குவது போன்ற செயல்கள், இடுப்பு வலியை, தேடி வாங்கிக்கொள்வதற்கு ஒப்பாகும்.

நீண்ட நேரம் உட்கார்ந்து பணிசெய்யும் சூழலில், சற்று நேரம் எழுந்து நின்று சிறிது நடப்பது, நலம் தரும். எப்போதும் நேராகவே, உட்கார்ந்திருக்க வேண்டும்.

செயற்கை இழை மெத்தைகளில் படுத்து உறங்காமல், இயற்கை இலவம் பஞ்சு மெத்தைகளில் உறங்கலாம், குப்புறப்படுக்காமல், ஒருக்கணித்துப் படுப்பது, நலம் தரும்.
தினமும் சற்று தொலைவு நடப்பது, எல்லா உடல் உறுப்புகளுக்கும் நன்மை தரும் ஒரு செயலாகும்.

துரித உணவு :
துரித உணவைக் கண்டிப்பாக விலக்குவது, நலம் தரும். அதைவிட நன்மை தரும் மற்றொரு செயல், குளிர்சாதனப் பெட்டியில், நெடுநாட்கள் வைத்துப் பயன்படுத்தி வரும் உணவுப் பொருட்களைத் தவிர்ப்பது.
உடலுக்கு நன்மை அளிக்கும் செயல்களை செய்து, உடலுக்கு பாதிப்பு தருபவைகளை விலக்கி விட்டால், இடுப்புவலி என்பது, எப்போதும் நெருங்காமல், நிம்மதியாக வாழ முடியும்

Friday, 20 April 2018

மூலிகை பொடிகளும் அதன் பயன்களும்



கீழாநெல்லி பொடி : மஞ்சள் காமாலை, சோகை நோய்க்கு சிறந்தது. முடக்கத்தான் பொடி : மூட்டு வலி, முழங்கால்வலி, வாததுக்கு நல்லது. கோரைகிழங்கு பொடி : தாதுபுஷ்டி, உடல் பொலிவு, சரும பாதுகாப்பிற்கு சிறந்தது.

குப்பைமேனி பொடி : சொறிசிரங்கு, தோல் வியாதிக்கு சிறந்தது.

பொன்னாங்கண்ணி பொடி : உடல் சூடு, கண்நோய்க்கும் சிறந்தது.

முருங்கைவிதை பொடி :
ஆண்மை சக்தி கூடும்.

லவங்கபட்டை பொடி : கொழுப்புசத்தை குறைக்கும். மூட்டுவலிக்கு சிறந்தது.

வாதநாராயணன் பொடி : பக்கவாதம், கை, கால் மூட்டு வலி நீங்கும்.

பாகற்காய் பவுடர் : குடல்வால் புழுக்கள் அழிக்கும். சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.

வாழைத்தண்டு பொடி : சிருநீரக கோளாறு, கல் அடைப்புக்கு மிகச் சிறந்தது.

மணத்தக்காளி பொடி : குடல் புண், வாய்புண், தொண்டைபுண் நீங்கும்.

சித்தரத்தை பொடி : சளி, இருமல், வாயு கோளாறுகளுக்கு நல்லது.

பொடுதலை பொடி : பேன் உதிரும், முடி உதிரிவதை தடுக்கும்.

சுக்கு பொடி : ஜீரண கோளாறுகளுக்கு சிறந்தது.

ஆடாதொடை பொடி : சுவாச கோளாறு, ஆஸ்துமாவிற்கு சிறந்தது.

கருஞ்சீரகப்பொடி : சக்கரை, குடல் புண் நீங்கும், நஞ்சு வெளிப்படும்.

வெட்டி வேர் பொடி : நீரில் கலந்து குடித்துவர சூடு குறையும், முகம் பொலிவு பெறும்.

மனித உடல்



* மனித உடலில் காணப்படும் தசைகளின் எண்ணிக்கை 639
* மனித மூளையின் மொத்தம் 1200 கோடி நரம்பு செல்கள் உள்ளன.
* மனிதன் இறந்த மூன்று நிமிடம் கழித்து மூளையின் இரத்த ஓட்டம் நின்று விடுகின்றது.
* மூளையில் உள்ள நியுரான்க்ளின் எண்ணிக்கை 1400
* மனிதனின் முதுகுத்தண்டின்எலும்புகள் 33
* மனித மூளையின் எடை 1.4 கிலோ
* உடலின் சாதாரண வெப்ப நிலை 98.4 டிகிரி செல்சியஸ்
* மனித உடலில் உள்ள ரத்தத்தின் சராசரி அளவு 5 லீட்டர
* உடலின் மெல்லிய சருமம் கண் இமை
* மனித உடலில் இள்ள குரோம்சோம்களின்எண்ணிக்கை 23 ஜோடி
* ஒரு மனித உடலில் கிடைக்கும் கொழுப்பில் இருந்து 10 சோப்புக்கட்டிகள் தயாரிக்கலாம்.
* மனிதனின் கண் நிமிடத்திற்கு25முறை மூடித்திறக்கிறது.
* நாம் ஒருவார்த்தை பேசும் போது நம் முகத்தில் 72 தசைகள் அசைகின்றன.
* மனித நாக்கின் நீளம் 10 செ. மீ 
* ஒருமனிதன் தன் வாழ்நாளில் சராசரியாக குடிக்கும் தண்ணீரின் அளவு 60,000 லீட்டர் .
* மனித உடலில் கெட்டியான பகுதி பற்களிலுள்ள இனாமல்.
* நமது கால் பாதங்களில் 2,50,000 வியர்வை சுரப்பிகள் உள்ளன.
* நாம் வாழ்நாளில் சராசரியாக சாப்பிடும் உணவின் மொத்த அளவு 30,000 கிலோ.
* நம் உடல் எடையில் 9 சதவிகிதம் இரத்தத்தினால் ஆனது. இந்த ரத்தத்தில் 91 சதவிகிதம் நீர்தான்.
* நம் உடல் முழுவதும் ரத்தம் ஒரு முறை சுற்ற 64 வினாடிகள் ஆகின்றன.
* நாம் குள்ளமாக இருப்பதற்கு காரணம் பிட்யூட்டரி சுரப்பி குறைவாக இருப்பது.
* நம் தசைகள் உண்டாக்கும் வெப்பம் ஒரு லிட்டர் நீரை ஒரு மணி நேரம் கொதிக்க வைக்கப் போதுமானது.
* நாம் வெளியேற்றும் சிறுநீரில் நீரின் அளவு 96 சதவிகிதமும், யூரியா 2 சதவிகிதமும், கழிவுப் பொருட்கள் 2 சதவிகிதமும் உள்ளன.
எலும்புகள் 
* நாம் பிறக்கும்போது சுமார் 300 எலும்புகளுடன் பிறந்து முழுவளார்ச்சியடைந்த பின் 206 எலும்புகளே இருக்கும்! நாளடைவில் ஒன்றோடொன்று இணைவதால் சுமார் 94 எலும்புகள் குறைகின்றன! 
* நமக்கு நாள்தோறும் 16 கிலோ காற்று சுவாசிக்கத் தேவைப்படுகிறது.
தோல்உடலின் மிகப் பெரிய பகுதியாக விளங்குவது தோல் பகுதியாகும். 
வளர்ந்த ஒரு மனித உடலில் சுமார் 2 சதுர மீட்டர் பரப்புள்ள தோல் பகுதி, உடலைநீரிலிலிருந்தும் வெப்பத்திலிருந்தும் பாதுகாக்கும் போர்வையாக விளங்குகிறது..
ஈரல்நமது உடலில் உள்ள ஈரல் (liver) 500 வகையான வேலைகளை செய்கிறது. மிகவும்சிக்கல்நிறைந்த, பெருமளவு செயல்களைச் செய்யும் உறுப்பாக மனித உடலில் விளங்குவது ஈரல் (liver) ஆகும். 
ஈரல் தசைகளில் உள்ள செல்கள் பாதிக்கப்பட்டு அவை சிதைவடைவதாலும் தாறுமாறான வளர்ச்சியாலும் ஈரல் புற்றுநோய் ஏற்படுகிறது.
புகை பிடிப்பதானது உடல்நலத்துக்குப் பெரிதும் தீங்குவிளைவிக்கும் செயலாகும். நுரை ஈரல் புற்று நோய், 
இதய நோய் உள்ளிட்ட பல நோய்களுக்கு இது ஊற்று மூலமாகும். தற்போது உலகில் சுமார் 110 கோடி பேர் புகைபிடிக்கின்றனர். இதன் விளைவாக, ஆண்டுதோறும், 35 லட்சம் பேர் மரணமடைகின்றனர்.
* மனித உடலில் உள்ள மிகப் பெரிய சுரப்பி கல்லீரல்தான்.
மனித நுரையீரலில் உள்ள நுண் காற்றுப் பைகளின் எண்ணிக்கை 300 மில்லியன். 
ஒவ்வொரு நுண் காற்றுப்பையும் 0.2 மில்லி மீட்டர் விட்ட அளவு கொண்டதுநா‌க்கும‌னித உட‌லி‌ல் சதை அழு‌த்த‌ம் அ‌திக‌‌ம் உ‌ள்ள பகு‌தி நா‌க்கு. 
ஒவ்வொரு மனிதனும் வாழ்நாளில் நடக்கும் கணக்கை பார்த்தால் அவன் பூமியை இரண்டு முறை சுற்றி வந்ததிற்கு சமம்.
நாம் தும்மும் போது நமது மூக்கின் வழியாக செல்லும் காற்றின் வேகம் சுமார் 150 கிலோமிட்டர்கள்.
அதுபோல தும்மும் போது கண்டிப்பாக கண்களை மூடிவிடுவோம்.
* 900 பெ‌‌ன்சில்களை தயாரிக்கும் அளவிற்கு ம‌னித உட‌லி‌ல் கார்பன் சத்து இருக்கிறது.
க‌ண் தான‌த்‌தி‌ல் கண்களில் விழித்திரை விழித்திரை நோயால் பார்வையிழந்த இரு நபர்களுக்கு பொரு‌த்த‌ப்படு‌கி‌ன்றன.
விரல் நகம்மனித உடலில் மிகவும் பலமானது விரல் நகங்களே. 
அதில் கெராடின் சத்து உள்ளது, இதுகாண்டாமிருகத்தின் கொம்புகளில் காணப்படுவது, 
மரணத்திற்குப்பிறகும் கூட நகம்ஒன்றுமே ஆகாது.

புதிதாக கல்யாணம் கட்டிக்கொண்ட தன் மகனுக்கு அம்மா கூறும் அறிவுரை


1. எந்த சமயத்திலும் மனைவியை அம்மா கூட ஒப்பிடவே கூடாது....!!

மகனே...மறந்து கூட என்னை உன் மனைவியோட ஒப்பிட்டுப் பார்க்காதே...

உன் அம்மாவுக்கு குடும்ப வாழ்க்கையில், 20 ஆண்டு கால அனுபவம் இருக்கு.
ஆனா உன் மனைவி உன்னை மாதிரி தான். இந்த வாழ்க்கைக்கு புதுசு.

உன்னை நான் வளர்த்த மாதிரி தான். அவங்க அம்மாவும் அவளை பார்த்துப் பார்த்து வளர்த்து அனுப்பியிருக்காங்க.

அவளுக்கு கொஞ்சம் ஆண்டுகள் தேவைப்படும்.
அதுக்கப்புறம், உன் குழந்தைக்கு அருமையான அம்மாவாக அவள் இருப்பாள்.

2. மனைவி உனக்கு அம்மா இல்லை, தோழி..!!

மகனே, உன் மனைவி உன்னுடன் வாழ்க்கைய பகிர்ந்துகொள்ள வந்துள்ள தோழி. அம்மா இல்லை.

உன் அம்மாவுக்கு உன்னை கவனிக்கறது மட்டும் தான் வேலை.
ஆனா உனக்கு, உன் மனைவிய நீ நன்றாக கவனிக்கிறது முக்கியம்.

நீங்க ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் கவனிச்சு அன்பு செலுத்தறது மிக மிக முக்கியம்டா.

3.மதிக்கப்படவேண்டியவள் மனைவி...!!

மகனே , உன் வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வுகள், நல்லது கெட்டது அனைத்திலும் உன் மனைவி உடனிருந்து பங்கு கொள்ளப்போகிறவள்.

அவளை மதிக்கவேண்டும்.
உன் ஒவ்வொரு முன்னேற்றப்படியிலும் அவள் பங்கு உள்ளது.

அவள் கருத்துகளைக் கேட்டு, முன்னுரிமை கொடுத்து வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருடா.!

4. புகுந்த வீடு வந்த மனைவியை இயல்பாக உணர வைக்க
உதவி செய்யணும்.

பிறந்து , வளர்ந்து மகிழ்ந்திருந்த பிறந்த வீட்டை விட்டு,
நம் பொருட்டு புகுந்த வீட்டுக்கு வந்திருக்கா உன் மனைவி...

அவளை இயல்பா இருக்க வைக்க நீதான் உதவணும்..
சின்னச் சின்ன விஷயங்கள் கூட அவளுக்கு சங்கடத்தைத் தரலாம்..

அதை நீதான் கவனிச்சு அவள் பிறந்த வீட்டில் இருப்பதைப் போல உணர வைக்கணும்டா...!

5. எப்பவும் மனைவிய காதலிக்கவேணும்

காதலிக்க வயசு ஒரு விஷயமே இல்லடா.. எப்பவும் உன் மனைவியை..சந்தோஷமா வச்சுக்கோ..

சின்னச்சின்ன சர்ப்ரைஸிங்கான பரிசுகள், வெளிய அழைச்சுட்டுப் போறது, அவள் டிரஸ்ஸிங்கை சிலாகிச்சுப் பேசறது, சந்தோஷமா வாய்விட்டு சிரிக்கறது மாதிரியான விஷயங்கள் உங்க ரெண்டுபேரையும்...எப்பவும்இளமையா உணர வைக்கும்...!!

ஐந்து பாய்ண்ட்டுகளையும் சேர்த்து ஒரே பாய்ண்ட்டா சொல்றேன்டா.....!!

உங்க அப்பா(நல்ல அப்பா மட்டும்) என்னை எப்படி நடத்தறாரோ....?
அது போல நீயும் உன் மனைவியை...கௌரவமா மதிச்சுக் குடும்பம் நடத்துடா மகனே..!!

உனக்கும் மருமகளா வந்திருக்கும் மகளுக்கும் என் அன்பும் வாழ்த்துகளும்... ஆசீர்வாதங்களும்...

தொப்பையைக் குறைக்க



2 டேபிள் ஸ்பூன் சீரகத்தை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை கொதிக்க வைத்து, வடிகட்டி, அதில் சிறிது எலுமிச்சையை பிழிந்து, இரண்டு வாரத்திற்கு தினமும் காலையில் குடித்து வர, விரைவில் உடல் எடை குறைந்திருப்பதைக் காணலாம்.

*•• சீரகப் பொடி மற்றும் தயிர்*

மற்றொரு வழி சிறிது தயிரில் 1 டீஸ்பூன் சீரகப் பொடி சேர்த்து கலந்து தினமும் உட்கொண்டு வந்தால், உடல் எடையைக் குறைக்கலாம்.

*•• சீரகப் பொடி மற்றும் தேன்*

1/2 டீஸ்பூன் சீரகப் பொடியை நீரில் சேர்த்து, அதோடு தேன் கலந்து தினமும் குடித்து வருவதன் மூலமும் உடலில் உள்ள கொழுப்புக்களைக் கரைத்து உடல் எடையைக் குறைக்கலாம்.

*•• சூப்புடன் சீரகப் பொடி*

உடல் எடையைக் குறைக்க நினைப்போர் தினமும் சூப்புடன் சீரகப் பொடியை ஒரு டீஸ்பூன் சேர்த்து கலந்து குடித்து வர, உடல் எடை குறையும்.

*•• எடையைக் குறைக்கும் சீரக ரெசிபி*

எலுமிச்சை மற்றும் இஞ்சி எடையைக் குறைக்க உதவும் பொருட்களில் முதன்மையானவை.

அதிலும் சீரகத்துடன் சேர்ந்தால், இதன் சக்தி அதிகமாகும். அதற்கு ஒரு பாத்திரத்தில் கேரட் மற்றும் பிடித்த வேறு காய்கறிகளை சேர்த்து நன்கு வேக வைத்துக் கொள்ளவும். பின் அந்த காய்கறிகளில் இஞ்சியை துருவிப் போட்டு, எலுமிச்சை சாறு, சீரகப் பொடி சேர்த்து கலந்து, இரவு நேரத்தில் உட்கொண்டு வர, உங்கள் எடை குறைவதை நன்கு காணலாம்.

*தொப்பையைக் குறைக்கும் சீரகம்*

சீரகம் உடலில் கெட்ட கொழுப்புக்கள் சேர்வதைத் தடுத்து, அதிகப்படியான கலோரிகளை எரிக்கும். ஏனெனில் இதில் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்களும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் ஏராளமாக உள்ளது. இதனால் இவற்றை அன்றாட உணவில் எடுத்து வந்தால், கொழுப்புக்களால் அதிகரித்த தொப்பையைக் குறைக்கலாம்.

*•• சீரகத்தின் வேறுசில நன்மைகள்*

மாரடைப்பைத் தடுப்பது, ஞாபக சக்தியை அதிகரிப்பது, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்துவது, இரத்த சோகையை சரிசெய்வது, செரிமானத்தை மேம்படுத்துவது, வாய்வு தொல்லையை நீக்குவது போன்றவற்றை குணமாக்கும் சக்தி சீரகத்திற்கு உண்டு...

Wednesday, 18 April 2018

மனைவி













இவ்வுலகில் இறைவன் உங்களுக்கு கொடுத்த பெரிய வரம் உங்கள் கணவனே என்பதனை மறந்து விடாதீர்கள்.

நீங்கள் வாழப்போகும் இடம் புதிய சூழலாக இருப்பின் அதற்கு அமைய உங்களை மாற்றிக் கொள்ளுங்கள்.

கிடைத்ததை வைத்துக் கொண்டு மகிழ்வாக வாழப் பழகுங்கள்.

உங்கள் கணவரே இவ்வுலகில் மிகவும் அழகானவர், பண்பானவர், கண்கண்ட தெய்வம் என்பதனை மனதில் பதித்துக் கொள்ளுங்கள். 

பிறந்த வீட்டாரைப் போல், புகுந்த வீட்டாரையும் மதித்து, பணிந்து நடக்கத் தவறாதீர்கள்.

கணவனுக்கு விருப்பமில்லாத எதையும் செய்யத் துணியாதீர்கள்.

கணவனுக்கு பிடித்தமான உணவுகளை உங்களுக்கு பிடிக்காவிட்டாலும் சமைத்து பரிமாறத் தவறாதீர்கள்.

கணவனுக்கு விருப்பம் இல்லாதவிடத்து அடம்பிடித்து வேலைக்குப் போக துணியாதீர்கள்.

 கிழமையில் ஒருநாளைக்காவது அப்பா, அம்மா, மாமா, மாமியயைக் கண்டு சுகதுக்கம் கேட்கத் தவறாதீர்கள்.

எதுவித காரணம் கொண்டும், புகுந்த வீட்டு குறை குற்றங்களை உற்ற நண்பிகளிடத்தோ, அல்லது உங்கள் பெற்றோரிடத்தோ அல்லது, உறவுகளிடத்தோ கூறாதீர்கள். 

 கணவன் வீட்டாரை பெருமையாக பேசிக்கொள்ளுங்கள். நீங்கள் அங்கு விவாகம் செய்ததால் உங்களுக்கு மதிப்பும், மரியாதையும் கூடிவிட்டதாக பெருமைப் பட்டுக் கொள்ளுங்கள்.

 உங்கள் அப்பா, அம்மா, உறவினரின் மரியாதையை பேணுவதைப்போல் உங்கள் மாமா, மாமி உறவினர்களின் மரியாதையை பேணுங்கள்

 உங்கள் மாமா, மாமி, உறவினர்களைப் பற்றி உங்கள் அப்பா, அம்மா, உறவினர்கள் உங்களுக்கு கூறுவதை உங்கள் கணவனுக்கு கோள்மூட்டாதீர்கள்

 உங்கள் கணவரை விட நீங்கள் கல்வித் தகமை கூடியவராக அல்லது பதவியில் உயர்ந்தவராக இருந்தாலும்கூட உங்கள் தகமையைப் பற்றி எந்த ஒரு காரணம் கொண்டும் யாரிடமும் கூறாதீர்கள்.

 உங்கள் கணவனிடத்து உங்கள் அன்பையோ, அழகையோ மறைக்காதீர்கள்.

உங்கள் கணவனிடத்து, எதையும் மறைக்காதீர்கள். பொய் சொல்லுவதையோ, உண்மையை மறைப்பதையோ, திருடுவதையோ தவிர்த்துக் கொள்ளுங்கள்.

 உங்கள் கணவனுக்கு ஆலோசனை கூறுவதில் நல்ல மந்திரியாகவும், உணவு தயாரிப்பதில் அன்னையைப் போலவும், உபசரிப்பதில் நல்ல சேவகியாகவும், தாம்பத்திய உறவில் தாசிப் பெண்போலவும் நடக்க பழகிக் கொள்ளுங்கள்

 பணியிலிருந்தோ அல்லது பயணத்திலிருந்தோ கணவன் வீட்டிற்கு வரும்போது அவரை நல்ல வார்த்தைகள் கூறி வாழ்த்துக்களுடன் வரவேற்று உபசரியுங்கள்.

 முகமலர்ச்சியுடன் கணவரை எதிர்கொள்ளுங்கள்.

 சந்தோஷமான செய்தியை முதலில் தெரிவியுங்கள், கவலையான செய்தி இருந்தால் உங்கள் கணவர் அமைதி அடையும் வரை பிற்படுத்தி வையுங்கள்.

அன்பான, அரவணைப்பான வார்த்தைகளை உங்கள் கணவரிடத்தில் பயன்படுத்துங்கள் (வேலையிலோ அல்லது வரும் வழியிலோ ஏதாவது பிரச்சினைகளைச் சந்தித்திருக்கலாம்).

கணவருக்காக அக்கறையுடன் தயாரிக்கப்பட்ட உணவை சரியான நேரத்திற்குள் பரிமாறுங்கள் (கணவருடன் சேர்ந்து உண்ணும் வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்).

 உங்கள் கணவரிடம் மென்மையான குரலில் அழகாக, அன்பாக பேசுங்கள். மற்ற ஆண்களுக்கு முன்னால் இவ்வாறு குழைந்து பேசக் கூடாது என்பதை மறந்துவிடாதீகள். 

உங்கள் கணவரிடத்தில் உம்!! இல்லை!! என்று சொல்லி அவரின் பேச்சை உதாசீனப்படுத்தாதீர்கள்.

வீட்டிற்கு கணவன் வருவதற்கு முன்னால் உங்களை அழகுபடுத்திக் கொள்ளுங்கள். (அழுக்கான ஆடையுடன் முகத்தில் எண்ணெய் வடிந்திருக்கும் நிலையில் உங்கள் கணவரிடம் செல்லாதீர்கள்)

 கணவனின் துணிவகைகளை துவைத்து அவரை அழகான ஆடை அணிந்து அழகு பாருங்கள்.

 எந்தப் பெண் தன் கணவன் தன்னைப் பார்க்கும் போது அவனை மகிழ்விப்பாளோ, அவன் கட்டளையிட்டால் அவனுக்கு கீழ்ப்படிந்து நடப்பாளோ, தன் விஷயத்திலும், தன்னுடைய பொருளிலும் தன் கணவனுக்கு விருப்பமில்லாத எந்தப் போக்கையும் மேற்கொள்ளமாட்டாளோ அத்தகையவளே, அனைவரையும் விடச்சிறந்தவள்”. 

உங்களுடைய கணவன் ஏழையாகவோ அல்லது சாதாரண வேலையிலோ இருந்தால் அதற்காக வாழ்க்கையை வெறுத்துவிடாதீர்கள். (பிறரின் கணவர்கள் போல் நீங்கள் இல்லையே என ஒப்புமையும் செய்யாதீர்கள். அது உங்கள் கணவருக்கு வெறுப்பை உருவாக்கும்).

ஏழைகள், உடல் ஆரோக்கியம் இல்லாதவர்கள், ஊனமுற்றோர்கள் போன்ற நம் நிலைக்கு கீழாக உள்ளவர்களை பார்த்தேனும் இறைவன் நம்மை இந்த நிலைக்கு உயர்த்தி வைத்திருப்பதை நினைத்து சந்தோஷப்படுங்கள்.

தன்னம்பிக்கையும் மற்றும் கணவருக்கு நீங்கள் அளிக்கும் ஊக்கமும்தான் உங்கள் வாழ்க்கையின் முன்னேற்றம் என்பதை மறந்துவிடாதீர்கள். உலக விஷயத்திலேயே மூழ்கிவிடாதீகள்.

உங்கள் செலவை குறைத்து அதனை தர்மம் செய்யவும், ஏழைகள் மற்றும் தேவைப்படும் மக்களுக்கு கொடுக்கவும் ஆர்வம் காட்டுங்கள்.

அவசியம் இல்லாத பொருள்களை வாங்கித் தரும்படி கேட்டு கணவனை நச்சரிக்காதீர்கள். (உங்கள் பெற்றோர்கள் வீட்டில் கிடைத்த மாதிரி கணவனிடம் எதிர்பார்க்காதீர்கள். உங்கள் கணவனின் வசதிக்கேற்ப உங்களை மாற்றிக்கொள்ளுங்கள்).

 செல்வமும், பிள்ளைகளும் இவ்வுலக வாழ்வின் உங்கள் சொத்துக்களாகும். அவற்றைப் பேணி நல்லமுறையில் வளர்த்தெடுக்க உங்கள் முழு முயற்சிகளையும் முன்னெடுங்கள்.

உங்கள் கணவர் உங்களுக்கு செய்யும் உதவிகளுக்கு உடனுக்குடன் நன்றி செலுத்தும்போது உங்கள் கணவரை மேலும் உதவி செய்பவராகவும் உங்களை பலவழிகளில் சந்தோஷப் படுத்துபவராகவும் காண்பீர்கள்.

 உங்கள் கணவரின் நன்றியை நீங்கள் மறக்கும்போது, உங்கள் கணவர் "ஏன் இவளுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று தன்னைத்தானே நொந்து கொள்வார்”. 

 உங்கள் கணவர் ஏதேனும் விபத்தின் காரணமாக ஊனம் ஏற்பட்டுவிட்டால் அல்லது வியாபாரத்தில் நஷ்டமடைந்துவிட்டால் உங்கள் சொத்தின் மூலமாகவோ கணவனுக்கு 'தோள்” கொடுங்கள்.

 உங்கள் கணவரை எது கோபப்படுத்துமோ அதை தவிர்த்துவிடுங்கள். அப்படி தவிர்க்க முடியாத சூழ்நிலையில் சமாதானப் படுத்துங்கள்.

 நீங்கள் பிழை செய்திருந்தால் மன்னிப்புக் கேளுங்கள். (கோபமான சூழ்நிலையில் ஒருவருக்கொருவர் வீசிக் கொள்ளும் ‘உப்பு சப்பு” பெறாத வார்த்தைகள்தான் விவாகரத்தில் முடிகிறது என்பதை எல்லோருமே அறிவார்கள்).

 கணவர் தவறு செய்திருந்தால் அதனை நல்ல சூழ்நிலை பார்த்து சொல்ல முயற்சி செய்யுங்கள். அல்லது அவருடைய கோபம் குறையும் வரை அமைதியாகக் காத்திருந்து சாந்தமான முறையில் அவருடன் பேச்சுவார்த்தை நடத்துங்கள்.

வெளி விஷயத்தின் காரணமாக கோபம் இருந்தால், கோபம் குறையும் வரை காத்திருந்து பிறகு அவரை சமாதானப்படுத்த முயற்சி செய்யுங்கள். (உதாரணமாக வேலையில் பிரச்சினை, மற்றவர்களால் அவமானப் படுத்தப்பட்டிருத்தல்)

♥அவருடைய பிரச்சினைகளை அறிந்து கொள்ளும் பொருட்டு அந்த கோபமான நிலையிலேயே பற்பல கேள்விகளை எழுப்பி தொந்தரவு செய்யாதீர்கள்.

*♥ "என்ன நடந்தது? என்று நீங்கள் சொல்லித்தான் ஆகவேண்டும்;” என்றோ அல்லது எது உங்களை கோபப்படுத்தியது? என்று எனக்கு தெரிந்துதான் ஆகவேண்டும்! என்றோ அல்லது நீங்கள் எதையோ மறைக்கிறீர்கள்! அதைத் தெரிந்து கொள்வதற்கு எனக்கு முழு உரிமை இருக்கின்றது! என்றோ கேள்வி கணைகளை எழுப்பி எரிகிற வீட்டில் எண்ணெய்யை ஊற்றாதீர்கள்.

♥ நல்லொழுக்கமுள்ள மனைவிமார்கள் (தங்கள் கணவனிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். (தங்கள் கணவர்) இல்லாத சமயத்தில் அவர்களின் (செல்வம், உடைமை, மானம், மரியாதை) அனைத்தையும் பாதுகாப்பவர்களாகவும் இருப்பார்கள். (தங்கள் கணவருக்கு மாறு செய்ய மாட்டார்கள்). 

♥ தடுக்கப்பட்ட நட்புகளைவிட்டும் உங்களை காத்துக் கொள்ளுங்கள்.

♥ குடும்பத்தின் ரகசியங்களை மற்றவரிடம் சொல்லாதீர்கள். முக்கியமாக தாம்பத்தியம் மற்றும் உங்கள் கணவர் பிறரிடம் சொல்ல விரும்பாத விஷயங்கள்)

♥ வீட்டில் உள்ள பொருள்களையும் குழந்தைகளையும் பேணிப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

♥ கணவனுடைய பணத்தையும் சொத்துக்களையும் பாதுகாத்து வையுங்கள்.

♥ கணவனுடைய அனுமதியின்றி வீட்டைவிட்டு வெளியேறாதீர்கள்.

♥ உங்கள் கணவருக்குப் பிடிக்காதவர்களை வீட்டிற்குள் வர அனுமதிக்காதீர்கள்.

♥கணவர் வீட்டில் இருக்கும் நேரத்திலும், இல்லாத நேரத்திலும் அவருடைய பெற்றோர்களுடனும் உறவினர்களுடனும் நல்லபடியாக நடந்து கொள்ளுங்கள்.

♥ கஷ்டங்களை எதிர்கொள்ளும்போது பொறுமையுடன் இருங்கள்.

♥ வாழ்க்கையில் இழப்புகள் சோதனைகள் (உங்களுக்கு, உங்கள் கணவருக்கு, குழந்தைகளுக்கு, உறவினர்களுக்கு, சொத்துக்களுக்கு…) ஏற்படும்போதும் இறைவனின் வேண்டிக்கொள்ளுங்கள்.

♥உங்களிடம் உங்கள் கணவர் மோசமாக நடந்து கொண்டால்கூட அவரிடம் நீங்கள் நல்ல முறையாக நடந்து பாடம் புகட்டுங்கள். (இவள் நம்மீது இவ்வளவு அன்பு பொழியும் போது நாம் ஏன் இவளிடம் நல்ல முறையாக நடந்தக் கொள்ளக்கூடாது என்று நினைத்து வருந்தி தன் தவறுகளைத் திருத்திக் கொள்வார்).

♥உங்கள் கணவருடன் ஒத்துழையுங்கள். கடமையான மற்றும் உபரியான வணக்கங்களை அவருக்கு நினைவுபடுத்துங்கள்.

♥ உங்களுடைய அன்புக் கணவருக்கு ஒத்தாசையாக இருந்து அவரை ஊக்கப்படுத்தி, அவருக்குத் தேவையான நல்ல கருத்துகளைச் சொல்லி அவரின் துன்பங்களில் பங்கெடுத்துக் கொள்ளுங்கள்.

♥ வீட்டை சுத்தமாகவும், அழகாகவும் நேர்த்தியாகவும் வைத்துக் கொள்ளுங்கள்.

♥ பொழுது போகாத நேரங்களில் வீட்டுப்பொருள்களை சீர்படுத்தி வையுங்கள், உங்கள் கைகளால் தயாரித்த அலங்காரப் பொருள்களைக் கொண்டு வீட்டை அழகுபடுத்துங்கள். (உங்கள் கணவர் மிக சந்தோஷம் அடைவார்).

♥ தேர்ந்தெடுக்கப்பட்ட தரமான உணவுகளையும் புதிய வகையான உணவுகளையும் தயாரித்து உங்கள் கணவருக்கும் குழந்தைகளுக்கும் கொடுங்கள்.

♥ அனைத்து வீட்டு வேலைகளையும் நேர்த்தியாகச் செய்ய கற்றுக்கொள்ளுங்கள்.

♥ பணத்தை கணவனுடைய அனுமதி இல்லாமல் செலவழிக்காதீர்கள். (அது தர்மமாக இருந்தாலும் சரி. ஆனால், உங்கள் கணவர் இதற்கு உடன்படுவார் என்பது தெரிந்தால் செய்யலாம்)

♥ வீடு, வாகனம் போன்றவற்ளை கணவன் வீட்டில் இல்லாத போது பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

♥ குழந்தைகளை சுத்தப்படுத்தி நல்ல ஆடைகளை அணிவித்து அழகூட்டுங்கள். குழந்தைகளுடைய பாதுகாப்பு மற்றும் கல்வி விஷயங்களில் பேணி நடந்து நல்ல பண்புகளை புகட்டுங்கள்.

♥ கெட்ட பெண்களை அல்லது நடிகைகளைப் பின்பற்றுவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

♥கணவனுக்கு சமயோசித முடிவுகள் தேவையானபோது சொல்லிக் கொடுங்கள். (முதலில் அதற்கான அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்)

♥ கணவனுடைய திருப்தியைப் பெற்ற நிலையில் எப்பொழுதுமே இருக்க முயற்சி செய்யுங்கள்.

♥ ஒரு பெண் தன் கணவனது திருப்தியைப் பெற்ற நிலையில் மரணித்துவிட்டால் அவள் சொர்க்கத்தில் நுழைவாள். தீர்க்க சுமங்கலியாவாள்

நல்ல மனைவி இல்லத்தையும் சுவர்க்கமாக்குவாள். துர்நடத்தையுள்ள மனைவி இல்லத்தையும் சுடுகாடு ஆக்குவாள்